Monday, January 21, 2013

தமிழ் டேசியம் என்பது பீ தான் அதை யார் பேசினாலும் எதிர்ப்போம். அது முப்பது கோடி சாக்கிய மக்களை பிரிக்கும் ஆதிக்க ஜாதிகளின் சூழ்ச்சி அரசியல் அது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் "ஆதி இந்துக்கள்" "உண்மையன இந்துக்கள்" "ஒடுக்கப்பட்ட இந்துக்கள்" என்று பேசியவர்கள் எல்லாம் இப்போது காணாமல் போய் விட்டார்கள். அது போலத்தான் இன்று திருமா பேசும் "தமிழ்" தேசிய" அரசியல். நாங்கள் கடல். எங்களை தமிழ் தேசிய சாக்கடையில் கொண்டு வந்து அடைக்க வேண்டாம்.  அம்பேத்கரியம் பேசுங்கள், சாக்கிய தம்மம் பேசுங்கள், மானுடம் பேசுங்கள் அது அணைவருக்கும்  பொது. 

சேரிக்கு விடுதலை எனில் அது மானுடத்துக்கு விடுதலை. அதுக்கு மேல மானுடம் இருக்கா? உலகத்தில் எங்கு போனாலும் "OUT-CASTE" இருக்கிறான்.  எங்கள் குரல் அவர்களுக்கு ஒலித்துக்கொண்டே இருக்கும். 

ஈழத்த பத்தி நாங்க பேசலியா யார் சொன்னது? தமிழ்-சிங்கள ஆதிக்க சமூகங்கள் இரண்டும் அங்கு உண்மையில்  ஒடுக்கிக்  கொண்டு இருப்பது சாக்கிய (தலித்) மக்களையே. தமிழ் தேசியம் தக்காளி தேசியம் என்று பேசிக்கொண்டு இருக்காமல் அங்குள்ள  தலித் மக்களின்  விடுதலை பேசுங்கள் என்கிறோம். இலங்கை தலித் மக்களின் விடுதலையே இலங்கை வாழ் மக்களின் சமூக விடுதலை என்கிறோம். 

அப்படின்னா தமிழர் அல்லாத நாங்க மனுசங்க இல்லையா உங்க மானுடத்துல. தமிழன் தெலுங்கன் பஞ்சாபி சிங்களவன்  இந்தியன் பாகிஸ்தானி இலங்கையன்  எனும் பிரிவுகளை மறந்து மனிதனாக ஒன்று படுவோம் என்கிறோம். 

தலித்தியம் என்பது மானுடத்தின் குரல். உலகத்தில் மக்கள் எங்கு ஒடுக்கபட்டாலும் ஒரு ஒடுக்கப்பட்டவனாக மற்றொரு ஒடுக்கப்ட்டவனுக்கு குரல் கொடுப்போம். ஒரு மொழி பேசுவதால் ஆதிக்க ஜாதி வெறியனும் நானும் ஒன்று ஒரே இனம் எனும் புண்ணாக்கு தமிழ் தேசியம் எங்களுக்கு தேவை இல்லை. 

இலங்கையில் உள்ள மொழி சிறுபான்மையினருக்கு துடிக்கும் மானுட கொழுந்துகளே!!!! தமிழகத்தில் உள்ள மொழி சிறுபான்மையினரின் உரிமைகளை  நீங்கள் முதலில் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். தமிழ்  நாடு என்பது "தமிழர்க்கு" மட்டும் சொந்தமானது அல்ல. அங்கு வாழும் பெரும்பான்மையான பூர்வீக குடிகள் கூட தமிழ் அல்லாத பிற மொழி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். 
 

எங்க பகுதியில் ஒரு பக்கம் சேரி ஒரு பக்கம் ஊர் நடுவுல ரோடு. எப்போ ஆக்சிடெண்ட் ஆனாலும் முதல்ல ஓடி போய் அடி பட்டவங்கள தூக்கிட்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்ப்பவன் சேரிக்காரனா  தான் இருப்பான். ஏதோ ஆயிரத்துல ஒருத்தன் தான் ஊர் காரணா இருப்பான். அப்படி தூக்கும் போது ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, தேசம் என்று எதையும் பார்த்தது இல்லை. சேரிக்காரனுக்கு மானுடம் சொல்லி கொடுக்குறீங்களா?  

No comments:

Post a Comment