Wednesday, January 16, 2013

"சாக்கையர்களை பறையர் பறையரென்று இழிவு கூறி தலையெடுக்கவிடாமல் நசித்து விட்டபடியால் அவருடைய (சாக்கிய முனி) சரித்திரங்கள் வரிசையாவற்றும் சிதறுண்டு விட்டது. அந்தந்த தேசங்களில் அவர் நிருவானமடைந்த நாளை எந்தெந்த காலங்களில் கொண்டாடினார்களோ அந்தந்த சரித்திரங்களின் படிக்கும் அவருடைய கட்டளைகளை மலைகளில் வரைந்திருக்கும் எழுத்து இலக்கியங்களில் படிக்கும் 2500-2600 வருஷங்களுக்கு உட்பட்ட அவர் பிறந்த நாளைக் குறிப்பிட்டு வருகிறார்கள். ஆனால், அவர் பிறந்து வளர்ந்த இத்தேசத்து கடைச்சங்கவித்துவான்களில் ஒருவராகிய வணிகசாத்தன் இயற்றியுள்ள பஞ்சகாவியங்களில் ஒன்றாகிய மணிமேகலை என்னும் சரித்திர ஆதரவின்படிக்கு ஒன்றாகிய மணிமேகலை என்னும் சரித்திர ஆதரவின்படிக்கு அவர் பிறந்தது இந்த விகாரி வைகாசி மாதம் பௌர்ணமி வரையில் 3384 வருடமாகிறது." பண்டிதர் அயோத்திதாசர் (1899 க்கு முன்பு எழதப்பட்டது) 

No comments:

Post a Comment