Friday, December 21, 2012


ஒரு முறை கருணாநிதி கருணாநிதின்னு பேசிக்கிட்டு இருந்தேன். எங்க சித்தப்பாவுக்கு என் மேல கோபமா அப்படி ஒரு கோபம். நேரில் கோபத்தை காட்டாமல், எங்க சித்தி கிட்ட போய் சொன்னார் அவர் எவ்வளவு பெரியவர் அவரை இப்படி மரியாதை குறைவா இவன் பேரை சொல்லிகிட்டு இருக்கானே. எங்க சித்தி வந்து என்னிடம் அவர் பெரியவர்-பா எதுக்கு அப்படி சொல்றே. கலைஞர்னு சொல்லு சித்தப்பா கோச்சுக்குறார் என்றார்கள். என் சித்தி கிட்ட திருப்பி கேட்டேன். சித்தி அண்ணல் அம்பேத்கரை நாம் எல்லோரும் அம்பேத்கார்னு தானே சொல்றோம் அவர் கூட வயதில் பெரியவர்தனே.   

உலகமே காந்திய மகாத்மான்னு சொன்னபோது மகாத்மாவாவது மண்ணாவது. காந்தி எனக்கு காந்திதான்னு, மிஸ்டர் காந்தின்னு சொன்னவர் நமது அண்ணல். என்னைக்கு  நாம ராமசாமியை ராமசாமின்னும் கருணாநிதியை கருனாநிதின்னும் பிரபாகரனை பிரபாகரன்னும் வீரமணியை  வீரமனின்னும் சொல்ல பழகுறோமோ அப்பத்தான் ஆழ் மனதில் உள்ள பண்ணை அடிமை மனோ நிலை நம்மை விட்டு அகலும். இதை ஏற்றுக்கொள்ளும் மனோ நிலை எப்பது இந்த ஆண்டைகளுக்கு வருகிறது அப்போதுதான் அவர்கள் மனதில் இருந்தும் பண்ணை மனோ நிலை போகும். அந்த ஆண்டைகள் எல்லோரும் எங்களை பெயரை விட்டே கூப்பிடுங்கள் என்று சொல்லும் நாள் வரவேண்டும்.

No comments:

Post a Comment