Saturday, March 9, 2013


# பறையன் என பேரில் வைத்துக் கொண்டு சாதியை ஒழிக்க சொல்கிறீர்கள் , சீக்கிரம் ஒழிச்சு புடலாம் ....#

பறையர்  என்பது உங்களுக்கு ஜாதியா தெரிஞ்சா அதுக்கு நான் என்ன பண்ண. தமிழ் ஜாதி அப்படின்னு சொல்றாங்க. தமிழ் ஜாதியா? நல்ல "வேதம்" மநு "சாஸ்திரம்" படிச்ச பார்பனர் கிட்ட கேளுங்க பறையர் ஜாதியான்னு? இல்லைன்னா இந்திய சமூகவியல் படிச்ச பேராசிரியர் யாராச்சும் இருந்தா கேளுங்க பறையர் ஜாதியான்னு? 

#எல்லா பயலும் இப்படி சொல்லிட்ட திரிகிறார்கள்.#

எல்லா பயலும் இப்படி சொல்லிட்டா நல்லது தானே. எல்லா பயலும் நாங்க ஷத்திரிய குலம். ஆண்ட பரம்பரை. பேனண்ட பரம்பரை, மூவேந்தர் ஜாதி, மூவேந்தர் குலம் என்றுதானே சொல்லிட்டு அலைகிறார்கள்.  ஆங்கில டிக்ஷனரி கூட சொல்லுது பறையர் என்றால், ஜாதி அற்றவர்கள். அமெரிக்கா ஐரோப்பா ஆஸ்திரேலியா பக்கம் போனா பறையா என்ற சொல்லை  அவுட் காஸ்ட் (ஜாதிக்கு வெளியே உள்ளவர்கள்) என்ற அர்த்ததில் உபயோக படுத்துவதை பார்க்கலாம்.  ஜாதியம் என்பது நான் பறையன் என்று நினைப்பது இல்லை. ஜாதியம் என்பது நான் பறையன் எனக்கு கீழே வேறு யாரும் இல்லை எனக்கு மேலே யாரும் இல்லை என்று மறுப்பது இல்லை. ஜாதியம் என்பது நான் உயர்ந்த ஜாதி என் ஜாதிக்கு கீழே நிறைய பேர் உள்ளனர் என் ஜாதிக்கு மேல் நிறைய ஜாதிகள் உள்ளன என்று நினைப்பது. ஜாதியை எதிர்த்தவர்கள் வருணத்தை எதிரதவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் பறையர் என்றே அடையாளப்படுத்தப்பட்டனர்.  பறையா என்பது  நீக்ரோ எனும் வர்த்தை போல ஒரு சக்தி வாய்ந்த வார்த்தை. பறையா என்பது ஒரு கலக குரல். பறையா என்பது ஒரு  விடுதலைக்கான  குரல்.

No comments:

Post a Comment