Sunday, December 16, 2012

‎'இந்துக்களுக்கு ஆபத்து' என்று பிரச்சனையை எழுப்பி பெரும்பான்மை இந்துக்களின் உணர்வுகளைத் தூண்டி ஒட்டு அரசியல் செய்து கொண்டு இருக்கிறது ஹிந்துவ கட்சிகள். அதே வேலையை நாம் தமிழர் நாம் திராவிடர் என்று தமிழ் நாட்டில் உள்ள பெரும்பான்மை (தமிழ் திராவிட) மக்களிடம் மொழி மற்றும் இன அரசியல் செய்து கொண்டு இருக்கிறது திராவிட மற்றும் தமிழ் தேசிய இயக்கங்கள். இதையே தமிழ் நாட்டில் உள்ள பெரும்பான்மை ஜாதி இந்துக்கள் வன்னியர் ஒட்டு அந்நியருக்கு இல்லை என்றும் தேவார் ஆட்சி அமைப்போம் என்றும் சொல்லிவருகின்றனர்.  ஹிந்துத்வா தமிழ் தேசிய திராவிட மற்றும் பெரும்பான்மை ஜாதிய கட்சிகள் அணைத்தும் சிறுபான்மை  மதம், மொழி, இன சமூக மக்களுக்கு எதிராக பெருமபான்மை சமூகத்தின்  ஆதிக்க அரசியலை நிர்ணயிக்க முயல்கின்றனர். இவை அனைத்தும் சிறுபான்மை சமூகங்களுக்கு ஊரு விளைவிக்கும் என்பதும் சமூக நல்லிணக்கத்தை அழித்தொழிக்கும் என்பதாலும் மனித நேயம் உள்ள மக்களும் ஜன நாயக சக்திகளும் தமிழ் நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களின் நலன் பேன ஒருங்கிணைத்து குரல் கொடுக்க வேண்டும்.  தமிழ் நாட்டில் உள்ள திராவிடர் அல்லாதவர்கள், தமிழ் மொழி பேசாத மக்கள், இந்து அல்லாதவர்கள், சாக்கிய (தலித்) சமூக மக்கள், கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள், ஜன நாயக வாதிகள், கம்யுனிஸ்டுகள் அணைவரும் ஒருங்கிணைந்து பெரும்பான்மை ஆதிக்க சமுகங்களுக்கு (ஜாதி தமிழர்கள், ஜாதி திராவிடர்கள், ஜாதி இந்துக்கள்) எதிராக குரல் கொடுக்க வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள பார்ப்பனர்கள் ஹிந்து தமிழ் திராவிட  அடையாளத்துடன் பெரும்பான்மை சமூக மக்களுடன் சேர விரும்புகிறார்களா ஆல்லது நாங்களும் சிறுபான்மையினர் என்று சிறுபான்மை கூட்டமைப்பில் சேர விரும்புகிறார்களா என்று முடிவு செய்ய வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள சிறுபான்மை சக்திகள் எல்லாம் ஒருங்கிணைந்தால் பெரும்பான்மை சமுகத்தின் ஆளுமையில் இருந்து நம்மை பாது காக்கும் வழிகளை நாம் அமைத்து போராடலாம். 

No comments:

Post a Comment