Friday, January 11, 2013

தூ தூ தூ தூதூ தூதூ தூதூ தூதூ தூ.... பொங்கல் தமிழர்களின் திருநாளாம்.  இது போல ஒரு கேவலமான பண்டிகை உலகத்தில் எங்கேயும் இருக்காது. ஜாதியம், ஆணாதிக்கம்,  பண்னைத்தனம் எனும் அடிமைத்தனம் எல்லாவற்றின் மொத்த உருவம்தான் இந்த  பொங்கல் பண்டிகை. "அம்மா" "தாயே" "பொங்கலோ பொங்கல்" பழைய சாதம் பழைய துணி இருந்தா கொண்டுங்க தாயே என்று நாம மக்கள் கையேந்தி பிச்சை எடுத்த நாள். ஜாதி தமிழ் நாய்கள் கொடுக்கும் அறையனாவுக்கும் காலனாவுக்கும் எட்டனாவுக்கும் நம் மக்கள் கொட்டடிக்கவும், பறையடிக்கவும், புலியாட்டம் ஆடவும், கும்மி அடிக்கவும்,  கரகாட்டம் ஆடவும் ஓடிய நாட்கள். அப்படி ஆடி பாடி அவர்களை மகிழ்விக்கும் போது அவர்கள் படுத்திய பாடு இருக்கிறதே அது கொஞ்சம் நஞ்சம் இல்லை. பெண்களின் அங்கங்களை தொட்டு பார்ப்பது தடவி பார்ப்பது இடுப்பை கிள்ளுவது ஒத்த ரூபாயை வைத்துக்கொண்டு பெண்களின் மாராப்பை விளக்கி பார்ப்பது என்று இந்த சூத்திர பண்ணைகள் பண்ணிய (பண்ணும்) அட்டுழியம் இருக்கே அது தாங்காது. நிலம் இருப்பவனுக்கு நிலத்தை வைத்து ஆயிரம் ஆயிரம் சம்பாதித்த சூத்திர பண்ணைகள் அன்று பட்டு ஆடை உடுத்தி தேரில் வளம் வந்ததை நினைத்து கொண்டாடலாம். பண்ணை அடிமைகளாக அவர்களிடம் இந்த நாளில் பிச்சை எடுத்ததை எப்படி சாமி கொண்டாடுவது. இந்த நாள் உழவர்களை மதித்த நாளோ அவர்களை வாழ்த்திய நாளோ இல்லை. ஆண்டைகளை வாழ்த்தி வாழ்த்து பாடிய நாள். பண்ணையார்கள் கொண்டாடிய நாள். பண்ணை அடிமைகள் பழைய சோறுக்கும் கிழிந்து போன துணிக்கும் அவர்கள் வீட்டு வாசலில் நின்ற நாள். இப்ப நம்ம சமூகத்தில் சில பண்ணைகள் கிளம்பி இருக்கிறார்கள். ஜாதி தமிழன்  இவ்வளவு என்ன செய்தானோ அதையே இந்த கூட்டம் செய்து கொண்டு இருக்கிறது. பணம் வந்தவுடன் அவனை போலவே ஒரு பட்டு வேஷ்ட்டி பட்டு சட்டை தலையில் பட்டு அங்க வஸ்திரம் போட்டு கொண்டு அப்புடியே "தேவர் மகன்" "சின்ன கவுண்டர்" ஸ்டைலில் வராங்க பாருங்க. இந்த புது பண்ணைகளுக்கு தெரியுமா அவர்கள் மூதாதையர் இந்த நாளில் அனுபவித்த (இன்னும் அனுபவிக்கும்)  வலியும் வேதனையும். போங்கடா நீங்களும் உங்கள் தமிழர் திருநாளும். எமக்கு திருநாள் ஏப்ரல் 14 என்னை விடுவித்த நாள். அடிமை விலங்கை உடைத்த நாள். ஆண்டை அடிமை இல்லை என நிருபித்த நாள் . அதை விட சிறந்த நாள் எம் வாழ்வில் இல்லை. அதுவே சாக்கிய திருநாள். 

No comments:

Post a Comment