Saturday, January 12, 2013

தமிழ் பாரம்பரியம் தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு என்று பேசிக்கொண்டு "தமிழர் திருநாள்" "பொங்கல்" "தமிழ் புத்தாண்டு" என்று கொண்டாடும் கூ முட்டைகளுக்கு."தமிழர் திருநாள்"  "பொங்கல்" என்பதும் "தமிழ் புத்தாண்டு" என்பதும் 2000 வருஷத்துக்கு முன்னால கொண்டாடிநீர்களா இல்லையான்னு கேக்கல. வெள்ளைகாரன் கிரிஸ்த்துமஸ்சு புத்தாண்டு தினங்களை இந்தியாவில் கொண்டாடும் முன்னர் (அ) ஒரு இரு நூறு வருசத்துக்கு முன்ன சங்கராந்தி பண்டிகைக்கு பொங்கல் எனும் பெயர் இருந்ததா? தை முதல் நாளை "தமிழர் திருநாள்" என்றோ "தமிழ் புத்தாண்டு" என்றோ "பொங்கல்"  என்றோ கொண்டடியதாக ஏதாவது அறிகுறி இருக்குதா? நீங்கதான் நிறைய நூலாதாரங்கள் வைத்து இருப்பீர்களே.  "தமிழர் திருநாள்" என்றோ "தமிழ் புத்தாண்டு" என்றோ "பொங்கல்"  என்பதெல்லாம் பாரம்பரியமா தலை முறை தலை முறையா வந்த சொல்லாடல்களா? ஆங்கிலே எதிர்ப்பு சுதேசி இயக்கம் ஆரிய எதிர்ப்பு  எனும் அரசியல்களுக்காக உருவாக்கப்பட்ட சொல்லாடல்களே இவை எல்லாம். ஒரு நூறு வருஷத்துக்குள்ள அரசியல் ஆதாயத்துக்காக ஆதிக்க ஹிந்துத்துவ திரவிடதுவ தமிழிய  சக்திகளால் உருவாக்கப்பட்ட பண்டிகைகள். திலகர்  விநாயகர் சதுர்த்தியை தேசிய அளவில் கொண்டாட வலியுரித்தியது போல மக்கள் மீது திணிக்கப்பட்ட பண்டிகைகள். சங்கராந்தி என்பது வட நாட்டு பண்டிகை அல்ல அது சாக்கிய பூர்வ குடிகளின் பண்டிகை. சங்க அறர்  (புத்தர்) அந்தி அடைந்த நாளையே பூர்வ குடிகள் சங்கராந்தி என்றும் கொண்டாடினார்கள் என்கிறர் பண்டிதர் அயோத்திதாசர். யார் வரலாற்றை மறைக்க இந்த பெயர் மாற்றங்கள். 

No comments:

Post a Comment