Thursday, March 14, 2013


முக நூல்ல கருத்து பரிமாற்றம் விவாதம் 

இதை புலிகள் கிட்ட கேக்கல தமிழ் உணர்வாளர்கள் கிட்ட கவுதம மீனா கேட்டாங்க. மேல போய் ஆரம்பத்த பாருங்க. அதுக்கு ஸ்ரீதரன் கொடுத்த பதில்தான் பிரச்சனை. அவர் யாருக்கு ஆதரவா இங்க பதில் கொடுத்தார். 


யாருக்கோ போட்ட ஸ்டேடசை எடுத்து போட்டு. இப்போ எங்களுக்கு நிறைய வேலை இருக்குன்னா என்ன அர்த்தம். மேலே ஸ்டேடஸ்ஸை பாருங்க. 

அப்புறம் எதுக்கு மீனாவுக்கு பதில் கொடுக்குறீங்க? புலிகள் கிட்டதானே அவுங்க கேள்வி கேட்டாங்க. 


முப்பது வருஷமா உலகத்தையே நடுங்க வைத்த ஒரு பயங்கர வாத கூட்டத்தை கேள்வி கேட்டா உங்களுக்கு எதுக்கு துடிக்குது. 


சீமான் ஒரு அல்லக்கை. அவரு புளிய தூக்கி தலைல வச்சுக்கிட்டு கழுத்தை சுளுக்கி சுளிக்கி பேசிட்டு இருந்தா ஆக போவது ஒன்னும் இல்லை. அண்ணலின் பிள்ளைகள் என்று சொல்லிக்கொண்டு அந்த அயோக்கிய கூட்டத்துக்கு சப்போர்ட் பண்ணாதீங்க. 



#அது மீனா அக்காவுக்கும்  எனக்கும் இருக்கும் விவாதம் ..# 

தொலைபேசியில் பண்ணுங்க. முக நூலில் பண்ணா  மத்தவங்களும் படிச்சிட்டு பதில் போடுவாங்க. 

நண்பா முதல்ல பண்பா பேச கத்துக்க நண்பா


இது உங்களுக்கு irrelevant டுன்னு  முதல்லியே தெரியாம போச்சு. சொல்லிட்டீங்க இல்லை. அடுத்த முறை போடுறதுக்கு முன்ன உங்க கிட்ட கேட்டுட்டு போடுறேன். 

இந்துத்துவாவாதின்ர சுப்ரமணிய சாமி சொல்ற்றாரு. இலங்கை ராணுவம்  பண்ண மனித உரிமை மீறல்களை விட அதிக அளவு மனித உரிமை மீறல்களை  இந்திய எல்லைகளிலும் நாகலாந்து அஸ்ஸாம் வடகிழக்கு மாகாணங்களிலும் காஸ்மீரிலும் இலங்கையிலும் இந்திய ராணுவம் பண்ணிச்சு என்கிறார். மார்க்ஸியவாதி மனித உரிமை செம்மல் மார்க்சிய ராஜா இலங்கை அரசை rogue ஸ்டேட் என்கிறார். இலங்கை அரசு  rogue ஸ்டேட் என்றால் இந்திய அரசு என்னன்னு ராஜா சொன்னால் நல்லா இருக்கும். 


#கொள்ள போகுது இல்ல.... கொல்ல போகுதோ!#

தப்பு எழுதனவர் மேல இல்ல. இந்த ல ள ழ, இதையெல்லாம் கண்டு பிடிச்சான் பாரு அவன் மேல. அவன் மட்டும் இப்ப இருந்தா கொ"ள்ளா"மல் விடமாட்டேன். 

நான் படர பாடு எனக்குத்தான் தெரியும். 

#இன்று பேராசான் கார்ல் மார்ஸ் அவர்களின் நினைவு நாள்.
உலகின் மாபெரும் அறிவாசான்களின் வரிசையில் பாட்டாளி மக்களின் விடுதலையை முன்வைத்து ஒட்டுமொத்த மனிதக்குல விடுதலைக்கான வழியை அறிவியல் அடிப்படையில் நிறுவிக் காட்டிய ஆசான். #

நல்லா யோசிச்சு சொல்லுங்க. சுரண்டும் வர்க்கத்தின் விடுதலைக்கும்  வழி சொன்னாரா? 


பிறந்தவுடன் அம்மா என்று எந்த குழந்தையும் சொல்வது இல்லை. நான் எங்க அம்மாவை, எம்மா என்றுதான் அழைப்பேன். சென்னை சேரிகளில் அம்மா என்று சொல்ல மாட்டோம். 

சேரிகளில் இருப்பது சேரிபாஷை. அதுக்கு ஏன் தமிழ்ன்னு பேரு கொடுக்குறீங்க. 



பாலி மொழியில் இருந்து பிறந்தது என்று பண்டிதர் அயோத்திதாசு சொல்லுகிறார். 




பிரபாகரனின் தம்பிகள் புரட்சி புலிகள் எல்லாம் சிம்பு கிட்ட பாடம் கத்துக்குராங்களா? 




இலங்கை தலித் மக்களுக்கு நமது உதவி தேவை. இலங்கை தலித் மக்களுக்காக இந்திய அரசையும் இலங்கை அரசையும் எதிர்க்க நாங்கள் தயார். இன்னைக்கு ஈழம் பேசும் நிறைய மாணவர்கள் தலித்  மாணவர்களாம். அவர்களிடம் சொல்லுங்கள். இத்தனை தீர்மானம் வைத்து உள்ளீர்களே அதில் இன்னும் ஒரு தீர்மானம் வையுங்கள் என்று. இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் ஜாதி வன்கொடுமைகளை ஐ நா சபை இன அடிப்படையிளான வன்கொடுமையாக அறிவிக்க வேண்டும் இந்தியாவும்  இலங்கையும் தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு ஏற்க்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைக்க சொல்லுங்கள். இலங்கை அரசை மட்டும் அல்ல இந்திய அரசையும் நிர்பந்த படுத்தலாம்.  


 
சேனல்4 படம் எடுத்தவங்க கிட்ட பார்க்காதத்து கேட்டாங்க. இலங்கை ராணுவ மனித உரிமை மீறல் பத்தியே அதிகம் பேசுறீங்களே. ஏன் எல் டி டி மனித உரிமை மீறல்கள் பத்தி பேச மாட்டேன் என்கிறீர்கள் என்று. அவர் சொல்கிறார், எல் டி டி ஒரு கொடூரமான பயங்கரவாத அமைப்பு அவர்கள் மனித உரிமை மீறியுள்ளார்கள் மீறுவார்கள் என்று எல்லோருக்கும் தெரியும், ஆனால் அரசு இராணுவம் என்பது மனித உரிமையை காக்கும் அமைப்புக்கள் அவர்கள் மீறுவதை நாம் எதிர்க்க வேண்டும் என்கிறார். புலிகளின் தம்பிகள் கொஞ்சம் யோசிப்பார்களா? இலங்கை அரசு இலங்கை ராணுவம் எங்க இருக்கு புலிகள் எங்க இருக்கிறார்கள்ன்னு. சேனல் 4 இலங்கை அரசுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் ஆப்பு வைத்ததை விட புலிகளுக்கு வைத்ததுதான் பெரிய ஆப்பு. சேனல்4-க்கு நல்லா பெருசா ஒரு நன்றிய சொல்லுங்கள். 

மலையக மக்கள் மட்டும் அல்ல இலங்கை முழுக்க உள்ள தலித் மக்கள். சிங்களம் பேசும் தலித் மக்கள் உட்பட. அவர்கள் ஐ நா வில் நம்மோடு கை கோர்த்து போராடுவது தெரியுமா? சும்மா வெறுமனே கணக்கில் கொண்டால் போதாது. போராடும் மாணவ செல்வங்கள் கிட்ட சொல்லி அவர்கள் கோரிக்கையில் இதையும் இணைக்கணும். 
முடியுமா? செய்வார்களா? செய்ய மாட்டார்கள் எனில் நாம் எதுக்கு அவர்களுக்கு குரல் கொடுக்கணும். 

தமிழனா இருந்து பாக்க வேண்டாம் மனுசனா இருந்து பார்க்கவும். நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். இந்தியனா இருந்து பாக்க வேணாம், மனுசனா இருந்து காஷ்மீர் பிரச்சனையை பாருங்கள். ஐ நா வில் அதுக்கும் குரல் கொடுங்கள்.  

ஐ நா சபையில் நமது இயக்கங்கள் கடந்த 25 ஆண்டுகளாக இது பற்றி பேசி வருவது தெரியுமா? 

சிங்களம் பேசும் தலித் மக்களோடு நான் கடந்த பதினைந்து வருடங்களாக தொடர்பில் உள்ளேன். 

அவர்களும் நமது தலித் பன்னாட்டு அமைப்புகள் நெட்வொர்க்கில் உள்ளனர். 

சும்மா தமிழ் நாட்டில் திராவிட தமிழ் தேசிய குட்டைகளில் ஊறிக்கிட்டு இருந்தா பத்தாது. நாமும்  அவர்களை போல ஐ நா எல்லாம் போகணும் நமது பிரச்சனைகளை பேசணும்னு யோசிங்க. அவுங்க ஐ நா போனா நாம ஜால்ரா தற்றோம். நாம நமக்காக ஐ நா போனா கிறிஸ்துவ மிஷனரிகள் கிட்ட பணம் வாங்கிட்டு ஐநா போறோம் என்கிறான் அவன். 

ஒன்னு கஞ்சா ஒன்னு தம்மு. இரண்டும் போரளிகலாம். கொடுமைடா? 


எது தமிழ் ன்னு சொன்னா நல்லா இருக்கும். தமிழ் என்பது தமிழ் வார்த்தையா? ஒரு ஆயிரம் வருஷத்துக்கு முன்னர் கண்டு பிடிக்கபட்ட கல் வெட்டுகளில், ஒரே ஒரு ஆதாரம் காட்டுங்கள். தமிழ் என்ற வார்த்தை தமிழில் இருந்தது என்று. 

No comments:

Post a Comment