Thursday, December 20, 2012

நாம எதை பேசணும் எதை பேசக்கூடாது என்று ஜாதி இந்து மீடியாக்களே நிர்னயிக்கின்றன. பல வருடங்களாக சாக்கிய (தலித்) மனித உரிமை அமைப்புகள் வன்கொடுமைக்கு எதிராகவும் முக்கியமாக தலித் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கத்து கத்து என்று கத்திக்கொண்டு இருக்கின்றன. வன்கொடுமைகள் நடக்கும்போது எல்லாம் நாம பத்திரிக்கை பத்திரிக்கையா படி ஏறி போய் இந்த செய்திய போடுங்க என்று சொல்லுவோம். நாம கொடுத்துட்டு வரும் அறிக்கை நாம வெளியே வருவதற்கு முன்னரே குப்பை தொட்டிக்கு வந்து விடும். தலித் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை சின்னதா கட்டம் போட்டு ஒரு மூலையில் வெளியுடுவதை கூட விரும்பாத இந்த தேசிய மீடியாக்கள் நமது உள்ளத்தை உணர்வை எப்படி தூண்டினார்கள் பாருங்கள். நிறைய தலித் பெண்கள் கூட இரண்டு மூன்று நாட்கள் சாப்பிடவில்லை. இப்படி நாம தலித் பெண்களின் நிலையை நினைத்து சாப்பிடாம இருக்கணும்னா தினம் தினம் சாப்பிடாம தான் இருக்கணும். இதை நான் எழுதும் இந்த வேளையில் கூட இந்தியாவின் எதோ ஒரு மூலையில் ஜாதி இந்து வெறி நாயால் பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டு தலித் பெண்  கொடுக்கும் குரலை கேட்க முடிகிறது. 

No comments:

Post a Comment