Sunday, January 20, 2013

இந்தியா ஹிந்துகளின் நாடு, இலங்கை சிங்களவனின் நாடு, தமிழ் நாடு (அ) ஈழம் தமிழர்களின் நாடு, திராவிடம் திராவிடர்களின் நாடு. இப்படி சொல்லி திரியும் கூட்டத்திடம் ஏதாவது வேறு பாடு இருக்கா? இந்தியாவை இந்துக்கள் ஆளவேண்டும், இலங்கையை சிங்களவன் ஆளவேண்டும், தமிழ் நாட்டை (அ) ஈழத்தை  தமிழன் ஆள வேண்டும் என்பதில் ஏதாவது வேறுபாடு இருக்கா? மத மொழி இன சிறுபான்மை மக்களின் உரிமைகளை உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத இந்த ஜென்மங்கள் தான் இன்று அரசியல் செய்து கொண்டு இருக்கிறது. ஆர் எஸ் எஸ் காரன் எப்படி பெரும்பான்மை இந்து சமூகத்தை மட்டுமே மையப்படுத்தி அரசியல் செய்கிறானோ அது போலத்தான் இன்று தமிழ் நாட்டு அரசியல் வாதிகளும் பெரும்பான்மை தமிழ் சமூகத்தை வைத்து அரசியல் நடத்திக்கொண்டு இருக்கிறது. தமிழ் நாட்டு மீடியாக்களும் அரசியல் வாதிகளும் சினிமா கலைஞர்களும் இலகியவதிகளும் என எல்லோருமே  தமிழ் சமூகம்  தமிழ் கலச்சாரம் தமிழ் பாரம்பரியம் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படின்னா தமிழ் நாட்டில் உள்ள இந்து அல்லாத தமிழ் பேசும் மக்கள், "தமிழர்" பாரம்பரிய கலாச்சாரத்தை விட்டு விட்டு வாழும் மற்ற மதத்தினர், மொழி சிறுபான்மையினராக உள்ள மற்ற மொழியினர் இன்னும் கூட தங்கள் பழங்குடி மொழிகளை பேசும் சமூகங்கள் எல்லாம்  இந்த மண்ணில் உரிமை அற்றவர்களா? மனிதம் பேசும் ஜனநாயகம் பேசும் வர்க்க உரிமை பேசும் எவரும் இந்த மொழி இன வெறி அரசியலை எதிர்ப்பது இல்லை. இந்த சோ கால்டு ஜன நாயக வாதிகள், பொது வுடைமை வாதிகள் எல்லோருமே உள்ளே ஜாதி மத மொழி இன வெறியர்களாகவே உள்ளனர். 

No comments:

Post a Comment