Saturday, January 5, 2013

சில வருடங்களுக்கு முன்னர் திருவண்ணாமலை மாவட்ட கலக்டரின் கெஸ்டாக விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தபோது அரசு அதிகாரிகள் எப்போதும்  விருந்தினர்களை கவனிப்பது போல என்னையும் கவனித்துக்கொண்டார்கள். அந்த கவனிப்பில் ஒரு அங்ககம் அங்குள்ள முக்கிய இடங்களை எல்லாம் சுற்றி பார்ப்பது. என்னை அவர்கள் அருணாச்சலேசுவரர்  கோயிலுக்கு அழைத்து சென்றார்கள். அவர்கள் விருப்பத்திற்காகவும் சும்மா வேடிக்கை பார்க்கும் மனோ நிலையில் நான் போய்க்கொண்டு இருந்தேன். நான் அங்கு இருந்த சிலைகளை வணங்காமல் அவர்கள் கொடுக்கும் குங்குமம் பொட்டு இவற்றை வாங்கி நெற்றியில் வைத்துக்கொள்ளாமல் போவதை பார்த்து அவர்களுக்கு மிகவும் தரும சங்கடம். கடைசியில் மூலஸ்தானத்துக்கு போனோம். சிறப்பு விருந்தினர் என்பதால் சிறப்பு வழி அரசு மரியாதை. நம்ம பேரை சொல்லி என்னுடன் வந்த அரசு ஊழியர்கள் தங்களுக்கு லாட்டரி சீட்டு அடித்தது போல ஒரே குஷி. மூலஸ்தனத்துக்கு உள்ளே போய் ஏதோ கடவுளை நேரில் பார்ப்பதை போல ஒரே மகிழ்ச்சி. அவர்கள் சந்தோஷத்தை எதுக்கு கெடுக்கணும் என்று நானும் போய்க்கொண்டு இருந்தேன். உள்ளே போகும்போதே, மாலை மரியாதை எல்லாம் செய்வார்கள் உங்களுக்கு பிடிக்க வில்லை என்றாலும் வாங்கி எங்களிடம் கொடுத்து விடுங்கள் என்று வேண்டுகோள். நானும் மலையை வாங்கி அவர்களுக்கு கொடுத்தேன். அதுக்கு அப்புறம் ரமணரின் ஆசிரமம் சென்றோம். நான் ஏற்கனவே ரமணர் பற்றி படித்து  இருந்தேன் ஆனால் அன்றுதான் அங்கு முதன் முறை சென்றேன். சென்ற எனக்கு அங்கு உட்க்கார்ந்து தியானம் செய்ய வேண்டும் என்ற மன நிலை. வந்தவர்களிடம் தியானம் செய்ய வேண்டும் என்றேன். அங்கு ஒரு ஒரு மணி நேரம் தியானம் செய்து விட்டு நான் எப்போதும் தியானம் முடித்து மும்முறை வணகுவது போல வணங்கினேன். என்னோடு வந்தவர்களுக்கு ஒரே ஆச்சரியம். என்ன உண்மையான கடவுள் கோயிலுக்கு உள்ளே இருக்கிறார். அவரை வாணங்காமல் இங்க வந்து ரமணரை இப்படி விழுந்து விழுந்து கும்புடுகிறேர்களே என்று கேட்டனர். எனக்கு ஒரே சிரிப்பு அவர்களை நினைத்து மட்டும் அல்ல புத்தரின் சிலைக்கு முன்னர் நாம் மும்முறை விழுந்து வணங்குவதை  பார்த்து நாம் எதோ படைப்புக்கடவுளை வணகுவது போல வணகுவதாக நாத்திக கூட்டம் சொல்லி திரிகிறதே அவர்களையும் நினைத்துத்தான் சிரித்தேன். அவர்களிடம் சொன்னேன். உள்ளே கோயிலில் இருக்கும் கடவுள் உண்டா இல்லையா என்று நமக்கு தெரியாது. ஆனால் ரமணர் போன்ற நல்ல மனிதர்கள் இந்த மண்ணில் வாழ்ந்து நல்ல பண்புகளை விதைத்து விட்டு சென்று உள்ளனர். நான் இங்கு ரமணர் எனும் தனி மனிதரை வணங்க வில்லை அவரை போன்ற நல்ல மனிதர்களின் பண்புகளை வணங்கினேன். நான் எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று வேண்டவில்லை. அவர்களது உயர்ந்த செயல்களுக்காக அவர்களுக்கு மரியாதை செய்தேன்  இப்படி வணகும்போது நமக்குள் இருக்கும் நான் எனும் அகந்தையும் உடைகிறது என்று சொன்னேன். ,  

No comments:

Post a Comment