Friday, January 4, 2013

கடவுள் என்பதும் பகுத்தறிவாளர்  என்பதும் ஒரே அர்த்தத்தை குறிக்கும் இரு சொற்கள். ஒருவர் அறிவை பகுத்து அறிந்து உள்ளுணர்ந்து மெய் பொருளை அடையும்போது உள்ளதை கடந்து கடவுள் ஆகிறார். ஆதி காலத்தில் புத்தரையும் அவர் வழியில் அரஹத்துக்கலான அடியார்களையும் குறிக்க பயன்படுத்திய சொற்களே கடவுள், பகவன், தெய்வம், பகுதறிவாளன், பேரறிவாளன் என்பது எல்லாம். எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு என்று பகுதறிவை விளக்கிய சாக்கிய வள்ளுவ நாயனார் கடவுள் வாழ்த்து பாடியது "உலகைபடைத்தவன்" எனப்படும் "கடவுளுக்கு" அல்ல மாறாக உள்ளத்தை உய்த்து உணர்ந்த ஆதிபகவன் ஆதியங்கடவுள் அருமறை பயந்த சாக்கியமுனி புத்தருக்கே என்கிறார் பண்டிதர் அயோத்தி தாசர்  இந்த உண்மையை உணராத நாத்தீக கூட்டம். பகுத்தறிவு என்பது நாத்தீகம் கடவுள் மறுப்பு என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு இருக்கிறது. 

No comments:

Post a Comment