Wednesday, May 15, 2013

தமிழ் தாய் பாவாடை தாவணியில் வருவாங்களா? பட்டு புடவையா? இல்லை நமது கன்னடா நாட்டு தமிழச்சி போல கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு வருவாங்களா? தமிழ் தாய் வயது முதிர்ந்த கிழவியா? வயது குறைந்த குமரி பெண்ணா? கையில் வைத்திருப்பது சூலமா? தலையில் இருக்கப்போவது கிரீடமா? இவர்கள் மனதில் உள்ள தமிழ் தாய் காஞ்சி காமாட்சியா மதுரை மீனாட்சியா காசி விசாலாட்சியா? ஒரே குழப்பம். இவுங்க தமிழ் தாய் தெரு ஓரத்தில் ஆப்ப கடை வைத்து உள்ள நமது சேரி தாய் போல இருப்பாரா? இல்லை மயிலை அக்ரகாரத்து மாமி போல இருப்பாரா? இல்லை ஊர் தெரு "மீனா" போல இருப்பாரா? யார் இந்த தமிழ் தாய்? எனக்கு என்னமோ அம்மாவுக்கு சிலை வைத்து பார்க்கு ஆசை வந்து விட்டது என்று நினைக்கிறேன்.

No comments:

Post a Comment