Sunday, May 26, 2013

#அவருடைய (அண்ணல் அம்பேத்கர்) சாதனைக் கடவுளால்தான் முடியும் நம்மால் முடியாது என்ற எண்ணம் வரும். அவருடைக் கொள்கைகள் காற்றில் பறக்கும். இலங்கைப் புத்தரைப்போல் ஆகிவிடுவார்.#

பிறப்பினால் யாரும் கடவுள் ஆக முடியாது. செயற்கரிய செய்கைகளை செய்வது மூலமே ஒருவர் கடவுளாக முடியும் என்று செய்து கட்டியவர்கள் தான் புத்தரும் போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கரும். அவர்களை கடவுள் என்று சொலுவது அவர்கள் கடவுள்கள் அதனால் தான் அப்படி பட்ட செயல்களை அவர்களால் செய்ய முடிந்தது என்று அர்த்தம் இல்லை. அவர்கள் செயற்கரிய செயல்களை செய்தார்கள் அதனால் தான் கடவுள் ஆனார்கள் என்று அர்த்த. நாம் கடவுள் இல்லை அதனால் அவர்களை போல செயற்க்கரிய செயல்களை செய்ய முடியாது என்பது தம்மம் அல்ல. நாமும் அப்படிப்பட்ட செயற்கரிய செயல்களை செய்வது மெல்லாம் போதசத்துவர் புத்தர் போன்று கடவுள் ஆகலாம் என்று தம்மம் சொல்கிறது. கிருஷ்ணன் என்பவர் படைப்புக்கடவுளின் அவதாரம். நபி என்பவர் கடவுளின் தூதுவர் ஏசு என்பவர் கடவுளின் குமாரன், இவர்கள் இருவரும் பிறக்கும்போதே படைப்புக்கடவுளின் சக்தியை தன்னுள் கொண்டவர். போதிசதுவர்களும் புத்தர்களும் அப்படி இல்லை. நம்மை போல சாதாரண மனிதர்களாக பிறந்தே பின்னர் கடவுள் ஆகிறார்கள். கடவுள் எனும் தமிழ் வார்த்தைக்கு "படைத்தவன்" என்று அர்த்தம் இல்லை. எங்கே உதயகுமாரை கூப்பிடுங்கள் அவர் கடவுள் எனும் தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் சொல்வார். 

No comments:

Post a Comment