Tuesday, December 18, 2012

நகரங்களில் பாலியல் பலாத்காரமாம் அதுவும் நாட்டின் தலை நகரில் நடக்குதாம். நாகரீகமா ஜீன்ஸ் போட்டுட்டு வசதியான வீட்டு புள்ளைங்க கவுரவமான குடும்பத்து பெண்கள் எல்லாம் பாதிக்கப்படுகிறார்களாம். முக்கியாமா ஜாதியில் மிகவும் உயந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கலாம். எல்லா மீடியாவும் போட்டி போட்டுக்கொண்டு பக்கம் பக்கமா செய்திகள் வெளிடிடுகின்றன. டி வி ய திறந்தா அது பத்தி தான் செய்திகள். பாலியல் வன்கொடுமை என்பது கொடுமையான ஒரு விஷயம் தான் செய்பவன் எல்லாம் அயோக்கியந்தான். ஆனால் நகரத்தில் நாகரீகம்  மிக்க மேல் தட்டு ஜாதி இந்து பெண்களுக்காக இவ்வளவு வரிந்து கட்டும் மீடியாக்களும் பெண்ணிய வாதிகளும் நடுநிலை வாதிகளும் தினம் தின்ம பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சாக்கிய (தலித்) பெண்களின் நிலையில் நடுநிலை தவறுவது ஏனோ? நகரத்தில் மேல் தட்டு பெண்களின் மேல்  இருப்பது காமம், ஆனால்  கிராமங்களிலும் நகரங்களில் வாழும் உழைக்கும் தலித் மக்களின் மீது காமத்துக்கு மேல் ஜாதியமும் வெறுப்பும் கலந்து இருக்கிறது. பொத்தாம் பொதுவா பெண்ணியம் பேசுவது எளிது. தலித் பெண்ணியம் பேசுவது சமூகத்தில் அவ்வளவு எளிதல்ல. இதை சொன்னால் பெண்ணை பெண்ணாக பாருங்கள் பாலியல் வன்கொடுமையின் வலி எல்லா பெண்களுக்கும் ஒன்றுதான் என்கின்றனர். அதைதான் நாமும் சொல்கிறோம், பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்படும் தலித் பெண்களுக்கும் அதே வலிதான், அதற்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.  அதை  பற்றியும்  பேசுங்கள். 

No comments:

Post a Comment