Monday, March 4, 2013

அண்ணல் அம்பேத்கர் சாகும் முன்னர் அவர் எழுதிய புத்தரும் அவரது தம்மமும் எனும் நூலை வெளியிட விரும்பினார்.  அப்போது இந்திய அரசு புத்தரின் 2500 ஆம் ஆண்டு விழா கொண்டாட அரசு பணத்தை ஒதுக்கியது. அந்த பணத்தில் ரூபாய் 25, 000 கொடுக்க முடியுமா என்று அரசுக்கு அண்ணல் கடிதம் எழுதினர். ஆனால் அன்றைய அரசு அதை தர மறுத்தது. அவருக்கு பொருள் உதவி செய்ய அன்று நமது  மக்களும் பண பலம் படைத்தவர்களாக இல்லை. கடைசியில் அந்த புத்தகத்தை வெளியிட முடியாமலே அவர் இறந்தார். ஒரு மாபெரும் புரட்சியாளரின் பொருளாதார நிலை இதுதான்.  இன்றும் நமது நிலை அப்படியே. ஒரு கூட்டம் நடத்த வேண்டும் போராட்டம் நடத்த வேண்டும் என்றால் நாம் அல்லோகல்லப்படுகிறோம். இதுதான் உண்மையான ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை. ஆனால் சில புரட்சியாளர்கள் போராளிகள் ஆயிரம் லட்சம் கோடி என்று பணத்தை திரட்டி மிகப்பெரிய ஆயுத போரை 30 ஆண்டுகள் நடத்தினார்கள். அவர்கள் ஒடுக்கபட்ட மகளின் பிரதி நிதிகளா? அவர்கள் போராட்டம் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் போராட்டம் எனில் இவ்வளவு கோடிக்கணக்கான பணம் அவர்களுக்கு எப்படி வந்தது? கொஞ்சம் யோசிங்க மக்கா. 

No comments:

Post a Comment