Wednesday, May 29, 2013

#முதல்ல இந்தியாவை ஒத்தை நாடாக்குங்க...இந்தியா என்னைக்கு ஒத்தை நாடாக இருந்தது...இது வெறும் சந்தை மட்டும்தானே.#

முதல்ல தமிழ் நாட்டை ஒத்த நாடா ஆக்குங்க அப்புறம் இந்தியாவை ஒத்த நாடாக்குவோம். இந்தியா சந்தை தமிழ் நாடு இன்னும் ஜாதி சாக்கடையாத்தானே இருக்கு. 


#தமிழ் நாடு ஜாதிகளின் பட்டியலின் பெயரில் பறையன் என்பது ஜாதியாக குறிப்பிட படவில்லையா?#

தமிழ் நாடு அரசு எங்களை எதுக்கு ஜாதி பட்டியலில் வைத்து உள்ளது. வரலாறு தெரியாத அரசு. நாங்கள் ஆதிக்குடிகள். பழங்குடிகள், எங்களை பழங்குடியினர் பட்டியலில் வைக்க சொல்லுங்க. 


#அப்படியே அது ஜாதியாக இல்லை என்றால் ஆண்ட பரம்பரை என்று சொல்பவருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்.#

ஆண்ட பரம்பரை (ஷத்திரியர்) நான்கு வருண முறையில்  இரண்டாம்  நிலையில் உள்ளது. சூத்திர ஜாதிகள் எல்லாம் தங்களை ஆண்ட பரம்பரை (ஷத்திரியர்) என்று சொல்லிக்கொண்டு வருணத்தில் நான்காம் நிலையில் இருந்து இரண்டாம் நிலைக்கு போக நினைப்பதை சமஸ்கிருதமயமாக்கல் என்று சமூக அறிவியளார் சொல்கிறார்கள். நாங்கள் அதுபோல வருணத்திற்கு உள்ளே போக நினைக்க வில்லை. வருணத்துக்கு வெளியே உள்ளவர்கள் ஜாதி அற்றவர்கள் என்று சொல்கிறோம். எங்கள் மூதாதையர் புத்த தம்மிகள் ஜாதி அற்றவர்கள் என்கிறோம். இதை பாலிமயமாக்கள் என்கிறார் பேராசிரியர் எளினார் ஜெளியாட் (அன்டச்சபல் டு தலித் எனும் புத்தகத்தில்)

#இதற்கு நீங்கள் வர்க்க பேதனை உருவாக்குகிறீர் என்று சொல்லலாமா?#

நான் எப்படி வர்க்க பேதம் உருவாக்குகிறேன் என்று சொன்னால் விரிவாக பேசலாம். 


#மதமும், கடவுளும், வர்க்கங்களும், சாதிகளும் உள்ள வரை மக்களில் வேற்றுமை என்பது இருக்காதா?# 

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே உலக நியதி. வேற்றுமை இல்லாமல் எல்லாவற்றியும் ஒரே பெட்டிக்குள் அடைக்க நினைப்பது ஆதிக்க அரசியல். 

#இதை புத்தன் சொல்லவில்லையா? இல்லை அண்ணல் அம்பேத்கார் சொல்லவில்லையா?#

எதை சொல்லவில்லை என்று சொன்னால் மேலும் விரிவாக பேசலாம். 


#பறையன் என்று சொல்வதால் உங்களிலின் நிலைப்பாடு என்ன?#

என் சமூகம். என் சமூகத்தின் உரிமை. என் அடையாளம். என் சமூகத்தை காக்க என் சமூகத்துக்கு பனி செய்வது எனது கடமை. என்னை வாழ வைக்கும் சமூகம். அதற்க்கு என் கடமையை நான் ஆற்ற வேண்டும். என் சமூக முன்னோர்கள் போட்ட பிச்சைதான் இன்று நான் அனுபவிக்கும் உரிமைகள் பெருமைகள். தேங்க்ஸ் ஹெவன் மற்றவர்கள் கண்களுக்கு நாங்கள் தீண்டத்தகதவர்களாக இருந்தோம் இருக்கிறோம். 

#பொது புத்தியின்படி பறையன் என்றால் ஜாதி தானே இதை மாற்ற நீங்கள் என்ன செய்தீர்?#

ஜாதி இந்துக்களில் ஆதிக்க ஜாதிகளின் அதிகார வர்க்கத்தின் புத்தி பொது புத்தி என்றால் அதை மற்றும் எதிர்க்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். 
 
#உங்களின் கருத்துக்களை படிப்பவர்கள் யாவரும் ஜாதிய அடிப்படையில் உங்களை எண்ணவில்லை என்கிறிரா?#

என் கருத்துக்களை படிப்பவர்கள் என்னை ஜாதியவாதி என்று நினைத்தால் அது என் தவறு இல்லை. படிப்பவர்கள் அணிந்திருக்கும் கண்ணாடி. பறையன் என்று மார் தட்டுவது ஜாதி இல்லை. பறையன் என்று சொல்ல வெட்கப்பட்டு ஓடி ஒதுங்குவது. நான் தமிழன்  நான் திராவிடன் என்று அடையாளத்தை மறைத்து அடங்கி கிடப்பதே ஜாதிய அடிமை மனோ நிலை. 

#தமிழ் நாட்டில் இருக்கின்ற பெரும் பகுதியான மக்கள், ஏன் தெற்கு ஆசியாவில் இருக்கின்ற பெரும் பகுதியான மக்கள் புத்தத்தை பின் பற்றியவர்கள் தானே? உண்மையாக நீங்கள் புத்தத்தை பின்பற்றுபவராக இருந்தால் இதை உணர்த்த நீங்கள் என்ன செய்தீர்?#

உண்மைதான் ஒரு காலத்தில் ஆசியா முழுக்க அனைத்து மக்களும் புத்த தம்மத்தை பின் பற்றும் மக்களாகத்தான் இருந்தார்கள். ஆனால் பார்பனிய அலை அடித்தபோது இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் தங்களை பார்பனர்கள், ஷத்திரியர்கள், வைசியர்கள், சூதிரர்கள் என்று சொல்லிக்கொண்டு இந்துவாகி போனார்கள். சாக்கியர்கள் மட்டும் தங்களது நிலையில் இருந்து மாறாமல் இருந்தார்கள். வருணத்தை ஏற்காமல் சாதியத்தை ஏற்காமல் இருந்தார்கள். அவர்கள் தான் பறையர்கள் அவர்கள் தான் சேரி வாழ்  மக்கள். இந்த உண்மை வரலாற்றை அறிந்து சொன்னவர்கள்தான் பண்டிதரும் பாபாசாகேப்பும்.  இதை உணர்ந்ததால் தான் எமது மக்களுக்கு உண்மை வரலாற்றை எடுத்து சொல்லிக்கொண்டு  இருக்கிறேன். 

No comments:

Post a Comment