Sunday, January 20, 2013

தலித் சமூகத்துக்கான எங்கள் பணி எல்லா விதத்திலும் திருமாவை விட குறைந்தது இல்லை, திருமா இந்த இருபத்து ஐந்து வருஷமா இரவு பகலா ஈழத்தை பத்திதான் நினைத்துக்கொண்டு இருக்கிறார். இது அவரே சொன்னது. சேரியை பற்றிய அவருடை சிந்தனை ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை. அதுவும் நிர்பந்தத்தால். அதே இருபத்து ஐந்து வருடம் நாங்கள் சேரிகளை பத்தி மட்டும் தான்  சிந்தித்துக்கொண்டு இருக்கிறோம்.எங்களுக்கு வேறு சிந்தனை இல்லை. அவர்  தலைவர் ஆயிட்டார், பாப்புலர் ஆயிட்டார். நாங்க வெளி உலகத்துக்கு தெரியவில்லை என்பதால் நாங்கள் அவரை விட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. தமிழ்  நாட்டில் உள்ள ஆயிரம் ஆயிரம் அடிமட்ட தலித் ஆக்டிவிஸ்ட்.டுகள்  மற்றும் தலித் தலைவர்கள் முழு நேர சமூக பணி செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களும் தங்களை மூப்பனுக்கோ, ஜெயாவுக்கோ. கருணாநிதிக்கோ, பிரபாகரனுக்கோ விற்று இருந்தால் திருமாவை  விட பாப்புலர் ஆகி இருப்பார்கள்

நாங்க இயக்கம் கட்டுவோம். நீங்க வந்து திராவிட தமிழ் தேசிய அரசியலுக்கு வித்துட்டு போயிடுவீங்க. 

நாங்க எண்பதுகளில் தொன்நூருகளில் ரத்தம் சிந்து குருவி மாதிரி கட்டியதுதான் அண்ணல் அம்பேத்கர் இயக்கம். இப்ப அங்க எல்லாம் இருப்பது ராமசாமியும் பிரபாகரனும். அவர்களை சேரிக்குள் தலித் இயக்கத்துக்குள் யார் கொண்டு வந்தது? 

அண்ணல் அம்பேத்கர் பொது அரசியலில் தலித் அரசியல் செய்தார். அவர் பேசிய அத்தனை விஷயத்திலும் தலித் அரசியல் இருக்கும். திருமா தலித் அரசியலில் பொது அரசியல் பண்ணிக்கொண்டு இருக்கிறாரா.  தலித் மக்களை தமிழ் தேசியம் திராவிடம் எனும் பெயரில் திசை திருப்பிக்கொண்டு இருக்கிறார். தங்களது உரிமைகளுக்கு போராட வேண்டியவர்களை  மாட்டு மந்தைகள் போல ஆக்கி கொண்டு இருக்கிறார். 

கஞ்சிக்கு வழி இல்லாதவர்கள் தெரு ஓரம் படுத்து இருப்பவர்கள் தினம் தினம் ஜாதி வெறியால் அல்லல் பட்டுகொண்டு இருபவர்கள். இவர்களை பற்றி எல்லாம் கவலை இல்லை. ஆனால் ஈழம் தனி நாடாகணும், தமிழருக்கு என்று ஒரு தேசம் உருவாகணும், தமிழ் மொழி ஆட்சி மொழி ஆகணும், தமிழ் செம்மொழி ஆகணும், தமிழன் முதல்வர் ஆகணும் இதற்காக இவர் கட்சி தலைமை எல்லாத்தையும் விட்டுட்டு ராமதாசு ஆணையிட்டால்  அவருடன் போய் சேர்ந்து கொள்வார்.  

அவன் ஊர்ல பொங்கல் கொண்டாடினான் நீ உன் சேரியில கொண்டாடுன. அப்புறம் என்ன தமிழர் திருநாள். அது ஊர் பொங்கல் நீங்கள் கொண்டாடியது  சேரி பொங்கல். 

அவுங்க எல்லாம் ஜாதி அரசியல் பண்றவங்க. அவுங்களோடு செந்தா இவருக்கு ஜாதி ஒட்டிக்கும். இவர் தமிழ் தேசிய தலைவர். 

திருமா மட்டும் இல்லை தமிழ் தேசியம் பேசும் ஒருவரும் இலங்கை தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு ஆனியையும் பிடுங்கவில்லை புடுங்க போவதில்லை. இங்க மக்கள் உணர்ச்சியை தூண்டி அவர்களை மாட்டு மந்தைகளாக்க பயன்படுத்தும் கருவியே ஈழம். மதவாதிகள் மதத்தை போதித்து அரசியல் நடத்துவது போல ஈழம் தமிழ் தேசிய வாதிகளின் கருவி. இதை புரிந்தவர்கள் தமிழ் தேசிய வாதிகள் பின்னால் போக மாட்டான். 

ஈழத்துல லட்சம் பேர் தான் செத்து இருக்கான்னா. இங்க கோடி பேர் செத்து இருக்கான். தினம் தினம் செத்து கொண்டு இருக்கான். ஈழ மக்களுக்கு குரல் கொடுப்பது தப்பு இல்லை. அதை இங்கு அரசியல் ஆக்கி எங்கள் பிரச்சனையை சிறுமை படுத்துவது தான் தப்பு. இங்கு உள்ள பிரச்சனைகளை முதன்மை படுத்தாமல் ஈழத்தை முதன்மை படுத்துவதுதான் எங்களுக்கு பிரச்சனை. இங்க இருந்து ஈழம் வாங்கி கொடுப்போம் என்று சொல்லுவது தான் எங்கள் பிரச்சனை. தங்களுக்காக போராட வேண்டிய மக்களை திசை திருப்பி ஈழம் எனும் பெயரில் முடக்கி வைப்பதுதான் எங்களுக்கு பிரச்சனை. தமிழ் சொந்தம் தமிழ் இனம் தமிழ் தேசியம் எனும் கற்பனை உலகத்தில் மக்களை கொண்டு  சென்று யாரை எதிர்த்து போராடுவது என்றே மக்கள் புரிந்து கொள்ள முடியாமல் அவர்களை குழப்பிக்கொண்டு இருப்பதே எங்கள் பிரச்சனை. 

யாரு ஜனநாயக வாதிகள் முற்போக்கு சிந்தனையாளர்கள். ஆதிக்க ஜாதிய வாதிகள் திராவிடம், தமிழ்தேசியம், பொது வுடைமை, பெரியாரியம், பெண்ணியம் பேசிக்கொண்டு இருந்தால் அவர்கள் ஜனாயக வாதிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள். அப்படின்னா  நாங்கள் ஜாதிய வாதிகளா? 


திருமா எனும் தனி மனிதர் ஈழம் பேசுவதோ, பொது அரசியல் பேசுவதோ பிரச்சனை அல்ல. ஆனால் தலித் சக்தியை அவர் திசை திருப்புவது தான் எங்களுக்கு பிரச்சனை. 


ஜாதி தமிழர்களுக்கு தலித் பிரச்சனையை கொண்டு செல்வது. ஜாதி தமிழர்களை அண்ணல் அம்பேத்கரை ஏற்க வைப்பது முடியாத காரியம். ஆனால் ராமசாமியையும் பிரபாகரனையும் சேரிக்கு கொண்டு வருவது ஈஸி. தற்போது திருமா அதைதான் செய்து கொண்டு இருக்கிறார். அண்மையில் அவரது புது பிரச்சாரம், அண்ணல் அம்பேட்கருக்கு சிலை வைக்கும் இடத்தில் எல்லாம் ராமசாமிக்கு சிலை. யாருக்கு வேண்டும் இந்த ராமசாமி? எங்களுக்கா ஜாதி தமிழர்களுக்கா?  

நல்ல வேலை இப்போது அறிவாயுதம் ஏந்துங்கள் என்று அண்ணலை போதிக்கிறார். பிரபாகரன் வழியில் புலிகள் ஆகுங்கள் என்று சொல்லுவதை நிறுத்தி உள்ளார். வாழ்த்துக்கள். வாள் ஏந்துவது எங்கள் கொள்கை அல்ல. அரசியல் வழியே அண்ணல் கட்டியது. ஆனால் அண்ணல் காட்டியது தலித் அரசியல். தமிழ் தேசிய அரசியல் அல்ல. 

நாங்கள் தலித் வெறியர்கள். இருந்து விட்டு போகிறோம். தலித் மக்கள் தான் முழுக்க முழுக்க ஆதிக்க சக்திகளால் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். எல்லா சோ கால்டு பொது பிரச்சனைகளிலும் (ஈழம் உட்பட) எங்கள் மக்கள் தான் விக்டீம். அதனால நங்கள் தலித் வெறியர்கள் என்பதில் அசிங்கம்  ஒன்றும் இல்லை. தலித் பிரச்சனையை கையில் எடுத்தால் எல்லா பிரச்சனைகளும் அதில் அடங்கும். இதைதான் அண்ணல் செய்தார் இன்று சகோ மாயாவதி செய்து கொண்டு இருக்கிறார்.

நாங்கள் யாருக்கும் பாடம் எடுக்கவில்லை. எங்கள் சம கால அரசியல் நடவடிக்கைகளை பதிவு செய்கிறோம். விமர்சனம் எதிர் அரசியலை எதிர் கொள்ள முடியவில்லை எனில் அரசியல் செய்ய முடியாது. 


அண்ணல் அம்பேத்கரை மட்டும் பேசுகிறீர்களா? கூடவே ரம்சாமியிசமும், பிரபாகநிசமும் பேசிக்கொண்டு இருக்கிறீர்களா? அண்ணலை பேசி இரண்டு அடி முன்னால எடுத்தா ராமசாமியும் பிரபகனும் மூனு அடி பின்னால கொண்டு வந்து விடுவார்கள். 

No comments:

Post a Comment