Saturday, January 26, 2013

காந்தியை கொன்ற ஒரு கொலை வெறி பிடித்த ஆர் எஸ் எஸ் மிருகத்தை நல்லவனாக்கும் முயற்சிதான் ஹேராம். பரம்பரை கொள்ளையர்களை போற்றி பாடியது தேவர் மகன், மரணதண்டனைக்கு எதிரான படம் எனும் பெயரில் கொலைகார கூட்டத்தினை பெருமை படுத்ததிய முயாற்சிதான் சண்டியர், நாத்தீக இந்துக்களை போற்றி பாடியது அன்பே சிவம், லட்சக்கணக்கான தலித் பெண் குழந்தைகள் பாலியல் தொழிலாளிகளாகவே பிறந்து பாலியல் தொழிலாளிகளாகவே சாகும் அவலத்தை புரியாத அதே சமயம் நடுத்தர தமிழ் குடும்பத்தில் பிறந்த ஒரு இந்து குழந்தை பாலியல் தொழிலுக்குள் போய் அவலப்படுவதை உணர்ச்சி பொங்க காட்டியதுதான் மகாநதி. இன்று அவர் சொல்லும் தீவிரவாத எதிர்ப்பு எனும் சினிமா தீவிரவாதத்தை குறைக்க போவதில்லை. மாறாக இசுலாமியர்கள் என்றால் தீவிர வாதிகள் என்று தொடர்ந்து முத்திரை குத்தும் சினிமாக்களில் இதுவும் ஒன்றாகி இந்துக்களின் மனதில் ஏற்க்கனவே ஆழமாக உள்ள விஷத்தை அதிகப்படுத்துமே ஒழிய மக்களின் மனதில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தாது. சமூகத்தில் பெரும்பான்மை மக்களை சந்தோஷப்படுத்தி சிணிமாவை வியாபாரம் செய்யும் சராசரி மனிதர்தான் கமல். அவரை பெரிய சீர் திருத்தவாதி, ஜாதி மதம் கடந்தவர், அறிவுக்கொழுந்து என்று ஏத்தி விடுவது "அப்புராணி" இந்து மனோ நிலைதான். இன்னைக்கு சமூகத்துக்கு தேவையானது தீவிரவாத எதிர்ப்பு அல்ல. இசுலாமியர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் கலாச்சார தீவிர வாத எதிர்ப்பே.  

No comments:

Post a Comment