Thursday, May 9, 2013


ராமதாஸ் காதல் திருமணத்தை மட்டு எதிர்க்கவில்லை. வெளிப்படையாக தலித் அல்லாதவர்கள் கூட்டமைப்பை ஏற்படுத்தி தலித் மக்களுக்கு எதிராக பேசினார். வன்னியர்களை கூட்டி வன்னியர் சங்கம் மாநாடு நடத்தி வன்னியர்கள் தர்மபுரியில் செய்ததை நியாயப்படுத்தினார். அது போல சிங்கள மக்களுக்கு ஆதரவாக தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக ராஜபக்ஷே பேசியது ஏதாவது இருந்தால் கோடிட்டு காட்ட முடியுமா? ஒரு நாட்டின் ஜனாதிபதியா நாட்டின் பாதுகாப்புக்காக தவிர்க்க முடியாத காரணத்தாலேயே தீவிரவாதத்தை ஒழிக்க ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டி இருந்தது என்றே சொல்கிறார். புலிகளின் தீவிரவாதம் ஒழிந்த பிறகு சிங்களம் தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையாக இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கிறோம் என்றே கூறுகிறார். புலிகளை எதிர்த்த அவர் தமிழ் பேசும் கருணா டக்லஸ் போன்றவர்களிடம் ஒற்றுமையாகத்தானே இருக்கிறார். குறைந்தது ராமதாஸ் அப்படி ஒரு சில தலித் தலைவர்களையோ இயக்கங்களையோ தனது கூட்டமைப்பில் வைத்து இருக்கலாமே ஆனால் அவர் தலித் அல்லாதார் அமைப்பை ஏற்படுத்தி வன்கொடுமை சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று இருக்கும் பாது காப்பையும் பிடுங்கத்தானே வழி செய்து கொண்டு இருக்கிறார். இலங்கையில் தமிழ் புலிகள் தீவிரவாதம் என்றால் தமிழ் நாட்டில் வன்னிய புலிகள் தீவரவாத கூட்டம் அதை ஒழிக்க ஜெயா என்ன செய்கிறார்களோ அதைத்தானே ராஜபக்ஷே இலங்கையில் செய்தார். அப்புறம் எப்புடி ராமதாசும் ராஜபக்சேவும் ஒண்ணுன்னு சொல்றீங்க? 

No comments:

Post a Comment