இருபதாம் நூற்றாண்டில் ஒருத்தர் "காட்டுமிராண்டி" எனும் பதத்தை பயன்படுட்டினாராம். அந்த "பகுத்தறிவு" பகலவனுக்கு அப்போது இருந்த அறிவு அவ்வளவுதான். நாம் இப்போது இருபத்தி ஒன்னாம் நூற்றாண்டில் இருக்கிறோம். நவீனத்துவம் போயி பின் நவீனத்துவம் போயி இப்போ ஏதேதோ பேசிட்டு இருக்கோம். இந்த காலத்திலே. இன்னும் சிலர் அவர் சொன்னாரு அவர் சொன்னாருன்னு பகுத்தறிவுக்கு ஒவ்வாத "காட்டுமிராண்டி" எனும் வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். இது காட்டில் வாழும் பழங்குடி மக்களுக்கு எதிரான சொல் இதை பயன்படுத்தக்கூடாது எனும் அடிப்படை அறிவு கூட இல்லாத இவர்கள் எப்படி பகுத்தறிவு வாதிகளாக உள்ளனர் என்று தான் தெரியவில்லை.
No comments:
Post a Comment