Saturday, July 6, 2013

நாம் மதம் மாறுவது அடுத்தவனை மனிதனாக மாற்றுவதற்கு அல்ல. நாம் மனிதனாக மாறுவதற்கு.

#மதம்மாறிவிட்டால்?மனிதனாகிடுமா?அங்கேபோனாலும் அதே நிலமைதான்,அதாவது!பறையனிலிருந்து மாறியவன்,ஆகவே ஓடி ஒலியாதே நீ! #

நாம் மதம் மாறுவது அடுத்தவனை மனிதனாக மாற்றுவதற்கு அல்ல. நாம் மனிதனாக மாறுவதற்கு. அடுத்தவனுக்கு நாம் மனிதனாக தெரியவில்லை என்று நமக்கு கவலை இல்லை. நாம் மனிதனாக இருக்கிறோமா என்றுதான் கவலை. இந்து மதத்தில் இருந்து கொண்டு வன்னியன் எனக்கு உசந்தவன் சக்கிலியன் எனக்கு தாழ்ந்தவன் எனும் நிலையை மாற்றி நான் இந்து இல்லை  நான் மனிதன் என்று சொல்லுவதற்கு எனக்கு மதமாற்றம் தேவை. நான் மதம் மாறினாலும் நான் பறையன்தான் இந்து பறையன் இல்லை சாக்கிய பறையன் எனது போராட்டம் தொடரும். இந்துவாக இருக்கும்வரை நான் மனிதன் எனும் உணர்வோடு இருக்க முடியாது. தம்மம் மட்டுமே என்னை மனிதனாக ஆக்குகிறது. நான் பறையன் எனக்கு மேலே (படைப்புக்கடவுள்  உட்பட) எவனும் இல்லை எனக்கு கிழே எவனும் இல்லை எனும் சமத்துவத்தை தம்மம் மட்டுமே எனக்கு கொடுக்கிறது. 




No comments:

Post a Comment