Wednesday, July 31, 2013

இந்திய அரசியல் சட்டத்தில் சோசியலிசம் எனும் சொல் வருவதை அண்ணல் எதிர்த்தார்.

1936 இல் இல்லை 1956 இல் தீக்ஷா எடுப்பதற்கு முன்னர். மஹார் மகாஜன் சங்கத்தில் கலந்து ஆலோசித்தே அக்டோபர் 14 1956 அன்று  தம்ம தீக்ஷா எடுப்பது என்று முடிவு எடுத்தார். மகார்கள் மதம் மாறுவது என முடிவு எடுத்துள்ளனர் அது போல மற்ற சமூகங்களும் தங்கள் சமூக மக்களோடு கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும் என்று சொன்னார். 1956 இல் அவர் சாகும் வரை அவர் மகார மகாஜன் சங்கத்தில் உறுப்பினர். 


==================================================


#தனிமனித சுதந்திரத்தை குறித்த அச்சம் கொண்டிருந்தாரேயொழிய...அதில் முதலாளிகளின் சுதந்திரம் குறித்து பேசவில்லை...சும்மா திரிக்காதீர்கள்.#

என்னப்பா நான் எதுக்கு திரிக்கனும். பேருந்துகளை நாட்டுடமை ஆக்கும் விஷயம் பற்றி அண்ணல் என்ன சொன்னார்? பேருந்து உரிமையாளர்கள் உரிமைகள் பற்றி அண்ணல் பேசியது முதலாளிகளின் நலன் இல்லையா? அண்ணல் மோனோபோலியை பெரும் முதலாளிகள் சுரண்டலை அரசு தடுக்க வேண்டும் என்று சொன்னாரே ஒழிய நாட்டை சோசியலிச நாடாக ஆக்க வேண்டும் என்று சொல்லவில்லை. முதலாளித்துவத்தில் பெரும் முதலாளிகள் மக்களை கட்டுப்படுத்துவதும் சோசியலிச நாட்டில் ஒரு சிறு குழு நாட்டு மக்களை கட்டுப்டுத்துவதும் ஒன்றே என்கிறார் அண்ணல். இந்திய அரசியல் சட்டத்தில் சோசியலிசம் எனும் சொல் வருவதை அண்ணல் எதிர்த்தார். எந்த அளவுக்கு சோசியலிசம் கொள்கையை கடை பிடிக்கணும் எந்த அளவுக்கு சந்தை சுதந்திரத்தை (free market) கடை பிடிக்க வேண்டும் என்று மக்கள் தேவைக்கேற்ப காலத்திற்க்கேற்ப முடிவு செய்யட்டும். மாறாக அரசோ அரசியல் சட்டமோ மக்களை கட்டுப்படுத்த கூடாது என்று அண்ணல் சொன்னார்.



பறையர் இனம் என்ன அரியலூர் மாவட்டத்தில் உங்க கிராமத்தில் மட்டும்தான் இருக்கா? திருமா இல்லைனா அழிந்து விட. என்ன கொடுமை சார் இது. 

No comments:

Post a Comment