Saturday, December 8, 2012

((((((((லகரத்தி னின்றே ளகரமும் ளகரத்தினின்றே ழகரமும் தோன்றி யிருத்தலால், லகரம் நேரடியாகவோ ளகர வாயிலாகவோ ழகரமாய்த் திரிதலுண்டு.  எ-டு: மால் - மழை, ஏலா - ஏழா (பழங்குடி மக்கள் மனைவியை விளிக்கும் சொல்), கல் - கள் - காள் - காழ் (கருப்பு) நாலிகை (மூங்கில்) - நாளம் (உட்டுளை) - நாழி (உட்டுளைப் படி). ழகரம் லகரத்தின் மிகப் பிந்தியதாதலின், தமில் என்னும் லகர வீற்று வடிவம் அப் பெயரின் தொன்மையையும் உணர்த்தும். ஞா.தேவநேயப் பாவாணர்))))))) தள் என்றால் நிலம், நிலம் என்றால் மண், தளித் என்றால் மண்ணின் மைந்தர்கள் என்று சொன்னதற்கு.  தளித் எப்படி  தலித் ஆனது என்று கேட்டவர்களுக்கு. ஆதி மொழியாம் மகத (பாலி) மொழியில் ள், ழ என்ற எமாற்று வேலைகள் கிடையாது. தல் என்ற பாலி வார்த்தையே பின்னர் தமிழில் தள் ஆனது.  மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்  சொல்கிறார்  "ழ" என்பது பின்னால் வந்த எழுத்து என்று.   தமிழ் தமிழன் என்பது ஆதியில் தமில்  தமிலன் என்றுதான் சொல்லப்பட்டது என்கிறார். பாலி மொழி வார்த்தை தமில (தம்ம இல) என்பதே பின்னால் தமிழ் என்று ஆனது என்பது தமிழ் எனும் சொல்லின் உருவாக்கம்.  அது போலவே ஈழம் எனும் சொல்லும். அது பாலி மொழியில்  இல என்றே வழங்கப்படுகிறது. இல என்பதே இள என்றும் பின்னர் ஈழ (ஈழம்) என்று திரிந்திருக்க கூடும். இல என்பது தமிழில் ஈழம் ஆனது போல சிங்களத்தில் இலங்கை ஆனது.   

No comments:

Post a Comment