Friday, May 31, 2013

உங்களுக்கு தமிழன் திராவிடன் எனும் அடையாளம் முக்கியம்னா அதை விட முக்கியம் எங்களுக்கு பறையன் எனும் அடையாளம்.  பறையர்களில் எவரேனும் தன்னை இந்து என்று நினைத்துக்கொண்டு வருண தர்மத்தை ஆதரித்து நான் உயர்ந்தவன் அவன் என்னை விட கீழானவன் என்று நினைப்பான் எனில் அவன் பறையர்களின் வரலாறு தெரியாத முட்டாள். பறையர்கள் பூர்வீக பவுத்தர்கள் எனக்கு மேலே எவரும் இல்லை எமக்கு கீழே எவரும் இல்லை என்று வாழ்ந்தவர்கள் வாழ்பவர்கள்.  பறையர்களுக்கு இடையில் ஏற்ப்பட்டுள்ள உயர்தவன் தாழ்ந்தவன் எனும்  ஜாதிய உணர்வுக்கு காரணம் அவர்கள்  தாம்  பூர்வீக பவுத்தர்கள்  சாக்கியர்கள்  என்பதை மறந்து தம்மை "இந்து" "திராவுடன்" "தமிழன்" என்று நம்பிக்கொண்டு இருப்பதால்தான். நாங்கள் அந்த நம்பிக்கையை சேரியில் ஒழித்து புத்த தம்மத்தை மீட்டெடுக்கும் பணியில் உள்ளோம். கோயில் நுழைவு போராட்டம் நடத்தி எங்களை இந்துவாக்க்கி ஜாதி ஆக்கி திராவுடன் தமிழன் எனும் சூத்திர பட்டங்கள் கொடுத்து அடிமையாக்கும் சூத்திர திராவிட ராமசாமியிசம் எங்களுக்கு வேண்டாம். 

அந்த யோக்கியம் எல்லாம் எங்களுக்கு தெரியும். இதை சூத்திரர் கூட்டத்திடம் சொல்லி அவர்களுடை சூத்திர பட்டத்தை விட இந்து மத சிறையில் இருந்து வெளியே வர சொல்லுங்கள்.

நீங்க தமிழரா? என்ன ஜாதின்னு சொல்லுங்க? அப்பத்தான் நீங்க ஆதி தமிழரா? பாதி தமிழரா? உண்மையான தமிழரா? ன்னு சொல்ல முடியும். 

மொழியில்லாமல் மனுசன் வாழ முடியும். மொழியா அங்கீகாரம் பெறாமல் வெறும் பேச்சை பேசிக்கொண்டு இருக்கும் பல கோடி மக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

சூத்திர பட்டம் போகாது என்று அண்ணல் எப்போது யாருக்கு சொன்னார். எதுக்கு அண்ணலை கொண்டு வந்து ராமசாமிக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். 

நான் ஒண்ணுமே கிழிக்க போவது இல்லை. அப்புறம் எதுக்கு என்னை ஒரு பொருட்டா நினைத்து உங்கள் வேலையை எல்லாம் வுட்டுட்டு கமென்ட்டு எல்லாம் போடுறீங்க. 

உங்களுக்கு  சூத்திர பட்டம் போகணும். ஏன்னா உங்க தலைக்கு  மேலே பார்ப்பான் சத்திரியன் வைஷ்யன்னு மூணு பேரு எங்களுக்கு  எதுக்கு பறையர் பட்டம் போகணும். எங்களுக்கு  மேலே எவரும் இல்லை கிழே எவரும்  இல்லை நாங்கள் பார்பனன் ஆண்ட பரம்பரை வைஷ்யன் சூத்திரன் என்று சொல்லும் இந்து வருணதருமத்துக்கு  வெளியானவர்கள் பூர்வ குடிகளாக பூர்வீக பவுத்தர்களாக என்று உங்களிடம் இருந்து விலகி வாழும் நாங்கள எதுக்கு எங்கள் அடையாளத்தை விடனும். 

No comments:

Post a Comment