Monday, January 21, 2013

தலித்தியம் பேசி இரண்டு ஸ்டெப் முன்னால கூட்டீட்டு போய் தமிழ் தேசியம் பேசி பத்து ஸ்டேப் பின்னால இழித்து விடுவாரு. அதுக்கு பேசாம போயி ரெஸ்ட் எடுக்கலாம். 

திருமா பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பது தப்பு என்று  யாரும்  சொல்லவில்லையே. 

திருமா எனும் நதியை நகர்த்தாமல் தமிழ் தேசியத்தை வேறு அறுக்க முடியாது. 


நிச்சயமா நான் தமிழன் இல்லை. நான் பறையன் - சாக்கிய பறையன் ....

அதான் உங்கள் ஆட்சியாளர்கள் தினிக்கிறார்களே அப்புறம் எப்புடி தமிழ் தெரியாமல் "தமிழ்" நாட்டில் இருக்க முடியும்.  


"தமிழ் சொந்தங்களே" - யாருக்கு யார் சொந்தம்? அவன் பெண்ணையோ பிள்ளையையோ பாத்தாலே வெட்டுவேன் என்கிறான். அவன் எனக்கு சொந்தமா? 

சகோதரர் அம்பேத்வளவன் பட திறப்பு விழாவில் தான் அவர் தமிழ் சொந்தகளுக்கு அழைப்பு கொடுக்காமல் பேசினார். 

இந்திய தேசியத்தை காக்க நாம் தமிழ் தேசியத்தை எதிர்க்க வில்லை. மொழிகளை கடந்து பறந்து விரிந்து உள்ள சேரி வாழ் சாக்கிய குடிகளை மொழி தேசியம் எனும் பெயரில் பிரிக்கும் தமிழ் தேசியத்தை எதிர்கிறோம். மொழிவழி தேசியம் என்பது எமது மக்களை பிரித்து சின்னாபின்னப்படுத்தும். மொழி வழி தேசியம் என்பது பல மொழிகளை உள்ளடக்கிய தலித் தேசியத்துக்கு எதிரானது. 

நம்மாளு ஒருத்தர் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு இருக்கிறாரே அவர் தான். 

கலாச்சாரம் மொழி மத வழி தேசியம் என்பது கற்பிதம். மக்களின் துன்பத்தை மையப்படுத்தி உருவாகும் தேசமே தேசம் என்கிறார் அண்ணல் அம்பேத்கர். தலித்துக்களின் தேசியம் என்பது ஒடுக்கு முறையை மையமாக வைத்து உருவாகும் தேசியம். நாடு மற்றும் மாநிலம் என்பது அரசியல் ஆட்சி அதிகாரம் நிருவகிக்கும் அமைப்பு முறை சாதனங்கள். தமிழ் நாடு எனும் மாநில அரசியல் அதிகார ஆட்சி முறைகளில் அம்மாநிலத்தை    சேர்ந்த மக்கள் என்ற முறையில் நமது தலையீடு அவசியம். நாமும் இந்திய அரசின் பிரஜை என்பது போல மாநிலத்தின் பிரஜை. ஆனால் தமிழர் எனும் கற்பிதம் நம் மீது திணிக்கப்பட்டு நமது மக்கள் கலாச்சார பண்பாட்டு மொழி ரீதியாக பிரிப்பதை நாம் அனுமதிக்க மாட்டோம். சேரி மக்கள் "கலாச்சார"  ரீதியில் ஒன்று இல்லை என்றே வைத்துக்கொள்வோம். ஜாதி தமிழர்களும் சேரி வாழ் மக்களும் கலாச்சார ரீதியில் ஒன்றானவர்களா?  

நாத்தீகம் பேசிக்கொண்டு இந்துக்களின் ஆணாதிக்க, ஜாதிய, சடங்கு சம்பரதாயங்கள் மூட பழக்கங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய பொங்கலை தமிழர் பண்டிகை என்று சொல்லிக்கொண்டு கொண்டாடும் நார வாய் நம்மை பார்த்து சொல்லுவதை கேளுங்கள். 

No comments:

Post a Comment