Tuesday, December 18, 2012

கேம்பஸில் பஸ்சுல வந்துட்டு இருந்த ஒரு பெண்ணிடம் ஒரு பையன் தப்பா நடந்து கிட்டான். பஸ்சு கேம்பசுக்கு உள்ள வந்த உடனே அவனை பஸ்ஸுக்குள்ள இருந்து இழுத்து போட்டு அங்க நின்னுட்டு இருந்த பசங்க எல்லாம் சேந்து சாத்து சாத்துன்னு சாத்திட்டு இருந்தாங்க வாயெல்லாம் ரத்தம். கிட்ட போன எங்க கூட்டத்துக்கு தலித் ஆண்டெனா தலை தூக்கியது. அடி வாங்கிய பையன் பாக்க டீசண்டா இல்லை கூலிங் கிலாசு கண்ணாடி எல்லாம் இல்லை. ஏம்பா எதுக்கு இப்படி போட்டு அடிக்கிறீங்க செத்து கித்து தொலைய போறான்னு சொன்னோம். உங்க அக்கா தங்கச்சிக்கு இப்படின்னா சும்மா விடுவீங்கலான்னு டயலாக்கு வேர. அந்த பையன அடிச்சவங்க எல்லாம் எவ்வளவு யோக்கியனுங்கன்னு எங்களுக்கும் தெரியும். அவனுங்க கிட்ட போராடி அந்த பையன மீட்டு ஆட்டோவ்ள ஏத்தி போலிஸ் ஸ்டேஷன்ல கொண்டு போயி உட்டோம். பையன யாருன்னு விசாரிச்சா கிராமத்துல இருந்து வந்து கேம்பஸில் கன்ஸ்ட்டரக்ஷன் வேலை செய்யுற பையன். அவன் அந்த தப்பை செய்யவில்லை அவனுக்கு தண்டனை கொடுக்க கூடாது என்பது நமது வாதம் இல்லை. தவறுக்கு ஏற்ற தண்டனை கொடுங்க என்பது தான். போலிஸ் ஸ்டேஷன்ல குற்றவாளிகளை  போலிஸ் அடிச்சாலே டார்ச்சர் மனித உரிமை மீறல் என்கிறோம். தெருவில் போறவன் வருபவன் எல்லாம் அடிச்சா அது மனித உரிமை மீறல் இல்லையா? அவனை அடிச்சு இவுங்க எல்லாம் பெண்ணிய வாதிகள் ஆனாங்க. அவனை காப்பாத்தி போலிஸ் ஸ்டேஷன்ல கொண்டு போயி விட்ட நாங்க ஆணாதிக்கவாதிங்க. எங்கள மாதிரி ஆளுங்கலால தான் பொம்பள பொறுக்கிகள் அதிகமா நாட்ல பெருகிட்டு இருக்கங்கலாம். சொல்றவங்க எவ்வளவு யோக்கியர்கள் எப்படி எல்லாம் கேம்பஸில்  காதல் காம விளையாட்டு விளையாடிக்கொண்டு இருப்பவர்கள் என்பது எங்களுக்கும் தெரியும். கேட்டா இவுங்க எல்லாம்  பெண்களின் அனுமதியோடு தொடும் ஜென்டில் மேன்கலாம். அந்த கன்ஸ்ட்டரக்ஷன் வேலை செய்யுற பையனுக்கு எப்படி மென்மையா தொடுறதுன்னு தெரியலயாம். ஒரு தலித் பெண்ணை ரேப் செய்த ஜாதி இந்துவை கேள்வி கேட்பதை விட்டு விட்டு.  அவர் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் வசதியானவர் உன்னை ரேப் செய்யும் அளவுக்கு கேவலமான செயலை செய்து இருக்க மாட்டார். அவர் நினைத்தால் அழகான எத்தனையோ பெண்கள் அவரோடு வர காத்து இருக்கும் போது உன்னை போல ஒரு கூலி வேலை செய்யும் பெண்ணை அவர் ஏன் தொட வேண்டும் என்று நீதிபதிகளே கேள்வி கேட்கும் இதே நாட்டில் கன்ஸ்ட்டரக்ஷன் வேலை செய்யுற பையனுக்கு கிடைக்கும் நீதியை பாருங்கள் என்கிறோம். தலித் ஆனாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுடைய உடல் மீது நடக்கும் அத்து மீரல்களுக்கு அளவு இல்லை. 

No comments:

Post a Comment