Tuesday, December 25, 2012

மேற்க்கத்திய நாடுகளில் சாதரணமாக எடுத்துக்கொள்ளும் மனம் உடல் சார்ந்த உணர்வுகளில் ஒன்று தான் இந்த காதல் காமம் என்பதும். பிடிக்கும் என்பதோடு கொஞ்சம் காமம் கலந்தால் காதல் ஆகிறது. காமம் இல்லாமல் பிடித்தவர்களோடு அன்போடு பழகினால் நட்பாக தொடர்கிறது. ஆனா நம்ம "செந்" தமிழ் நாட்டில்  அதுக்கு புராணம் இதிகாசம் காவியம் கதை கவிதை பாடல் என்று எழதி சினிமா எடுத்து என்னமா பில்டப்பு. காதலுக்கு புனிதம் கற்பித்து அதுக்கு கற்பு வைத்து இவுங்க போடுற சீனு இருக்கே தாங்கள சாமி. தமிழ் நாட்ல இது ஒரு மெண்டல்  டிசார்டராவே (disorderஆயிடுச்சி. இதனால கொலைகள் தற்கொலைகள்ன்னு போயிட்டு இருக்கு. சரியான வயதில் மாணவர்களுக்கு உடல் மனம் சார்ந்த மாற்றங்களை பற்றிய பாலியல் கலவியல் மனோவியல் சம்பந்தமான கல்வியறிவை பரப்பி மன அலைகளையும் மன ஒட்டங்களையும் எப்படி சரியான முறையில் தனி மனித நலனுக்காகவும் சமூக நலனுக்காகவும் பயன்படுத்துவது என்பதை புரிய வைக்க வேண்டியது மிகவும் அவசியம். காதலும் காமமும் மனிதனின் இயற்கை குணங்கள் அதை எப்படி அணுகுவது என்று தெரிந்து கொள்வது வாழும் கலை. இதை தெரிந்து கொள்ளாமல்தான் நிறைய பேர் காதலிக்காமலும் காதலித்தும் கல்யாணம் செய்து கொண்டும் செய்து கொள்ளாமலும் சேர்ந்தும் பிரிந்தும் மன அமைதி இல்லாமலும் மன அழுத்தத்துடனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment