Friday, July 5, 2013

இளையராஜா எதுக்கு ஜாதிய ஒழிக்கணும்.

இளையராஜா எதுக்கு ஜாதிய ஒழிக்கணும். 

இளையராஜா எனும் மனிதர் நம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு இருக்கிறார். சமூகத்தை ஜாதி இந்துக்களிடம் விற்று பிழைப்பு நடத்தவில்லை. ஆதிக்க ஜாதியினரும் ஆண்டைகளும் அவர் வீட்டு  வாசலில் நின்று பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கின்றனர். இளையராஜா என்பது ஒரு சரித்திரம் அது ஆயிரம் ஆண்டுகள் இசை உருவில் வாழ்ந்து கொண்டு இருக்கும். அந்த ஞானி நம்  சமூகத்தின் பலம்  சமூகத்தின்  சொத்து. அதை நாம்தான் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

#பிரபாகரன் சாதி ஒழிப்புக்கு என்ன செய்தாரு?#

அப்படியே அவர் ஜாதிய ஒழிச்ச்சாலும் அதனால்  நமக்கு என்ன நன்மை. அண்ணன் ஈழம் போனபோது அவர் தீண்டாமை எல்லாம் பார்க்காமல் கையை எல்லாம் தொட்டு பேசினராமே. 

#அவர் தமிழிசையின் சொத்து.#

எனக்கு மொழியே இல்லை. நத்திங் பட் விண்டு என்றெல்லாம். அவர் பாடி இருக்கார். அவர் தமிழ்ல மட்டும் பாடல பல மொழிகளில் பாடி உள்ளார். அவரை எதுக்கு  தமிழ் சாக்கடையில் போடுகிறீர்கள். 

 #இந்த எம்.சி.ராஜா, பண்டிதர் அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன் இவர்களை போன்ற பல தலைவர்கள் எல்லாம் சாத்திய வளர்த்தவங்க அப்படித்தானே ...#

எங்களுக்கு ஜாதியே இல்லை. எங்க கிட்ட வந்து எதுக்கு சாமி ஜாதி ஒழிப்பு பேசிட்டு இருக்கீங்க. போங்க உங்க டம்ளர் சொந்தங்களுக்கு ஜாதி ஒழிப்பு சொல்லிக்கொடுங்க. 

இளையராஜாவின் அருமை தெரியாமல் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். அவரால்  எத்தனை பறையர்களின் தலை நிமிர்த்து நிற்கிறது என்று  தெரியுமா. அவர் என் சமூகத்தில் பிறந்தார் என்பதே எனக்கு பெருமை. அதை விட வேறு என்ன வேண்டும். அவரை இங்கு அண்ணலோடு யாரும் ஒப்பிடவில்லை. அண்ணல் எப்படி கல்வியால் அரசியல் சாணக்கியத்தால் நமக்கு பெருமை சேர்க்கிறாரோ அது போல இசை துறையில் பறை இசை முழக்கத்தால் நமக்கு பெருமை சேர்ப்பவர் ராஜா. அவரால் நமக்கு பெருமை.. 

#சாதி ஒழிப்புக்கு முந்தைய நிலையான சாதீய சமத்துவம்# 

இதுதான் அண்ணலின் நிலைப்பாடு.......முதலில் சமத்துவம் அப்புறம் தேவை எனில் ஜாதி ஒழிப்பு பற்றி பேசுவோம். சமத்துவம் வந்துட்டா அப்புறம் அதுக்கு வேலையே இல்லை. 


பறையர் என்பது ஜாதி இல்லை. ஜாதியை எதிர்த்து சமத்துவம் பேசியவர்களே பிரியர்கள். எனக்கு உயர்ந்தவன் யாரும் இல்லை. எனக்கு தாழ்ந்தவன் யாரும் இல்லை. என்று ஜாதியை எதிர்த்து விட்டு சேரிக்கு வந்தவனே பறையன். பறையர் வரலாற்றை படிக்கவும். 

ஜாதிய ஒழிச்சி வர்கத்தை ஒழிச்சி தனி மனித சமத்துவத்தை ஏற்ப்படுத்த நீங்க முயற்சிக்கிறீங்க. அது  அடுத்த கட்டம். முதல்ல சமூகங்களுக்கு   இடையே சமத்துவத்தை ஏற்படுத்துங்க அப்புறம் தனி மனிதர்களுக்கு இடையே சமத்துவத்தை ஏற்ப்படுத்தலாம். 

No comments:

Post a Comment