Friday, May 31, 2013

கமல கண்ணன் மதம் ஒரு அபின்னு மார்க்ஸ் சொன்னதுக்கு மறுப்பு தெரிவித்த ஆயிரக்கணக்காண புத்தகங்கள் எழுதப்பட்டு உள்ளது. மதம் அபின் இல்லை மதம் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான வழியாக மாறும் என்று பல பொலிடிகல் சயின்டிஸ்ட் ஆய்வு செய்து உள்ளனர். தற்போது அவர்களின் ஆய்வுக்கு அண்ணலின் மத மாற்றமும் அந்த மத மாற்றத்திற்கு பின்னர் நடக்கும் புரட்சி பற்றி ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் எல்லாம் ஆய்வுகள் நடக்கிறது. எனவே அரை குறை ராமசாமியை தூக்கி பிடித்துக்கொண்டு மதம் இல்லை கடவுள் இல்லை என்று பஜனை பாடிக்கொண்டு இருக்க வேண்டாம். 

ராமசாமி பகுத்தறிவு வாதியா? நாத்தீகம் பகுத்தறிவு என்றால். புத்தம் போதித்த புத்தர் அண்ணல் அம்பேத்கர் பண்டிதர் எல்லாம் பகுத்தறிய தெரியாத பேதைகளா?  

கடவுள் இல்லை என்பதை எப்படி பகுத்து அறிந்து சொல்ல முடியும். ஒரு வேலை கடவுள் அண்டார்டிக்காவில் இருக்கார்னு வச்சுக்குவோம். அதை எப்படி பெரியார் மாளிகையில் உக்காந்து கொண்டு பகுத்து அறிஞ்சி சொல்ல முடியும். எப்படி பகுத்து அறிஞ்சி ராமசாமி கடவுள் இல்லை என்று சொன்னார்ன்னு யாராச்சும் கேட்டு சொல்லுங்களேன்.







No comments:

Post a Comment