Friday, March 1, 2013

ஒழுக்கம் என்பது மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உறவை நிர்ணயிக்கிறது. ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் இடையே இறைவனை கொண்டு வருவது பயனற்றது. மனிதன் மன தூய்மை மூலம் அணைத்து உயிர்களிடத்திலும் அன்பையும் கருணையையும் பெருக்கி மற்ற உயிர்களுக்கு துன்பம் செய்ய கூடாது என்று பஞ்ச சீலத்தை கடை பிடிப்பதே உண்மையான ஒழுக்கம். தண்னை படைத்த கடவுளுக்காகவோ அல்லது கடவுள் தண்டனை தருவார் என்று பயந்தோ கடை பிடிக்கும் ஒழுக்கம் உண்மையான ஒழுக்கம் அல்ல. கடவுள் உண்டா இல்லையா என்று பேசுவது வீண் விவாதம். அப்படி ஒன்று  உண்டு என்றால் அது  தவறு செய்யும் எவரையும் தண்டிக்காது. அது  தவறு செய்யும் முன்னரே அவர்களை தவறு செய்யாமல் தடுக்கும். தன்னை ஏற்றுக்கொள்ளும் தன்னை வணங்கும் தன்னை புகழும் மக்களை மட்டும் மன்னிப்பது  அவர்களிடம் மட்டும் அன்பு காட்டி தவறு செய்யாமல் தடுப்பது  உண்மையான கடவுள் இல்லை. கடவுள் என்பது எல்லோருக்கும் பொது அதுக்கு வேறுபாடு இல்லை. கடவுளின் அன்பு தாயன்பு போன்றது அதற்கு  நல்லவர் கெட்டவர் என்று வேறுபாடு கிடையாது.

No comments:

Post a Comment