Thursday, March 14, 2013

ராஜபக்ஷே எங்கே கொலை செய்தார்? அவர் என்ன பிரபாகரன் போல தீவிரவாதியா? ராஜபக்ஷேவை தண்டிக்க வேண்டும் எனில் இந்திய ராணுவம் செய்யும் கொலைகளுக்கு நேரு, லால்பஹதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி, ராஜிவ் (கொன்னுட்டங்க), மன்மோகன் சிங் தமிழ் நாடு போலிஸ் செய்த கொலைகளுக்கு காமராஜ், எம் ஜி ஆர் கருணாநிதி ஜெயலலிதா எல்லோரும் தண்டிக்கப்படவேண்டுமே?

# ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி: நான் இந்தி கற்கவில்லை. சிவா இந்தி கற்கவில்லை. இந்த நாட்டின் நிதியமைச்சரும் இந்தி கற்காதவர்தான். பெருந்தலைவர் காமராஜரும் இந்தி அறிந்தவர் அல்ல. இப்படி இருக்கையில் இந்தி கற்றே ஆக வேண்டும் என்று என்ன கட்டாயம்? இந்தி பேசத் தெரியாவிட்டால் அவர் இந்தியர் இல்லையா? நம்மை இணைக்கும் பாலமாக இருப்பது இந்தி மொழி மட்டுமா? பெரும்பான்மையினர் பேசும் மொழி என்பதாலேயே, சிறுபான்மையினர் மீது அதைத் திணிப்பது சரியல்ல ....# 

விளக்கெண்ணை இதைதான் தமிழ் நாட்டில் நாங்களும் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். 
தமிழ் கற்றே ஆக வேண்டும் என்று என்ன கட்டாயம்? தமிழ் பேசத் தெரியாவிட்டால் அவர் தமிழ் நாட்டின் குடிமகன் இல்லையா? நம்மை இணைக்கும் பாலமாக இருப்பது தமிழ் மொழி மட்டுமா? பெரும்பான்மையினர் பேசும் மொழி என்பதாலேயே, சிறுபான்மையினர் மீது அதைத் திணிப்பது சரியல்ல.  


#ஹிஹி நீங்கள் தமிழ் பேசவில்லை என்று எவன் அழுதான்.#

ஹி  ஹி தமிழ் நாட்டில் போஸ்டர் தமிழ்ல இருக்கணும் போர்டு தமிழ்ல இருக்கணும் சினிமா பேரு  தமிழ்ல இருக்கணும் நாய் கூட தமிழல் கொலைக்கனும்னு டுமில் அல்லேளுயா கூட்டம் சொல்லிட்டு திரியுதே. உன்மொழிய நீ காப்பாத்து எதுக்கு நாட்ல இருக்கறவன் மீது திணிக்கிறே. 

 
#நீங்கள் ஹிந்தி பேசுங்கள் ஆங்கில் பேசுங்கள் யாருக்கும் இங்கு எந்த இழப்புமில்லை ... உங்களால் தமிழுக்கும் தமிழனுக்கும் எந்தப் பயனுமில்லை.# 

தமிழனால் எங்களுக்கு எந்த புரியோஜனமும் இல்லை. 

#தமிழ்நாட்டிலே அப்படித் தான் செய்வோம் நீங்கள் தலித் நாட்டிலே தலித் மொழியிலே போஸ்டர் அடித்துக் கொள்ளுங்கள். #

ஹிந்துஸ்த்தான்னு பேரு வச்சு இந்துக்கள் நாடுன்னு சொல்லுறது பாசிசம்னா? தமிழ் நாடுன்னு பேர் வச்சுக்கிட்டு தமிழ் நாடு தமிழர்களின் நாடு அங்கு தமிழ் தான் பேசணும்னு சொல்லுறதும் பாசிசம்தான். 

#உண்மை தான் உங்களுக்கு அதிக்க சாதியினர் மீது வன்மம் இருந்தால் அதைப் பற்றி பேசுங்கள்... அதை விட்டு எதற்கு மொழியைத் தூற்றுகிறீர்கள்.. #

இப்ப பேசிட்டு இருக்கிறது ஜாதி ஆதிக்கத்தை எதிர்த்து அல்ல மொழி ஆதிக்கத்தை எதிர்த்து. தமிழர்களின் மொழி இன பாசிசத்தை எதிர்த்து பேசிட்டு இருக்கோம். 


#இந்தியா என்ன தனி நாட செயட்கையாக் ஆருவக்கப் பட்ட நாடு... தமிழர்கள் வாழ்கின்ற இப்பகுதி 50000 ஆண்டுகளாக தமிழர்கள் தமிழ்மொழி பேசுபர்கள் வாழும் நிலப்பகுதி.#

இதைத்தான் ஹிந்துவோம் சொல்றான் 50000 ஆண்டுகள் இது இந்து நாடாம் முஸ்லீமும் கிறிஸ்துவனும் வந்தேரியாம்.  நீங்க மொழி இனம் எனும் பெயரில் அதே பாசிசத்தை பேசிட்டு இருக்கீங்க. 


#தமிழ்மொழிப் பாசிசம் என்று நீங்கள் கருதுவதாய் இருந்தால் ஒன்று நீங்கள் வேற்று இனத்தவராக இருக்க வேண்டும்... இல்லை பிராமணராக இருக்க வேண்டும்.# 

நான் தமிழ் இனம் என்று எப்போது சொன்னேன். நான் சாக்கிய பறையனார். தனி இனம். பூர்வ குடி. 

எங்கள் இறை நெறி சிவநெறியும் மால்நெறியும் இன்னும் நாட்டார் தெய்வங்கள், முருக வணக்கம் கொற்றவை வணக்கம் சித்தர் நெறி என்று பறந்து பட்டது ஹிந்து என்று இதைப் பொதுமைப்படுத்தியது தமிழர்கள் அல்ல.#

அப்படின்னா இந்த மால் கோல்  வீல் இதுல நம்பிக்கை இல்லதவ்ரகள் எல்லாம். தமிழர் அஇல்லாதவர்களா?


#பறையனாரே உங்கள் தாய் மொழியில் பதிவிடுங்கள்.. எதற்கு தமிழில் பதிவிட்டு எங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள்.#

தமிழ் அறிவன் முகநூளில் பேசுவதை நிறுத்துங்கள். 


சாகப்போகும் மொழிக்காக சங்கரா சங்கரா என்று கத்திக்கொண்டு இருக்கிறது. ஒரு கூட்டம். உலகில் எதுவுமே நிலையற்றது என்பதுதான் எங்கள் தத்துவம். மொழியும் அதில் அடக்கம். 

#உங்கள் தத்துவத்தை முறையாக பின்பற்றும் ஒரு நாட்டை சொல்லுங்கள்.# 

தத்துவத்தை நாடு பின்பற்றாது மக்கள் தான் பின்பற்றனும். 


#புத்தர் சொன்ன தத்துவத்தில் பிழைகளே இல்லையென்றால் ஏன் மகாயான தேரவாத சென் என்று பிரிவுகள் தோன்றின.#

கடலில் பல வகை முத்துக்கள் இருக்கும். புத்தர் சொன்னதை பல மக்கள் பல விதங்களில் புரிந்து கொண்டு பலவிதங்களில் பிரச்சாரம் செய்தனர். ஆனால் அடிப்படை ஒன்றே. துன்பமும் அதை தீர்க்கும் வழிகளும் அனைத்து குழுக்களிலும் ஒன்றே. 

#எதுவும் நிலையில்லை என்று தெரிந்தபின்பு அதைப் பற்றி பேசி என்ன பயன்... அதனால் வரக் கூடிய நன்மை என்ன.#

நிலையாமையை புரிந்து கொள்ளாமல் இருப்பதால தான் அதன் மீது மீளா இறுக்கம். அது தன்னை விட்டு போகும்போது மீளா துயர். இந்த உண்மையை உணரும்போது துயரில் இருந்து விடுதலை. 

#புத்தர் சொன்ன துறவை அவரை வணங்கிய மக்கள் பின் பற்றவில்லை.. #

துறவு என்பது காவி அணிவதில்லை. அது மனதில் இருக்கிறது. நான் எனது என்று ஒரு பொருளின் மீது அடங்கா ஆளுமை கொள்வதில் இருந்து விடுதலை. அவர் எல்லோரையும் குடும்பத்தை துறந்து பிக்குகள் ஆக சொல்லவில்லை. பிக்குகள் தம்மத்தை மனிதருக்கு போதிக்கும் போதனையாளர்கள். அவர்கள் வாழ்வுக்கு பிச்சை அளிப்பவர்கள் இல்லத்தார். பிக்குகளும் இல்லத்தார்களும் சமூகத்துக்கு அவசியம் என்பதே புத்தரின் கொள்கை.


#சரி நிலையாமையை அறிந்து கொண்டுவிட்டான் அடுத்து என்ன நிலையை அவன் அடைவான்...#

இதுக்கு மேல் என்ன நிலை வேண்டும். நிலைமையை முழுமையாக ஒருவர்  அறிந்து விட்டால் அவன் முழு விடுதலை பெற்று விடுகிறார். 

#நிலையில்லாததை போதிக்கும் பிக்குவிற்கு உலகம் நிலையானது என்று நம்பும் இல்லறத்தான் உணவழிப்பது என்பது முரணாக உள்ளதே..#

புத்தத்தை பின்பற்றும் பிக்குகளும் இல்லறத்தாரும்  நிலையாமையை உணரும் வழியான தம்மத்தை பின்பற்றுபவர்களே. 


# அவர் (நிலையாமையை உணர்ந்தவர்) விடுதலை பெறுகிறார் என்பது நம்பிக்கையா உள்ளுணர்வா அல்லத்து அது இறை நிலையா.#

அது நம்பிக்கையும் இல்லை இறைநிலையம் இல்லை. அறிவு ஞானம் போதி புத்தி. மனதை பகுத்து அறிந்து நிலையாமையை உணரும்போது ஆசை மயக்கம் கோபம் காமம் வெறுப்ப மயக்கம் இவற்றில் இருந்து நாம் விடுதலை அடைவதை உணரலாம். அது தொடர்ந்து முழுமை அடையும்போது முழு விடுதலை என்பதை இந்த நொடியே நீங்கள் உணரலாம். 


#சரி மொழிக்கு வருவோம் இப்போ தமிழ்நாட்டிலே இருந்து தமிழ் மொழியை அழித்து விடலாமா#

அழிப்பது எங்கள் வேலை அல்ல. உங்கள் மொழியை காக்கிறோம் எனும் பெயரில் எங்களை துன்புறுத்தாதீர்கள் என்கிறோம். எங்களையும் சுதந்திரமா பேச விடுங்கள் வாழ விடுங்கள். எங்கள் சமைய சமூக பண்பாட்டு கலாச்சார விஷயங்களை எங்கள் மொழிகளில் செய்ய விடுங்கள் என்கிறோம். 

#சரி நீங்கள் சொல்லும் அந்த நிலையை அடைவதால் இந்த உலகத்திற்கு கிடைக்கும் நன்மையென்ன.#

நான் எனது என்னுடையது என்பதில் பற்று நீங்கி. மற்றவர் மீது உள்ள வெறுப்பு நீங்கி. அணைத்தையும் சமச்சீர் மனோ நிலையுடன் பார்க்கும் பகுத்து அறிவு  வளரும். 

 #சரி அனைத்தும் ஒரே நிலை என்று உணர்ந்த ஒருவன் துறவியாக இருந்து என்ன பயன்... #

பிக்குகள் தம்மத்தை போதிக்கும் குழுக்கள். குடும்பம் சொந்தம் என்று வரும்போது பற்று அதிகம் இருக்கும். கடமை செய்ய முடியாது. அதனால் தம்ம போதனையாளர்கள் பிக்கு வழக்கை ஏற்ப்பது அவசியம். 

#அவனால் இன்னொருவனை உணரச்செய்ய முடியுமா (புத்தராலேயே முடியவில்லை) பிறகு இந்த துறவின் நோக்கம் தான் என்ன.#

புத்தர் என்பவர் மார்க்கதத்தர். அவர் வழியை மட்டுமே காட்டுவார். பிரயாணிக்க வேண்டியது நாமதான். அவர் நம்மை உணர வைக்க மாட்டார். நாமதான் உணரனும். விடுதலை என்பது அடுத்தவர் கொடுத்து பெறுவது அல்ல. நாமே அடைவது. 

#புத்தரை இன்னும் ஆழமாகப் படியுங்கள்... சிலவேலை அவரின் தத்துவப் பிழைகளை நீங்கள் உணரலாம்.#

புத்தம் என்பது படித்து வருவதல்ல. அது நல்ல பேச்சு நல்ல செயல் நல்ல வழியில் வருமானம் ஈட்டி நல்ல முயற்ச்சியில் மனதை ஒரு நிலைபடுத்தி மனத்தில் நல்ல விழிப்புனர்வை வளர்த்து நல்ல சிந்தனை மூலம் நல்ல அறிவை வளர்ப்பதால் வருவது. இதுதான் புத்தர் சொன்ன என்மார்க்கம். 

No comments:

Post a Comment