Saturday, May 18, 2013


#உயிர், இறைவன் இவற்றைப் பற்றிக் கேள்வி கேட்க அனுமதிப்போர் அனுமதியாதோர் என்று இரு பிரிவினர் உள்ளனர். அனௌமதிக்காதவ்ர் மதத்தினர். அனுமதிப்பவர் ஆன்மீகவாதிகள் அல்லது ஞானமார்க்கத்தினர், புத்தர்,வள்ளுவர். இரமணர், ஜெ.கிருஷ்ண மூர்த்தி ஞ்சான மார்க்கிகள்.#

ஆன்மிகம் என்கிறீர்கள் அப்புறம் ஞான மார்க்கம் என்கிறார்கள். குழப்புறீங்களே? இது மதம் பற்றி உங்க ஆன்மீக ஞானிகள் சொல்லி கொடுத்த சரக்கா? அப்புறம் நாங்க யுனிவெர்சிடி யுனிவேர்சிட்டியா ஏறி இரங்கி ஷோசியோலோஜி சயிக்கொலோஜி என்று படிச்சோமே அதெல்லாம் என்ன? கேள்வி கேப்பது ஞான மார்க்கம் இறைவழிபாடு செய்வது பக்தி மார்க்கம் எல்லாம் சரிதான். கேள்வி கேட்பது ஆன்மிகம் கேள்வி கேட்காதது மதம்னு ஒரு புது டெபனிஷன் கொடுக்கிரீங்களே? இதை கொடுத்தது யாராச்சு பலகலை கழக பேராசிரியர்களா? இல்லை ஆறாவது ஏழாவது படிச்சிட்டு பகுத்தறிவு பகலவன்களா ஆன கோமன சாமியார்களா?  

#இந்து, இந்தியன் என்பதெல்லாம் ஆவணத்தோடு சரி.#

கோவணத்த விட ஆவணம் மிகவும் முக்கியம் நைனா. உங்க மாதிரி ஆட்கள் மதம் இல்லை மார்க்கம் மன்னக்கட்டின்னு சொல்லிட்டு போறதாலதான் அடையலாம் தெரியாமல் நமது மக்கள் அலைகிறார்கள். அண்ணல் ஆராய்ந்து மதம் மதத்தின் வலிமை. மதம் எப்படி அரசியல் ஆக்கப்டுகிறது. மதத்தை வைத்து எப்படி மற்றங்களை கொண்டு வர முடியும் என்றெல்லாம் சொல்லிட்டு போயுள்க்ளார். இப்படியே மதம் இல்லை மதம் இல்லை என்று சொல்லிட்டு ஆவணத்தில் இந்து பறையன் என்று போட்டு இடவோதிக்கீடு வாங்குவதை விட நாண்டுகிட்டு சாகலாம். ஆவணப்படி நான் பவுத்தன். எனது மதம் பவுத்தம். மனதளவிலும் நான் இந்து அல்ல ஆவணத்திலும் நான் இந்து அல்லா என்பதே தலித் அரசியல். 

#பிலாசபியை ஏன் விட்டுவிட்டீர்கள்? புத்தர் ஆன்மா கடவுள்பற்றி ஒன்றும் சொல்லவில்லையானாலும் அவற்றைப் பற்றி வினவ மறுத்திருக்கிறாரா?#

மதம் என்பது கடவுளோடு நின்றுவிடுவதல்ல அது அதை கடந்து செல்லும் சமூக கட்டமைப்பு (சோஷியல் இன்சிஸ்டிடுஷன்). அதை வெறுமனே கடவுள் கொலகைகளாக பார்க்காமல் அதற்க்கு மேலே சென்று பார்க்க வேண்டும். இந்து மதம் நம்மை அடிமை படுத்துகிறது நம்முடைய ஒற்றுமையை தடுக்கிறது என்றால் அதற்க்கு மாற்று மதம் நமக்கு அவசியம் என்கிறார் அண்ணல். ஆன்மீக வாதிகள் ஆன்மீகவாதிகளாக மட்டுமே இருக்க முடியும். அண்ணல் காட்டிய  மதத்தில் மெய்பொருள் ஞானம் (ஆன்மிகம் என்பதற்கு பதில் இந்த வார்த்தையை பயன்படுத்துங்கள்) என்பதும் இருக்கு விடுதலைக்கான அரசியலும் இருக்கு. ஒன்னை மட்டும் பிடித்துக்கொண்டு இருப்பது புத்தம் இல்லை. தியான மார்க்கம் பக்தி மார்க்கம் ஞான மார்க்கம் அரசியல் மார்க்கம் அனைத்தும் கலந்தததே புத்தம். 

#உங்கள் வழி உங்களுக்கு எங்கள் வழி எங்களுக்கு#

இப்படி சொல்லிட்டா பரவாயில்லை. அண்ணல் சொன்னார் புத்தம் மதம் இல்லை. அண்ணல் சொன்னார் புத்தம் மார்க்கம் என்று அண்ணல் சொல்லாததை சொல்லிக்கொண்டு இருப்பதுதான் பிரச்சனை. 

அண்ணலின் வழியே அண்ணனின் வழியா? அண்ணல் இலங்கை போயி இந்துகளிடம் (தமிழர்களிடம்) சேர்ந்து இருக்காதீர்கள். அவர்களிடம் இருந்து விலகி பவுதர்களுடன் (சிங்களவர்களுடன்) சேர்ந்து கொள்ளுங்கள் என்று பறையர்களிடம்  பேசிவிட்டு வந்தாரே அது அண்ணனுக்கு தெரியுமா? அப்புறம் ஜாதி இந்து வெறியர்களை தமிழ் இன சொந்தங்கள் என்றும் ஜாதி இந்து சூத்திரனை மான்பு மிகு தேசிய தலைவர் என்று வணகுகிராரே?

 #இவர்தான் யாசின் மாலிக் ..கூட ஒக்காந்துருக்கிரவருதான் மும்பயில் தாக்குதலுக்கு பொறுப்பானவர் ... இந்த நல்லவர்களை கூட்டியாந்து தமிழ் நாட்டுல கூட்டம் போடுற அளவுக்கு நம்ம ஆளுங்க முன்னேரிடாங்க ..!//

#பிரபாகரன் கூட ராஜீவ் காந்தியை கொலை செய்த குற்றவாளி, தீவிரவாதி என்று இந்தியா சொல்கிறது. அதையும் தைரியம் இருந்தா எழுதுங்க பாஸ்? பிரபாகரன் என்ற தீவிரவாதியின் படத்தை வைத்தது தப்புன்னு சொல்லுங்க பார்ப்போம், உங்க லட்சணம் பல்ல இளிச்சிரும், இல்ல?#

முஸ்லீம்கள் தீவிரவாதிகள். மேதகு பிரபாகரன் போராளி. பாவம் அவர் ஒரு இன்னொசென்ட் விட்டுடுங்க. 

#பிரபாகரன் ..இந்தியாவில் இந்து தீவிரவாதிகளோடு இணைத்து ஈழம் கேட்டாரா ..... ? ?? யாசின் மாலிக் பாகிஸ்தான் தேவிரவதிகளோடு சேர்ந்துகொண்டு காஷ்மீர் வேனும்றார் ...#

பிரபாகரன் எனும் இந்துத்துவ தீவிரவாதியை உருவாக்கியது யார். பிரபாகரனுக்கு ஆயுத பயிற்சி ஆயுத உதவி கொடுத்தது யார்? என்னப்பா இந்துத்வா எனும் பேரினவாதம் இல்லாமல் இருந்து இருந்தால் இப்படி ஒரு புலி படையை உருவாக்கி இருக்க முடியுமா? காஷ் மீர் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் முசிலீம்கள் சப்போர்ட் போலத்தான் இந்து புலி தீவிரவாதிகளுக்கு உங்கள் சப்போர்ட். அவனுக்கும் உங்களுக்கும் என்ன விதியாசம்ணா? முஸ்லீம்கள் ஒற்றுமையா இருக்கான் நீ ஜாதி பேர்ல உனக்குள்ள அடிச்சுக்கிட்டு சாகர. 


#மதம் , சாதி என்ற சாக்கடை கலக்காத வரைக்கும் அரசியலும் புனிதமானதே.....#

புனிதம் பேசும்போதே மதம் வந்து விடுகிறது. மதத்தின் அடிப்படையே சாக்ரெட் அண்ட் ப்ரோபைன் (புனிதமானது புனிதம் அற்றது) என்பதே.  


எப்படி எல்லாம் அட்டேன்ஷன்ல நிக்குராங்க பாருங்க ஆண்டு ஆண்டு காலமா? கை கட்டி இப்படி நின்னே இருந்து பழக்கம். நம்மில் ஒரு கூட்டம் இப்படி பிழைத்துக்கொண்டு இருக்கிறது. 

No comments:

Post a Comment