Monday, May 27, 2013

நான் இந்து நான் இந்து அவர்கள் பின்னால் ஓடியபோது நீ இந்து அல்ல பறையன் தீண்டத்தகாதவன் என்றனர். 
நான் திராவிடன் நான் திராவிடன் என்று அவர்கள் பின்னால் ஓடியபோது நீ திராவிடன் இல்லை பறையன் தீண்டத்தகாதவன் என்றனர். 
நான் தமிழன் நான் தமிழன் என்று அவர்கள் பின்னால் ஓடியபோது நீ தமிழன் இல்லை பறையன் தீண்டத்தகாதவன் என்றனர். 
நான் பறையன் என்று நெஞ்சை நிமிர்த்தி நடக்கும்போது நீ ஆதி இந்து நீதான் உண்மயான இந்து என்று என் பின்னால் ஓடிவருகின்றனர். 
நான் பறையன் என்று நெஞ்சை நிமிர்த்தி நடக்கும்போது நீ ஆதி திராவிடன் நீதான் உண்மயான திராவிடன் என்று என் பின்னால் ஓடிவருகின்றனர்.
நான் பறையன் என்று நெஞ்சை நிமிர்த்தி நடக்கும்போது நீ ஆதி தமிழன் நீதான் உண்மயான தமிழன் என்று என் பின்னால் ஓடிவருகின்றனர்.
நாம் இந்து, திராவிடன், தமிழன் என்று ஜாதி இந்துக்களின் பின்னால் ஓடுவதை நிறுத்துவோம். அவர்களை நம் பின்னால் ஓடி வர வைப்போம். நமது அடையாள அரசியலை கையில் எடுப்போம். 

Sunday, May 26, 2013

தமிழகம் தமிழ் நாடு என்று பெயரை வைத்துக்கொண்டு மண்ணின் மைந்தர்களை வந்தேறிகள் என்று சொல்லி திரிகிறது ஊர்மிராண்டி கூட்டம். 
#சிவாஜியும் ஒரு பிரபாகரன்தான்.#

உண்மைய ஒத்துக்கிட்டா நல்லது. சிவாஜி மட்டும் இல்லை அன்றைய காலத்தில் வாழ்ந்த அனைத்து அரசர்களும் கொள்ளை கூட்ட கும்பல்தான். கூட்டாளிகளை சேர்த்து வைத்துக்கொண்டு நாட்டு மக்களை அடக்கி கொள்ளை அடிக்கும் கும்பல்தான் நாட்டை ஆண்டன. பிரிடிஷ் சாம்ராஜ்யம் உருவான பிறகே இந்த கொள்ளை கூட்டம் அடக்கப்பட்டு ஜனநாயக முறையில் மக்கள் தங்கள் அரசை பிரதிநிதிகளை தேர்ந்தேடுக்கும் முறை வந்தது. ராஜபக்ஷே ராஜீவ் காந்தி எல்லாம் மக்களால் தேர்ந்த்டுக்கப்பட்ட ஜனாதிபதிகள் பிரதமர்கள். மக்கள் நினைத்தால் அடுத்த தேர்தலில் தூக்கி எரிய முடியும். சிவாஜி பிரபாகரன் எல்லாம் தானே அரசன் தானே ராஜா  என்று முடிசூட்டிக்கொண்ட  ஆண்ட பேன்ட பரம்பரை. 

#அம்பேத்கரை வணங்குவோம்.#

அப்புறம் அவர் கடவுள் இல்லை என்கிறீர்கள். கடவுள்கள் மட்டுமே வணக்கத்துக்கு உரியவர்கள். 
#அவருடைய (அண்ணல் அம்பேத்கர்) சாதனைக் கடவுளால்தான் முடியும் நம்மால் முடியாது என்ற எண்ணம் வரும். அவருடைக் கொள்கைகள் காற்றில் பறக்கும். இலங்கைப் புத்தரைப்போல் ஆகிவிடுவார்.#

பிறப்பினால் யாரும் கடவுள் ஆக முடியாது. செயற்கரிய செய்கைகளை செய்வது மூலமே ஒருவர் கடவுளாக முடியும் என்று செய்து கட்டியவர்கள் தான் புத்தரும் போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கரும். அவர்களை கடவுள் என்று சொலுவது அவர்கள் கடவுள்கள் அதனால் தான் அப்படி பட்ட செயல்களை அவர்களால் செய்ய முடிந்தது என்று அர்த்தம் இல்லை. அவர்கள் செயற்கரிய செயல்களை செய்தார்கள் அதனால் தான் கடவுள் ஆனார்கள் என்று அர்த்த. நாம் கடவுள் இல்லை அதனால் அவர்களை போல செயற்க்கரிய செயல்களை செய்ய முடியாது என்பது தம்மம் அல்ல. நாமும் அப்படிப்பட்ட செயற்கரிய செயல்களை செய்வது மெல்லாம் போதசத்துவர் புத்தர் போன்று கடவுள் ஆகலாம் என்று தம்மம் சொல்கிறது. கிருஷ்ணன் என்பவர் படைப்புக்கடவுளின் அவதாரம். நபி என்பவர் கடவுளின் தூதுவர் ஏசு என்பவர் கடவுளின் குமாரன், இவர்கள் இருவரும் பிறக்கும்போதே படைப்புக்கடவுளின் சக்தியை தன்னுள் கொண்டவர். போதிசதுவர்களும் புத்தர்களும் அப்படி இல்லை. நம்மை போல சாதாரண மனிதர்களாக பிறந்தே பின்னர் கடவுள் ஆகிறார்கள். கடவுள் எனும் தமிழ் வார்த்தைக்கு "படைத்தவன்" என்று அர்த்தம் இல்லை. எங்கே உதயகுமாரை கூப்பிடுங்கள் அவர் கடவுள் எனும் தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் சொல்வார். 
#தமிழா, பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய்,ராவுதனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா - தமிழா தமிழனாய் வாழ்வோம்.#

தமிழ்ன்னா யாரு அவுங்க என்ன என்ன ஜாதியை சேர்ந்து இருக்க வேண்டும் என்று இவர் வரையறை தருகிறார் பாருங்கள். இந்த ஜாதிகளை சேராமல் வேறு ஜாதியில் இருந்தால் அவர்கள் தமிழர்கள் இல்லையா? இது வரைக்கும் இவர்கள் "பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய்,ராவுதனாய், குயவனாய்......" தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறர்கள். இப்பத்தான் இவர் அழைப்பு கொடுக்கிறார். வாங்க நாம் தமிழராய் இணைவோம் என்று. 

##பறையர் என்று அழைத்துக் கொள்வதே சிறந்தது.....பறையன் என்ற சொல்லுக்குத்தான் போராட்டக்குனமும், எதிர்ப்புக்குனமும் அதிகம்.......#

இதில் மாற்றுக்கருத்து இல்லை. தலித் எனும் அடையலாம் மாறிக்கொண்டு வரும் அடையலாம். தற்போது அது இந்தியா முழுக்க உள்ள சேரி வாழ் பறையர்களை இணைக்கும் அடையாள சொல்லாக பயன்படுகிறது. தலித் என்பது அடையாளத்தை மறைத்து ஓடி ஒளிந்து கொள்ளும் சொல் அல்ல, அது நமது மக்களை அடையாளப்ப்படுத்தும் அடையாள சொல்.  என்னுடைய சேரியில் பேசும்போது எனக்கு பறையன் எனும் வார்த்தை தேவைப்படுகிறது. அங்கு பறையன் என்று பேசும்போது இந்தியா முழுக்க உள்ள நமது சமூக மக்களின் சொல்லாகவே அது பயன்படுகிறது. அது போல உலக அரங்கில் எமது மக்களுக்காக குரல் கொடுக்கும்போது தலித் என்ற சொல் பயன்படுகிறது. மேலும் தற்போது இந்தியா முழுக்க உள்ள பறையர் சமூக மக்கள் சாக்கியத்தை ஏற்று சாக்கியர் எனும் அடையாளத்துக்குள் போய்க்கொண்டு இருக்கிறர்கள். நமது அடையாளத்துக்கு என்ன பெயர் பெயர் என்பது முக்கியம் அதை விட முக்கியம் நாம் எந்த அடையாளலத்துக்குள் இருக்கிறோம் என்பது. தலித் என்பது மாறும் சாக்கியர் எனும் நமது பூர்வீக அடையலாம் மீண்டு வரும்.  சங்ககால தமிழில் "ஐ" எனும் எழுத்து கிடையாது எனவே நாம் ஆதியில் பறையர் என்று இருந்தோம் என்று சொல்வது கேள்விக்கு உரியதே. ஆனால் இன்று நான் பறையன் என்று சொன்னால் ஜாதி தமிழனின் காத்து ஜவ்வு கிழிகிறது. எனவே பறையன் என்பது எனக்கு புரட்சிக்கான அடையாளம். நாம் யார் என்பதே இங்கு முக்கியம். காலத்துக்கு ஏற்றவாறு நமது பெயர்கள் மாரும். மாற்றத்தை ஏற்று விடுதலைக்கு வழி அமைப்போம். நாம் தமிழன் நாம் திராவிடன் என்று ஆண்டைகளுக்கு அடிபணிந்து கிடக்கும் சாக்கடைகள் அல்ல நாம் நமது அடையாளங்களை மார் தட்டி சொல்லும் வீர மறையர்கள். 



#சிறை கட்டியதே நம் இனத்துக்கு தாண்டா - சீமான் #

தெரியுமே! இதைதான் நாங்கள் எமது மக்களுக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறோம். அந்த இனம் கொலை கொள்ளை கடத்தல் வீடு கொளுத்துதல் கழுத்தை அறுத்தல் பாலியல் பலாத்காரம் இதில் பெயர் போனது ஜெயிலில் இருக்க வேண்டிய குற்றப்பரம்பரை தான் ஆண்ட பரம்பரையாக புலி வேசம் போட்டுக்கொண்டு திரிகிறது. ஜாக்கிரதையாக இருங்கள். 

Saturday, May 25, 2013

அவன் அவன் மனுஷன் சாகுராநேன்னு வயிறு எரிஞ்சிட்டு இருக்கான், இதுல சரியா தமிழ பிழை இல்லாமல் எழுதி கக்கனுமாம் சாரி காக்கனுமாம். என்ன கொடுமை சார் இது? நம்மள எழுத உடாம தடுக்க என்ன என்ன சதியெல்லாம் நடக்குது பாருங்க. இந்த பண்டிதர்கள் தொல்லை தாங்கள.

///அம்பெத்கரை கடவுள் ஆக்காதீர்கள் என்று சொன்னாலும் கேட்காத ஆர்வக் கோளாறுகள்///

அவர் ஏற்கனவே கடவுள் ஆயிட்டார். அவர் எங்கள் கடவுள்தான். உங்களுக்கு என்ன பிரச்சனை. 

ஆதியில பலியில பேசுன மனுசங்களா தமிழ்ல பேசு அதுவும் சரியா பேசுன்ன்னு சொன்னா எப்படி?

மநுசனா இருந்து எத்தனை பெற வாழ வச்சி இருக்கீங்க? 

உனகள மாதிரு மாறி மத்தவங்கள கொல்லாம இருக்கோமில்ல!

உங்க தாய் மொழிய கொச்சை படுத்தாம இருக்கணும்னா? வீட்ல பூட்டி வச்சுக்குங்க. திருவுல திரிய விட்டா இப்படித்தான். 

#என்னண்ணே பண்றது. கண்ட கண்ட நாயெல்லாம் தாய் மொழியை கொச்சைப்படுத்தும்ன்னு சொன்னா யாரு கேக்கறா. இனி அப்படித்தான் செய்யோணும். வரே#

ஜாதி வெறியும் மத வெறியும் மொழி வெறியும் இன வெறியும் பிடித்த தமிழ் நாய்கள் பேசும் மொழிக்கு வக்காலத்து வாங்கும் நாய்கள் மனுஷன் சாகும்போது சூடு சுரணை இல்லாமல் இருக்கின்றன. 

Friday, May 24, 2013

ஓம் மூலமும் இல்லை ஆதி மூலமும் இல்லை. மனதை விழிப்பாக வைத்துக்கொள்ள பயன்படுத்தப்பட்ட சத்தம். அண்ணல் அம்பேத்கர் தன்னை விழிப்பாக வைதுக்கொள்ள பயன்படுத்திய வாசகம் "ஓம் மணி பத்மயமே". வணக்கம் (நமஸ்காரம்) என்று சொல்வதற்கு பதில் ஓம் மணி பத்மேயாமே என்று சொல்லுங்கள் என்கிறார். ஒருவரை ஒருவர் எதற்கு வணங்க வேண்டும்  "ஓம் மணி பத்மயமே" அதாவது விழிபோடு இருங்கள் என்று வாழ்த்தலாம் என்கிறார். ஓம் மணி பத்மியாமே என்றால் தாமரை ம் மலர் (புத்தர்) போல விழிப்போடு இருங்கள் என்று அர்த்தம். ஓம் என்பது  விழிபாக இருக்க பயன்படுத்தப்பட்ட மந்திரம். ஓம் ஓம் என்று சொன்னால் மனம் ஒரு நிலை அடிந்து விழிப்பாக இருக்கும். அது ஒரு சத்தம் மட்டுமே. அதை நம்மிடம் இருந்து திருடி "அது ஓங்காரம் ஆதி மூலம் நம்மை படைத்தவன் நாயகன்" என்று அதுக்கு பின்னால் கதை கட்டுவதுதான் பார்ப்பனிய இந்துமதம் ஓம் என்று சொல்வதே பார்பனியம் சமஸ்கிருதம் பார்பனிய மொழி தியானம் பார்பனியம் என்று நமது பாரம்பரிய கலாச்சாரத்தை நம்மிடம் வர விடாமல் தடுத்து நம்மை இந்து அடிமைகளாக வைத்திருக்க செய்வது சூத்திர ராமசாமியின் இந்து மதம். 

#பெரியார் திருந்தினாரா. குடியரசு பத்திரிகை நடத்தினார். குடியரசு கோட்பாட்டின் படி நடந்தாரா? சுய ஒளி அம்பெத்கருடையது. இவர் நிலா.#

அது பூர்ணிமா நிலா இல்லை. ஒளியை வாங்க முடியாத அம்மாவாசை நிலா.

#அவர்கள் கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேயே வாளோடு முன் தோன்றிய மூத்த குடிகள். #
$$வாலோடு ... " என்றல்லவா எண்ணினேன்.$$
சரியாதான் சொல்றீங்க இந்த லெமூரியா தமிழ் குரங்குகள் வாலோடுதான் பிறந்தன. இப்ப புலி வாலில் சிக்கி உள்ளன. 

#சமஸ்கிருதத்தில் நெடிலே இல்லையாமே.... அப்புறம் ஓங்காரம் மட்டும் எப்படின்னு எங்கேயோ ஒரு புத்தகத்தில் படித்த நியாபகம்...#

வார்த்தைக்கு எழுத்து தேவை அர்த்தம்  தேவை. ஓம்  என்பது சத்தம். ஓம் என்பது புத்தர் சொன்ன தியான முறை அல்ல புத்தரின் ஆனாபான விபஸ்ஸனா தியான முறைகள் மறைந்திருந்த காலங்களில் மகாயான புத்த தம்மிகளால் பல தியான முறைகள் பயன்படுத்தப்பட்டன அதில் ஒன்றுதான் இந்த "ஓம் மணி பத்மியமே" என்பதும். 

ராமசாமி  பெரிய  பகுத்தறிவு ஞானி  சூனி எல்லாம் கிடையாது. சூத்திரர்களின் திராவிட அரசியல் பார்ப்பன எதிர்ப்புக்கு அவரை அடியாளமாக பயன்படுத்திகொண்டது.