Saturday, August 10, 2013

தலித் என்றால் சாக்கிய ஒருகிணைப்பு என்று அர்த்தம் என்று மக்களுக்கு சொல்லுவோம்.


தமல நாட்டில்  பறையர் என்று அழைக்கப்படும் நாம்,  உலக நாடுகளில் உள்ள நமது பறையர் சமூக மக்களை எல்லாம் இணைக்க ் பயன்படுத்தும் அடையாளம்  தலித். தலித் என்றும் அடையாளம் யாரோ நமக்கு கொடுத்தது இல்லை. அது நாமே நம்மை இணைக்க எடுத்துக்கொண்ட அடையாளம். நாம் நம்மை பறையர் என்று சொல்லும்போது எப்படி ஜாதி இந்துக்கள் நம்மை சாவுக்கு பறை அடிப்பவன் பறையன் என்று கொச்சை படுத்தினார்களோ அப்படியே இப்போது தலித் என்றால் ஒடுக்கப்ட்டவன் என்று சொல்லி நம்மை கொச்சை படுதிக்கொல்கிறார்கள். 100 வருடதுக்கு முன்னர் பறையன் எனும் வார்த்தை உலகில் உள்ள தலித் மக்களை எல்லாம் இணைக்கும் சொல்லாக இருந்தது.  ஆங்கிலத்தில் கூட அந்த வார்த்தை  நம் மக்களை குறிக்க பயன்படுத்தப்பட்டது. பறையன் என்றால் பறையடிப்பவன் இழிந்த ஜாதி என  இழிவு படுத்தி நமது ஒருங்கிணைப்பை முடக்கினர். ஆங்கிலத்தில் கூட அது இப்படியே தவறான பொருள் கூறி நமது உலகளாவிய அடையாளத்தை ஒடுக்கப்பார்க்கிறது ஜாதி இந்து கூட்டம். 25  வருடங்களுக்கு முன்னர் தமல நாட்டுக்குள் தலித் எனும் அடையாள சொல் வந்த போது அதை முடக்க நினைத்து இப்படிப்பட்ட பொய் பிரச்சாரங்களை தொடங்கினர். புத்தம் ஏற்ற நமது மக்கள் கூட தலித் என்பது நமது அடையாளம் இல்லை அது கிறிஸ்துவர் அடையாளம் என்று ஒதுங்கி இருந்தனர். ஆனால் தலித் எனும் அடையாளத்தை சொல்லாடலை மகாராஷ்டிரா மாநிலத்தில் பயன்படுத்திய மஹார் மக்கள் எல்லோரும் அண்ணல் அம்பேத்கர் வழியில் புத்தம் ஏற்றவர்களே. இன்று உலகம் முழுக்க உள்ள அண்ணல் அம்பேத்கர் வழியில் நடக்கும் நம்மை இணைக்கும் பாலமாக தலித் எனும் சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. அதே சமயம் தலித் என்றும் அடையாள சொல் சாக்கிய எனும் அடையாள சொல்லாக மாறிக்கொண்டு வருவதும் சாக்கிய இயக்க வரலாறு. 25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் சாக்கிய எனும் வார்த்தை பரவலாக இல்லாமல் இருந்தது. நாம் சாக்கியர் எனும் உண்மை தெரியாமல் இருந்தது. இன்று அதை நாம் மீட்டு வருக்கிறோம். இன்னைக்கு தமல  நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சாக்கிய சங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.. சாக்கிய சங்கம், சாக்கிய விஹார், சாக்கிய விடுதி, சாக்கிய இதழ்கள், சாக்கிய தம்ம யாத்திரை, சாக்கிய சேனா என்று சாக்கிய சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக நூலில் மட்டும் ஒரு நூறு பேர் தங்கள் பெயரில்  சாக்கிய  என்று வைத்து உள்ளனர். தலித் என்பது இழந்த  நமது சாக்கிய அடையாளத்தை மீட்கும் வழி.  முழுமையாக சாக்கிய அடையாளம் உலகம் முழுக்க உள்ள சாக்கிய பறையர் குடிகளை சென்று அடையும் வரை நாம் தலித் எனும் அடையாள சொல்லை நமது ஒருங்கிணைப்புக்கு பயன் படுத்துவோம். தலித் என்றால் ஒடுக்கப்பட்ட என்று அர்த்தம் இல்லை தலித் என்றால் சாக்கிய ஒருகிணைப்பு என்று அர்த்தம் என்று மக்களுக்கு சொல்லுவோம். உலகம் முழுக்க உள்ள சாக்கிய குடிகளின் ஒற்றுமையை ஒருங்கிணைப்பை உடைக்க நினைக்கும் ஜாதி வெறி கூட்டத்தின் தோலை உரிப்போம்.

No comments:

Post a Comment