Friday, May 31, 2013

தாய் மொழியில்தான் சிந்திப்பாங்கலாமே? அது என்ன கருமமோ. இவனுங்க நம்பிக்கைதான் உண்மை மாதிரி பேசிட்டு இருப்பானுங்க. நான் ஒரு மூணு மொழியில சிந்திக்கிறேன். பேஸ் புக்குல ஸ்டேடஸ் போட்டுட்டு  போய் அது பற்றி சிந்திச்சா தமிழ்தான் மனசில் ஓடுது. ஆபிசில் ஆங்கிலத்தில் பேசிட்டு அது பத்தி சிந்திச்சா ஆங்கிலம்தான் ஓடுது. ஹிந்தியில நண்பர்களிடம் பேசிட்டு அது பத்தி சிந்திச்சா இந்திதான் ஓடுது. ஒரே மொழிய படிச்சிட்டு ஒரே மொழியில் பேசிட்டு ஒரே மொழியில் சிந்திச்சிட்டு அதுதான் தாய் மொழி நாய் மொழி அதுலதான் என்னால சிந்திக்க முடியும்னா அதுக்கு நாம என்ன பண்ண. கொஞ்ச நாளைக்கு வெளி மாநிலத்துக்கு வெளி நாட்டுக்கு போயிட்டு தமிழில் எழுதாம பேசமா வேறு மொழியை மட்டுமே பயன்படுத்தி பாருங்க உங்க சிந்தனை அப்பவும் "தாய்" மொழியில வருதான்னு. வெளி நட்ட்டில் உள்ள நிறைய மக்கள் தமிழ் மொழிய மறந்து பல நூற்றாண்டுகள் ஆகிறது. அவுங்க இன்னமும் தாய் மொழியிலா சிந்திக்கிறார்கள்? அவ்வளவு என் சென்னையில் மயிலாப்ப்பூர் அண்ணா நகரில் வாழும் நிறைய குழந்தைகள் தமிழில் சிந்திக்கிறார்களா என்று கேட்டு பாருங்கள். என்ன உங்க தாய் மொழி டுபாகோரு சிந்தனையோ. 

பறையர்னு பறையர் உரிமை பேசாதே வா தமிழனா திராவிடனா  சேந்துக்கலாம் என்பதும் சக்கிலியர்னு சக்கிலியர் உரிமை பேசாதே வா  தலித்துன்னு சேந்துக்கலாம் என்பதும் ஒண்ணுதான். பறையரா இருந்து பறையர் உரிமை பேசுவதும். சக்கிலியரா இருந்து சக்கிலியர் உரிமை பேசுவதும்தான் தலித்தியம். பறையர் சக்கிலியர் என்று சொல்ல பயந்து கொண்டு மூடி மறைத்துக்கொண்டு தலித் தலித் என்று யாருக்கோ கழிவிரக்கம் காட்டுவது போல சிலர் பேசிக்கொண்டு இருப்பது தலித்தியம் கிடையாது. தன்னை பறையன் சக்கிலியன் தலித் பவுத்தன் சாக்கியன் என்று சொல்லும்போது நெஞ்சு நிமிர்ந்து இருக்க வேண்டும் அதுதான் ஜாதி எதிர்ப்பின் அடையாளம்.  பறையன் சக்கிலியன் என்று சொல்ல பயந்து கொண்டு திராவிடன் தமிழன் என்று ஓடி ஒளிவது ஜாதி எதிர்ப்பு அல்ல அது அடிமை மனோ நிலை. ஜாதியத்தை  ஏற்றுக்கொள்ளும் மனோ நிலை. 

#திருக்குறள் பாலி மொழியில் எழுதப்படவில்லை.#

அண்ணல் அம்பேத்கர் எழுதிய முப்பத்தி மூன்று பகுதிகளும் ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டு உள்ளது. ஆயிரம் வருஷத்துக்கு அப்புறம் அவரை இங்கிலீஷ்காரன்னு சொன்னாலும் சொல்லுவீங்க. 


வள்ளுவருக்கு ஏற்க்கனவே வள்ளுவர் அப்படின்னு ஒரு அடையாளம் இருக்கு. உங்களை வள்ளுவரோடு அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பினால் உங்களை வள்ளுவர் என்று சொல்லிக்கொள்ளுங்கள். வள்ளுவரை எதுக்கு தமிழன்னு சொல்லி அசிங்க படுத்துறீங்க. 


தாய் மொழின் அவசியம் இல்லை. நான் யாருக்கு மேசேஜ் போடுறேனோ அவுங்களுக்கு புரியும் மொழியில். நான் ஹிந்தி ஆங்கிலம் மொழிகளில் கூட ஸ்டேடஸ் போடுவேனே. 

வள்ளுவர் தமிழில் எழிதினாறேமே. வள்ளுவர் எழுதியது வள்ளுவ மொழின்னு சொல்லுஞ்கேளேன். எதுக்கு அதுக்கு தமிழ் அப்படின்னு பேரு. 


#இந்த நிலைத்தகவலை நீங்கள் உங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்திலோ, இந்தியிலோ பதிந்திருக்கலாம். ஆனால் அதையும் கடந்து தமிழில் பதிந்துள்ளீர்கள் என்பது ஒன்றே சொல்கிறது தாய்மொழியின் அவசியத்தை.#

தாய் மொழின் அவசியம் இல்லை. நான் யாருக்கு மேசேஜ் போடுறேனோ அவுங்களுக்கு புரியும் மொழியில். நான் ஹிந்தி ஆங்கிலம் மொழிகளில் கூட ஸ்டேடஸ் போடுவேனே. 

ஒவ்வொரு முறையும் கூகுல்ல போயி இந்த சனியனை டைப் அடிக்கிறதுக்குள்ள என் தலை வெடிக்கிறது. இங்க ஒரு பக்கம் தமிழில் அடிக்கிறத ஆங்கிலத்துல் நூறு பக்கம் அடிச்சிடுவேன்.  


#இந்த புத்தனை பின்பற்றுவதாய் சொல்லி தெரியும் அனைவரும் மத வெறியர்களாய் இருக்கிறார்கள் என்ன செய்வது.#

ஆமாம் நங்கதான் புலி வேஷம் போட்டுக்கொண்டு புத்த சாமியார்கள் சென்னைக்கு வந்தா ரயில் நிலையத்தில் வைத்து கன்னத்தில் அடித்து பொறிக்கித்தனம் பண்ணுகிறோம். 

No comments:

Post a Comment