Wednesday, December 26, 2012

கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் திராவிடம் தமிழியம் என்று பேசிக்கொண்டிருக்கும் இந்த கூட்டம் ராமதாசின்  ஜாதி அரசியலை எதிர்க்குதாம். வன்னியர் அரசியல் என்பது தலித் மக்களுக்கு எதிரானதாக இல்லாமல் அது திராவிட தமிழ் தேசிய பண்ணைகளுக்கு எதிராக போகும்போது நாம் பாட்டாளி மக்களோடு கூட்டு சேருவோம்.  வருங்காலத்தில் திராவிடம் தமிழியம் என்று பேசி யாரும் கொள்ளை அடிக்க முடியாது. அணைத்து சமூகங்களும் தங்கள் நிலைக்காக தங்கள் அடையாளத்துடன் போராட வருவார்கள். அனைவரும் நாட்டின் வளங்களில் தங்களுகான பங்கை கேட்பார்கள். இதை ராமதாஸ் புரிந்து கொண்டார். தமிழ் தேசிய அரசியல் பண்ணிட்டு இருந்தால் வன்னியர் எல்லோரும் சீமானுக்கு பின்னால போயிட்டு இருக்காங்க என்று புரிந்து கொண்டார். இனியும்  வன்னியர் அரசியல் பண்ணவில்லை என்றால் அவர் அரசியலில் இருந்து அவுட் என்பது அவருக்கு புரிந்து விட்டது. இதை புரிந்தவர்கள் வருங்கால அரசியலில் இருப்பார்கள். புரியாதவர்கள் அவுட். தமிழியம் திராவிடம் என்பதெல்லாம் இருபத்து ஒன்னாம் நூற்றாண்டுக்கு ஒத்து வராது தம்பிகளா.

No comments:

Post a Comment