Monday, July 8, 2013

"நாம் தமிழர்" "நாம் திராவிடர்" எனும் உணர்வு உள்ளவர்கள் வெளியே போயிட்டா நல்லா இருக்கும்.

முதலில் நம் மக்களை தமிழ் தேசிய திராவிட மாயைகளில் இருந்து வெளியே கொண்டு வர திட்டமிடுவோம். இவை இரண்டும் ஒழியாமல் நமக்கிடையே ஒருங்கினைப்பு நமக்கான அமைப்பு இவை எல்லாம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. "நாம்" எனும் அடையாளம் இல்லாமல் சிதறி இருக்கும் நமது மக்களை "நாம்" எனும் அடையாளத்துக்குள் கொண்டு வரவேண்டும். தமிழ்  திராவிடம் எனும் பொய்களை பரப்பி "நாம்" நமக்கான  இலக்கை அடைவதில் இருந்து நம்மை விளக்கி கொண்டு செல்கிறது இந்த பெரும்பான்மை சமூகம். "நாம்"  நம்மை யார் என்று அடையாளப்படுத்துவது மிகவும் அவசியம். இங்கு 114 பேரை இணைத்து உள்ளீர்கள் அவர்கள் எல்லாம் யார்? இங்கு "நாம்" என்பதை எது நிர்ணயிக்கிறது. இதில் "நாம்" தெளிவா இருந்தால் அடுத்த நகர்வுக்கு போகலாம். நீங்கள் குறிப்பிடும் அந்த "நாம்" என்பதில் நான் இல்லை என்றால். நான் தானாக வெளியே போய்விடுவேன். இங்கு "நாம்" என்பது தலித் மக்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது எனில் "நாம் தமிழர்" "நாம் திராவிடர்" எனும் உணர்வு உள்ளவர்கள் வெளியே போயிட்டா நல்லா இருக்கும். 

No comments:

Post a Comment