Thursday, April 18, 2013
1950 இல் போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கர் இலங்கை சென்று சாக்கிய - தலித் குடிகளை இந்து மதத்திலிருந்து வெளியேறி புத்தத்தில் இருந்து சேருங்கள் என்று கட்டளையிட்டார். அவர் வார்த்தையை மதித்து ஆயிரம் ஆயிரமாக சாக்கிய - தலித் மக்கள் புத்தத்துக்கு மாறினார். அதை பொறுக்க முதியமல் இந்துக்கள் உருவாக்கியதே தமிழ் தேசியம். தற்போது தமிழ் தேசியம் இலங்கையில் மண்ணை கவ்விக்கொண்டது. அறுபது ஆண்டுகள் கழித்து மீண்டும் போதிசத்துவர் வழியில் சாக்கிய தலித் மக்கள் புத்தம் தழுவும் நாள் நெருங்கியுள்ளது. இதோ போதிசத்துவர் சிலையாக இலங்கை செல்கிறார். ஆயிரம் ஆயிரம் சாக்கிய - தலித் மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்ப போதிசத்துவர் சாக்கிய சிம்ம ரூபம் எடுக்கிறார்.
நான்! நான்! என்ற மகா மந்திரத்தை சொல்லிக் கொண்டிருப்பவன் தன்னை உணர்ந்து சகலமும் அறியும் ஞானியாகி தலைவனைக் காண்பதுபோல் நான்! நான்! என்று எவன் ஒருவன் தன்னையும் தன் இனத்தையும் மறுக்காமல் அச்சமும் நாணமும் இல்லாமல் உண்மை பேசித் தன் சுதந்திரத்தைப் பாராட்டுகின்றானோ அவன் மதிக்கப்பெற்று இல்வாழ்க்கையில் இன்பமுள்ளவனாய், நித்திய சமாதானத்துடன் வாழ்வானாகையால் ‘பறையர்’ இனத்தாருக்கு ‘பறையன்’ என்பவன் ‘நான் தான்’ என்று முன் வந்தாலொழிய அவன் சுதந்திரம் பாராட்ட முடியாமல் தாழ்த்தப்பட்டு என்றும் தரித்திரனாய் இருப்பான். எனவேதான் நான் ‘பறையன்’ எனும் மகுடம் சூட்டி ஒரு பத்திரிக்கையை ஆரம்பித்தேன் - தாத்தா இரட்டைமலை சீனிவாசனார்
கருணா யார் முன்பு எங்க இருந்தார் இப்பா எங்க இருக்கார்? அவர் ஏன்னா avar enna saathi?? ipo solu un kulam pathi?
ஒருவன் பிறப்பு அவன் குலத்தை நிர்ணயிப்பது இல்லை. அவன் செயலே அவன் குலத்தை நிர்ணயிக்கிறது. குற்றவாளிகள் பிறப்பது இல்லை. அவர்கள் செயல்களே ஒருவரை குற்றவாளி ஆக்குகிறது. கருணா மட்டும் இல்லை தீவிரவாதம் செய்த பலர் அதில் இருந்து வெளியேறி நல்லவர்களாக மாறுவது உலகம் முழுக்க நடக்கிறது. அப்படி மாற நினைக்கிறவர்களை வரவேற்க வேண்டும். பிரபாகரனுக்கு கூட பல முறை திருந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
#Viduthalai Murasu : நல்ல தாய்க்கு பிறந்தவனா நீ?#
சகோதரா என் தாயும் உன் தாயும் எனக்கு ஒன்றுதான். எதுக்கு பொது இடத்தில் வந்து உங்கள் தாயை இழிவு படுத்துகிறீர்கள். இதுதான் முப்பது ஆண்டுகள் திருமா சாதித்த சாதனை ஒழுக்கம் அற்ற ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு புலி தேசிய அரசியல் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்புறம் ராமதாஸ் மாதிரி ஆட்கள் காரித்தான் துப்புவார்கள். உண்மையான பவுத்தன் போதுசத்துவர் அம்பேத்கர் வழி நடப்பவர் மற்றவர் தாயை இழிவு படுத்தத மாட்டார்கள்.
Wednesday, April 17, 2013
#விடுதலைபுலிகளை வீழ்த்திவிட்டோம் என்று கொக்கரிக்கும் வீணர்களே இதோ பாலசந்திரன் உருவாக்கியிருக்கும் புலிகளை பாருங்கள் .....விழுந்த பலிகளை கணக்கெடுக்கிறார்கள் பழி தீர்ப்பதற்கு .....#
சமூகத்தில் பழி உணர்வை விதைக்கும் செயல் தடுக்கப்பட வேண்டும். தன் வீட்டு பிள்ளைகளை காண்வென்டில் படிக்க வைத்து வீட்டு டாக்டர் சீட்டுக்கும் இஞ்சினியர் சீட்டுக்கும் பிக்சட் டெபாசிட்டில் பணத்தை போட்டு வைத்து விட்டு அடுத்த வீட்டு குழந்தைக்கு கழுத்தில் குப்பியை கொடுப்பவர்கள்தான் இந்த தமிழ் தேசிய மனநோய் வியாதிகள். ஜாக்கிரதை தோழர்களே. ஒரு குழந்தை கூட சயனைடு குப்பியை கழுத்தில் கட்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
#அண்ணன் திருமாவின் வளர்ச்சியை பார்த்து நீங்கள் வயிறு எறிகிறீர்கள்.#
அவர் வளர்ச்சியை பார்த்து வயிறு எரியல. புத்தர், வள்ளுவர், பண்டிதர், தாத்தா, போதிசத்துவர் என்று மானுடம் காத்த பண்பாட்டு நாயகர்கள் பிறந்த குடியில் பிறந்து விட்டு தமிழ் தேசிய தீவிரவாத கும்பலுக்கு ஜால்ராவா இருக்கிறாரே என்று பரிதாபப்படுகிறேன். அவர் ஜால்ராவா இருப்பது மட்டும் இல்லாமல். நமது சொந்தங்களை எல்லாம் புலி தேசிய சாக்கடையில் கொண்டுபோய் தள்ளுகிறாரே என்று வயிறு எரிகிறேன். அடுத்த தலைமுறை எப்படி இருக்குமோ என்று உள்ளம் குமுறிக்கொண்டு இருக்கிறேன். போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கர் நம்மை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறார். நல்வழி படுத்திக்கொண்டு இருக்கிறார். ஒழுக்கம் பண்பாடு அறிவு திறமை கல்வி பெயர் புகழ் பதவி மன நிம்மதி மன அமைதி சந்தோசம் என்று நமக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளார். கொடுத்துக்கொண்டு இருக்கிறார். அதை நம் சொந்தங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று நான் ஒவ்வொரு நாளும் நினைக்கிறேன். அதற்க்கு பாதகம் வைக்கும் ஒரு நிலைப்பாடுதான் புலி பெருமை. துப்பாக்கி தூக்கியவனை கஞ்சா கடத்தியவனை கொண்டு வந்து நமது பிள்ளைகளின் கையில் கொடுத்தால் நாளைய நம் சமூகம் என்னவாகும் என்று மனம் பதறுகிறது. இந்த 30 ஆண்டுகள் அவர் ஒரு கூட்டத்தை உருவாக்கியுள்ளார். ஒழுக்கம் அற்ற ஒரு கூட்டம் தண்ணி அடித்து விட்டு பேரணிக்கு வரும் கூட்டம். போதையில் தலைகால் தெரியாமல் பிரபாகரன் படத்தை தலை கீழாக மார்பில் குத்திக்கொண்டு விசில் அடிக்கும் கூட்டம். போதிசத்துவர் பிறந்தநாள் அன்று மணிமண்டபத்துக்கு பேரணி வந்த மக்களுடைய வீடியோ படத்தையும் மயிலாப்ப்பூர் போன விசிலடிச்சான் குஞ்சிகளின் பேரணி பற்றிய வீடியோவையும் போட்டு பாருங்கள். உங்களுக்கு வித்தியாசம் தெரியும். தலைவன் என்பவன் கூட்டம் எதுக்கு விசிலடிக்கும் என்று யோசித்து பேசக்கூடாது. கூட்டம் எதை பேசினால் சிந்திக்கும் என்று யோசித்து பேச வேண்டும். இந்த 20 ஆண்டுகள் அவர் தனது தொண்டர்களை ஒழுங்கு படுத்த கண்ணியமாக பண்புள்ளவர்களாக மாற்ற என்ன செய்தார். போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கரின் பாதையில் பண்பானவர்களாக போய்க்கொண்டு இருந்தவர்களை புலி அரசியல் பேசி ஒழுக்கம் அற்றவர்களாக வன்முறை தீவிரவாதம் கொலை கொள்ளை கஞ்சாகடத்தல் எல்லாவற்றையும் சரி என்று நியாயப்படுத்தும் அயோக்கியர்களாக மாற்றி வைத்துள்ளார். சீமானோ நெடுமாறனோ வைக்கோவோ, பிரபாகரனோ நேரடியாக சேரிக்கு வந்து செய்ய முடியாததை இவர் செய்து கொண்டு இருக்கிறார். சமூக அக்கறை கொண்ட சான்றோர்கள் அறிவுவழி பாதையில் போகும் பெரியோர்கள் எல்லோரும் இந்த கொடிய செயலை கண்டித்து மக்களை திருமாவின் புலி அரசியலில் இருந்து காக்க வேண்டும் என்றுதான் கோரிக்கை வைக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)