Thursday, July 11, 2013

ராமதாசை நேரடியாக தாக்கும் ஒரு ஸ்டேட்மென்ட் சொல்லுங்கள்.

#அவர் சாதியவாதிகளின், தமிழ்த் தேசிய முகமூடிகளின் உண்மை நிறத்தை எப்போதும் தோலுரித்துக்கொண்டுதான் இருக்கிறார்.#

ராமதாசை நேரடியாக தாக்கும் ஒரு ஸ்டேட்மென்ட் சொல்லுங்கள். கெஞ்சுவார் அவரிடம் கொஞ்சுவார். தமிழர் ஒற்றுமைக்காக ஒருங்கிணைய வாருங்கள் என்று இரு கை கூப்பி அழைப்பு விடுப்பார் கேட்டா ராஜ தந்திரம் என்பீர்கள். வீராவேசமா ராஜபக்ஷேவை எதிர்த்து சிங்கள வெறியன் ராஜபக்ஷே என்று சொல்லுவது போல ஜாதி வெறியன் ராமதாஸ் என்று எப்போதாவது சொல்லியுலள்ளாரா. அப்படி சொல்லியிருந்தால் பதிவிடவும். ஐயா ராமதாஸ் மருத்துவர் ஐயா என்று அவர் போடும் ஐயாதான் அதிகம் இருக்கிறது. கேட்டா பெரியவருக்கு மரியாதை தருகிறார் என்பீர்கள் அது பண்பு என்பீர்கள். அதை நான் கேட்கவில்லை. ராமதாசை நேரடியா எதிர்த்த தாக்கிய ஒரு ஸ்டேட்மென்ட் இருந்தால் சொல்லுங்கள். அந்த கூட்டம் இந்த கூட்டம். அவர்கள் இவர்கள் என்று மறைமுகமாக சொல்லிக்கொண்டு இருக்கிறாரே தவிர நேரடியாக அவர் இது வரை தாக்கி பேசியதில்லை.


No comments:

Post a Comment