Tuesday, January 15, 2013

நான் என் வாழக்கையில் நூற்றுக்கணக்கான (கம்மி ஆயிரம்னு கூட சொல்லலாம்) படங்கள் பார்த்து இருக்கிறேன். அந்த படங்களில் எல்லாம் கிடைக்காத ஏதோ ஒரு மன நிறைவு முதல் முறை எனக்கு கிடைத்தது அட்டக்கத்தி படத்தில்தான். அப்படியெல்லாம் படம் வராதா என்று எத்தனையோ முறை ஏங்கி இருக்கிறேன். பொங்கல் தீபாவளிக்கு யாரவது புகழ் பெற்றவர்கள் சினிமாக்காரர்கள்  பேசும்போது அது நம்மை பற்றியதாக இல்லையே என்று நினைத்தது உண்டு. பெரும்பாலும் சம்பந்தம் இல்லாமல் இருக்கும். படம் மட்டும் இல்லை ரஞ்சித்தின் இந்த சந்திப்பும் நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது. நமது முன்னோர்கள் போட்ட விதை முளைத்து இன்று மரமாக இருப்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது. மீடியா மூலம் நம்முடைய உணர்வுகளை சிந்தணைகளை பதிவிட்டது மட்டும் அல்லாமல் அனைவருக்கும் மனிதத்தை ஒரு மெசேஜாக கொடுத்த விதம் அற்புதம். ரஞ்சித் போன்ற மானுட நேய சிந்தணையாளர்கள் இலக்கிய கலையுலகிற்கு வருவது நமக்கு மட்டும் அல்ல ஒட்டு மொத்த சமூகத்துக்கும் விடிவுதான். அந்த சாக்கிய சிங்கத்துக்கு எனது மனம் நிறைந்த ஜெய் பீம் வாழ்த்துக்கள். 

No comments:

Post a Comment