Monday, March 25, 2013


30 கோடி தலித் மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் மானத்தோடு வாழ வழியில்லாமல். தினம் தினம் கொலை கொள்ளை பாலியல் பலாத்காரம் வீடு எரிப்பு ஒடுக்குமுறை வன்கொடுமைகள அவதூறு பேச்சுக்கள் என்று வாழ வழியில்லாமல் உலகம் முழுக்க அல்லல் பட்டுக்கொண்டு இருக்கிறது. மாட்டுக்கு கூட உரிமை பேசும் உலகத்தில் அடிப்படை உரிமைகள் இல்லாமல் மிக கேவலமாக சேற்றில் உள்ள புழு போல நடத்த்தப்படும் தலித் மக்களின் மனித உரிமை பேச ஆள் இல்லை. கடந்த 15 - 20 வருடங்களாக தலித் மனித உரிமை பற்றி பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதற்க்கு நமக்கு கிடைத்த ஆதரவு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி தான். நாம் முப்பது கோடி மக்கள். பெரும்பன்மையனவர்கள் அடுத்த வேலை கஞ்சிக்கே வழி அற்ற கொத்தடிமைகள். நாம் எப்படி நமது பிரச்சனையை உலகம் முழுக்க கொண்டு செல்ல முடியும். பணம் பதவி படைத்தவர்கள் நம்மில் ஒரு சிலரே. அவர்களும் தமிழ்  திராவிடம் என்று ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். நமது பிரச்சனை மனித உரிமை பிரச்சனை அது உலக நாடுகளின் தலையீட்டால் தீர்க்க இயலும் என்று கூட அறியாத மக்களே நம்மில் பலர். மேலும் பலர் இது உள்நாட்டு பிரச்சனை இதை எதற்கு ஐ நா அமெரிக்க என்று கொண்டு செல்லவேண்டும் என்று நம்மிடம் கேள்வி கேட்கின்றனர். வேறு சிலர் நம்மை என் ஜி ஒ என்றும் அமெரிக்காவின் கை கூலிகள் என்றும் கிரிஸ்த்துவ நிறுவனங்கள் என்றும் ஏளனம் செய்து தலித் மனித உரிமை இயக்கத்தை கொச்சைப்படுத்துகின்றனர். அதே ஆசாமிகள் தான் ஈழத்துக்காக  ஐ நா செல்கின்றனர். அவர்கள் பலத்தை பாருங்கள். அவர்களுக்கு பணம் கொடுக்கவும் குரல் கொடுக்கவும் ஊடக விளம்பரங்கள் செய்யவும் ஆட்கள் ஏராளம். நமக்கு யார் இருக்கிறார்கள்? புலம் பெயர்ந்த தலித் மக்கள் எத்தனை பேர் உள்ளனர். நமக்கு நமது செய்திகளை போடா ஊடக வசதி உள்ளதா? 30 லட்சம் இலங்கை தமிழர்கள் பிரச்சனை உலகின் மிகப்பெரிய பிரச்சனையாக பேசப்படுகிறது. ஆனால் 30 கோடி தலித் மக்களின் பிரச்சனை என்பது கடலில் கரைத்த பெருங்காயமாக உள்ளது. 30 லட்சம் இலங்கை தமிழர்கள் பிரச்சனையோடு நமது பிரச்சனையை ஒப்பிட்டால் அது பிரச்சனையே இல்லை. ஆனால் அது மிகப்பெரிய பிரச்சனையாக கட்டப்படுகிறது. 30 லட்சம் இலங்கை தமிழர்களின் பிரச்சனை என்பது 60 ஆண்டு கால பிரச்சனை. ஆனால் நமது பிரச்சனை என்பது ஆயிரம் ஆண்டு கால பிரச்சனை. இலங்கை தமிழர்கள் இலங்கைக்கு வெளியே போய் புலம் பெயந்த தமிழர்களாக வாழ்ந்து வருகின்றனர். அங்கெல்லாம் அவர்களுக்கு இனப் பிரச்சனை இல்லை. ஆனால் நம் மக்கள் உலகத்தின் எந்த கோடிக்கு போனாலும் அங்கெல்லாம் ஜாதிய வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர். அவர்கள் போகும் இடம் எல்லாம் அடையாளத்தை மறைத்து அனாதைகளாக திரிகின்றனர். நம்மை காக்க நமக்கு குரல் கொடுக்க ஒருவரும் கிடையாது. அவர்களுக்கு ஒரு பாலச்சந்திரன் என்றால் நமக்கு ஆயிரம் ஆயிரம் பாலசந்திரன்கள். ஊடகம் சொல்லுவதை மட்டும் பார்த்துட்டு உணர்ச்சி வசப்பட்டு வீதிக்கு வருவது நீதிக்கு வரும் உணர்ச்சி  அல்ல அது ஜாதிக்கு வரும் உணர்ச்சி. 

 

No comments:

Post a Comment