Tuesday, May 28, 2013

பறையர் என்பது ஜாதி அல்ல ஜாதி எதிர்ப்பின் அடையாளம். ஜாதி என்பது என்ன ஜாதி எனும் சிறை எவ்வளவு கொடியது என்பது எங்களுக்கு தெரியும். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு உங்கள் பெயர் இந்து பெயர். அது போல வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு எனது பெயர் ஜாதி பெயர். "ஜாதி" "மதம்" என்பது பெயரில் இல்லை. மனதில் உள்ளது. பறையன் என்று ஒருவன் சொல்ல தயங்குவது ஜாதி. பறையன் என்று நெஞ்சை நிமிற்துவது ஜாதி எதிர்ப்புக்கான அடையாளம். நான் பறையன் என்று நெஞ்சை நிமிற்தும்போது  எனக்கு மேல் எவனும் இல்லை என்ற எண்ணம் வருகிறது. எனக்கு மேல் எவனும் இல்லை எனும்போது எனக்கு கீழ் எவனும் இல்லை. எனக்கு மேலேயும் எனக்கு கீழேயும் எவனும் இல்லை எனும் எண்ணம் வரும்போது மட்டுமே சாதி ஒழிகிறது. பறையர்களை ஒழிப்பது பறையர்களின் ஒற்றுமையை ஒழிப்பது பறையர்களின் விடுதலை உணர்வை ஒழிப்பது பறையர்களின் கூட்டமைப்பது ஒழிப்பது பறையர்களின் சங்கங்களை ஒழிப்பது ஜாதி ஒழிப்பு இல்லை ஜாதி திமிர். இதை பறையர் சமூகத்தில் பிறந்து விட்டு ஒருவர்  தன்னை பறையர்  என்று சொல்ல மறுக்கிறார்  அல்லது தயங்குகிறார்  என்றால் அது அவர் மனதில் இருக்கும் கீழ்ஜாதி மனோ நிலை. 


#நீங்கள் பறையன் என்பதை ஜாதி என்று கருதாது மகிழ்ச்சிதான். பள்ளர் கள்ளர் தேவர் வன்னியர் நாடார் முதலியார் ரெட்டி இவர்களை எப்படி கருதுகிறீர்கள். அல்லது எப்படி கருத வேண்டும் என்று உங்கள் குடும்பத்தவர்க்கோ நண்பர்களுக்கோ சொல்ல விரும்பகிறீர்கள்?#

பள்ளர் கள்ளர் தேவர் வன்னியர் நாடார் முதலியார் ரெட்டி இவர்கள் எல்லோரும் பறையர்களை போன்ற இனக்குழுக்கள். அவர்கள் தங்களை ஷத்திரியர்கள் சூத்திரர்கள்  என்று சொல்லிக்கொண்டு, நான் அவரை விட உயர்ந்தவன் இவரை விட தாழ்ந்தவன் என்று பட்டம் கட்டிக்கொளும்போது ஜாதிகளாக மாறுகிறார்கள். இவர்கள் ஒருவருக்கு அடங்கி போவதும் மற்றவரை அடிமை படுத்த நினைப்பதும் இவர்களை ஜாதி என்று நிர்ணயிக்கிறது. பறையர் எவரும் நாங்க ஆண்ட ஜாதி மீதியெல்லாம பேன்ட ஜாதி என்று சொல்லிக்கொண்டு திரியவில்லை. அப்படி ஒருவர் சொல்கிறார் எனில் அவர் ஜாதியத்தை தூக்கி பிடிக்கிறார் என்று அர்த்தம். "நான் பறையர் சக்கிலியர் எங்களை விட தாழ்ந்தவர்" என்று எந்த பறையராவது சொல்கிறார் எனில் அவர் ஜாதியத்தை 
தூக்கி பிடிக்கிறார் என்று பொருள். சக்கிலியர் எம்மை விட தாழ்ந்தவர் என்று அவர் நினைக்கும்போது  அவரின் தலைக்கு மேலே ஆயிரம் ஜாதிகள் உள்ளது என்று அவர் ஏற்றுக்கொள்கிறார். பறையர் என்பது ஜாதி இல்லை. நாம் பறையர். எமக்கு மேல்  எவரும் இல்லை எமக்கு கீழ் எவரும் இல்லை என்பதே ஜாதி ஒழிப்பின் மந்திரம். நீங்கள் மேலே சொன்ன அனைத்து சமூகங்களும் ஒருவரை ஒருவர் சமமாக நினைக்கும் போது ஜாதி ஒழிகிறது. அப்படி ஜாதி ஒழியும்போது மட்டுமே இந்த சமூகங்கள் ஒன்றோடு ஒன்று கலக்கும். இந்த சமூகங்களுக்கு இடையே கலப்பு திருமணங்கள் நடக்கும். ஜாதியை ஒழிக்காமல் கலப்பு திருமணம் என்பது சேரியை ஏமாற்றும் வேலை. ஜாதி ஒழிய வேண்டும் எனில் சாதியத்தை தூக்கி பிடிக்கும் சாஸ்திர சம்பரதாயங்கள் ஒழிய வேண்டும். நான் ஆண்ட பரம்பரை பேன்ட பரம்பரை எனும் நம்பிக்கைகள் ஒழிய வேண்டும் இந்து மதம் ஒழிய வேண்டும். புத்தன் காட்டிய மானுட  தம்மம் அறம் அன்பு கருணை மக்களின் மனதில் பெருக வேண்டும். நான் பறையராக இருப்பதால் மற்ற சமுகங்களை வெறுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் சமூகமும் வாழ வேண்டும் அவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எனது குறிக்கோள். நான் பறையன் என்று சொல்லுவதை நிறுத்திவிட்டால் ஜாதி ஒழிந்து விடும் என்பது முட்டாள் தனம். என் சமூகம் நான் பறையன் என்று சொல்ல பயந்த காலம் போய் இன்று நெஞ்சை நிமிர்த்தி நாம் பறையர்  என்று சொல்லும் காலம் வந்து உள்ளது. இதுதான் சமத்துவம் ஜாதி ஒழிப்பின் ஜாதி எதிர்ப்பின் அடையாளம். 

 
யார் வந்து என் சுவற்றில் நாய் மாதிரி மூத்திரம் பெய்வது என்பது படிக்கிறவர்களுக்கு தெரியும். மொழியை தாயாக்கி அதுக்கு பூஜை செய்து விட்டு தாயை எட்டி உதைக்கும் நாதாரி நாய்கள் நாங்கள் அல்ல


#yen nayakkar, iyyer lam tamil jathila serkanuma???#

இல்லை இல்லை மேலே சொன்ன ஜாதி அடியாளம்தான்  ஒருவன் தமிழனா தமிழன் இல்லையா என்று நிர்ணயிக்கிறது என்கிறேன். 

2 comments:

  1. /////பறையர் என்பது ஜாதி அல்ல ஜாதி எதிர்ப்பின் அடையாளம்.////பள்ளர் கள்ளர் தேவர் வன்னியர் நாடார் முதலியார் ரெட்டி இவர்கள் எல்லோரும் பறையர்களை போன்ற இனக்குழுக்கள். ///// முட்டாள் முட்டாள் தலைப்பு தவறு..... சாதி எப்படி இனம் ஆக்கும்.... சாதி இனம் ஆகாது.. ஒரு மொழி பேசும் மக்கள் தன இனம் ஆவர்கள்.... தலைப்பை படித்தவுடனே மற்றவைகளை படிக்கச் மனது இல்லை..

    ReplyDelete
  2. முட்டாள் முட்டாள்,,,,, மொழி எப்படி இனம் ஆகும். மானுடவியல் படித்தவர்களிடம் இது பற்றி விவாதம் பண்ணி விட்டு வந்து இங்கு கமெண்ட் போடு.

    ReplyDelete