Tuesday, May 21, 2013

#ராஜீவ் கொலை செய்யப்பட்டார் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதேபோல, ராஜீவ் உட்பட இந்தியாவில் பல்வேறு நபர்களின் தலைமையிலான அரசு பல்லாயிரக்கணக்கில் உழைக்கும் மக்களை கொலை செய்திருக்கிறது என்பதை எவனும் மறுக்க முடியாது..#

யார் இந்த நாங்கள்? விடுதலை புலிகளா? தமிழ் தேசிய வாதிகளா? திராவிட இயக்கமா? பொது உடமை இயக்கமா? மகிழண்ணன் குரூப்பா? 

ராஜிவ்  காந்தி "மக்கள்" இல்லையா? 

ஆளும் வர்க்கம் குத்துனாலும் ரத்தம்தான் வரும் அடிமைகள் குத்துனாலும் ரத்தம்தான் வரும். ஆளும் வர்க்கம் செய்தாலும் கொலைதான் அடிமைகள் செய்தாலும் கொலைதான். 


#கோபால் கிருஷ்ண நாயுடு கொல்லப்பட்டிருக்கக் கூடாது. # 

கொல்லப்பட்டிருக்கக் கூடாது..கொலைக்கு கொலை என்று எங்களுக்கு அண்ணல் கற்பிக்கவில்லை. 


ராஜீவ் காந்தியை கொன்னது நியாயமாம். அது புலிகள் கொடுத்த மரணதண்டனையாம். ராஜிவ் காந்தியை கொன்னதுக்கு துணை போனவர்களுக்கு மரணதண்டனை கொடுக்க கூடாதாம். மாரணதண்டனை மனித நேயம் அற்ற செயலாம். என்னடா உங்க லாஜிக்கு. தமிழ் தேசியவாதிகளுக்கு புத்தியே கிடையாது என்று மீண்டும் மீண்டும் நிருபிக்கிரீர்களா? 

மகிழ்நன் பா.ம கொலைக்கு கொலை என்று சொல்லவில்லைதான்...ஆனால், கண்டிப்பாக அவர் கொலைக்கு மேலும் மேலும் கொலை செய்யப்படுதல் என்னும் முட்டாள்தனத்தையும் அவர் கற்பிக்கவில்லை.#

என்ன சொல்ல வரீங்க?  கோபால் கிருஷ்ண நாயுடுவை கொன்னதை அண்ணல் ஆதரித்து இருப்பார் என்று சொல்ல வரீங்களா? எதிரிகளிடத்திலும் அன்பு  காட்டு என்று சொன்ன கருணாமூர்த்தி அவர். உங்கள் கொலை வெறி தத்துவங்களை அவர் வாயுக்குள் திணிக்க வேண்டாம். 


#அண்ணல் தொடங்கிய சுதந்திர தொழிலாளர் கட்சியின் நோக்கத்தையும் படியுங்க...#

பான்னையார்களை முதலாளிகளை ஜாதி இந்துக்களை எல்லாம் கொலை செய்வதே நோக்கம் என்று எழுதி உள்ளாரா? 

#அண்ணலை படி. அண்ணலை படி#

சிறுவனாக அண்ணலின் வாழ்க்கை வரலாற்றை படிக்க ஆரம்பித்து,  கல்லூரி காலங்களில்  அண்ணலின் புத்தகங்களை தமிழில் படித்து பல்கலைகழக காலங்களில் ஆங்கிலத்தில் வந்த அணைத்து தொகுதிகளையும் படித்து அது பத்தாது என்று அண்ணலை பற்றி மற்றவர்கள் எழுதிய இருபது முப்பது புத்தகங்களை நான் படித்து இருப்பேன். இதை திமிராக சொல்லவில்லை. பள்ளி கல்லூரி பாட புத்தகங்களை படித்ததை விட அண்ணலை படித்ததுதான் அதிகம்.  சொல்லுங்க எங்கே அவர கொலைக்கு கொலையே சரியான வழி என்று சொல்லியுள்ளார். எங்கே அவர் ஆயுத புரட்சியை இரத்த புரட்சியை ஆதரித்து உள்ளார். 



#"நம் நாட்டில் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக இரண்டு சக்திகள் இருக்கின்றன. ஒன்று பார்ப்பனியம்; மற்றது முதலாளித்துவம். - அண்ணல் அம்பேத்கர்"#

அது சரிதான் ஆனால் பாம்பைக்கண்டால் விடு பார்பனனை கண்டால் அடி என்றோ முதலைய கண்டா விடு முதலாலிய கண்டா கொள் என்றோ அவர் சொல்லியுள்ளாரா? பார்பனரல்லாதார்  பார்ப்பனர்களுக்கு எதிராக வான் முறையில் ஈடுபட்டபோது அவர்களை அரசு பாதுகாக்க வேண்டும் என்று கேட்டவர் அண்ணல். அரசு பஸ்களை எல்லாம்  நாட்டுடமை ஆக்க வேண்டும் என்று சொன்னபோது பஸ் முதலாளிகளின் உரிமைகளுக்காக அவர்கள் சார்பாக கோர்டில் வாதாடியவர் அண்ணல். 


#பொதுவுடமை சிந்தாத்தை அண்ணல் நிராகரித்ததாகவும்...நான் குழம்பி போயிருப்பதாகவும்..நீங்கள் தெளிவாக இருப்பதாகவுமே வைத்துக் கொள்வோம்...#

அண்ணல் பொதுவுடமை தத்துவவாதிகள் சொல்லும் முழுமையான சமத்துவம்  என்பதையும் இரத்த புரட்சி மூலமே அதை கொண்டு வரமுடியும் என்பதையும் நிராகரித்தார். முழுமையான் சமத்துவம் சாத்தியம் இல்லை. முழு சுதந்திரம் பேசும் முதலாளிதுவத்தை நிராகரித்த  அவர் முழுமையான சமத்துவம் பேசும் மார்க்சிய கம்யுனிச தத்துவத்தையும் நிராகரித்தார். வறுமையும்  துன்பம்தான் ஆனால் வறுமையை நீக்கி விட்டால் துன்பம் போய்விடாது என்றார். மனித துன்பத்துக்கு காரணம் வறுமை மட்டும் அல்ல வறுமையை மீறிய பல விஷயங்கள் உள்ளன என்றார். சமத்துவத்தோடு சுதந்திரமும் மனித விடுதலைக்கு அவசியம் என்றார். பொது உடமை தத்துவம் சமத்துவம் பேசுகிறது ஆனால் சுதந்திரம் இல்லை முதலாலித்துவம் சுதந்திரம் பேசுகிறது ஆனால் அங்கு சமத்துவம் இல்லை என்றார். புத்தர் சொன்ன தம்ம தத்துவத்தில் மட்டுமே சமத்துவமும் சுதந்திரமும் உள்ளது என்றார். ஏனெனில் புத்த தத்துவத்தில் மானுடம் சகோதரத்துவம் முதலிடத்தில் உள்ளது எனவே அங்கு சமத்துவமும் சுதந்திரமும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும் என்றார். 

No comments:

Post a Comment