Saturday, January 12, 2013
சூரிய பகவானுக்கு, வயல் வெளிக்கு, நெற் பயிர்க்கு, ஆத்து தண்ணிக்கு, காளை மாட்டுக்கு, புல் பூண்டுக்கு, உழவுக்கு பயன்படும் அத்தனை கருவிகளுக்கும் நன்றி சொல்லி "பொங்கலோ பொங்கல்" என்று கொண்டாடும் தமிழர் பண்பாடு. ஆனால் அந்த சூரியனை விட வயல் வெளி, நெல், புல் பூண்டு, காளை மாட்டை விட இவர்கள் வாழ்வியலுக்கு உழைத்து உழைத்து தேயும் தலித் மக்களுக்கு மட்டும் வாயில் மலத்தை ஊட்டுவான். வாருங்கள் கொண்டாடுவோம் தமிழர் திருநாள்.
சாக்கிய (தலித்) மக்களுக்கு எதுவும் செய்யாத ஒருத்தருக்கு அண்ணல் அம்பேத்கரின் பெயரில் விருது கொடுத்து அண்ணல் அம்பேத்கரை ஒரு பொது தலைவரா காட்ட ஜெயலலிதா முயற்சி பண்ணி இருக்காங்களோ. காந்தி ராமசாமி நேரு அண்ணா இவுங்க பேர்ல அரசு விருது கொடுத்தா யாரும் அவர்கள் சாக்கிய (தலித்) மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று கேட்பது இல்லை. ஆனால், அண்ணல் அம்பேத்கரின் பெயரில் கொடுத்தால் மட்டும் ஏன் அப்படி ஒரு கேள்வி. எனக்கு புரிகிறது அண்ணல் அம்பேத்கர் சாக்கிய சமூகத்தின் அடையாளம் என்பது ஆனால் சிலர் அவரை நாம் சாக்கிய சமூக விடுதளையின் சின்னமாக அடையாளப்படுத்துவதை தவறு என்கின்றனரே அவர்களை தான் கேட்கிறேன் இந்த கேள்வி....
ஜனவரி முதல் தேதி புத்தாண்டு வாழ்த்து சொன்னா ஒரு பக்கம் ஹிந்துத்துவா குதறல் இன்னும் ஒரு பக்கம் தமிழ் தேசிய குதறல். அது இந்துக்களின் புத்தாண்டு இல்லை என்று ஹிந்துத்துவமும் அது தமிழர்கள் புத்தண்டு இல்லை என்று தமிழ் தேசியமும் எப்புடி ஒத்துமையா குரல் கொடுத்தாங்க பாருங்க. அன்னைக்கு புத்தாண்டு சொன்னவங்க எல்லாம் ஆங்கிலேயருக்கு அடி வருடிகலாம். நாளைக்கு தை ஒன்னு புத்தாண்டு எவண்டா கண்டு புடிச்சான் இது தமிழர் புத்தாண்டுன்னு.
படைப்புக்கடவுள் உண்டா இல்லையா என்ற கேள்விக்கு முடிவு வர இயலாது என்பது மட்டும் அல்ல, தேவையற்றதும் கூட என்று எண்ணி அப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டு வாதிடாமல், பேசாமல் இருந்து விடுவது நல்லது என்று (பண்டிதர் அயோத்திதாசர்) கூறுகிறார். எனவே நன்னெறிகளை பரப்பிய நன்னெறியாளர்களைப் பின்பற்றிப் பயனடைவதே சிறப்பு என்பதே பண்டிதர் அயோத்திதாசர் கருத்தாகும். அத்தகை நன்நெறியை அருளிய புத்தரையே அவர் பின்பற்றினார். (பண்டிதர் அயோத்திதாசர் பின்பற்றிய பகுத்தறிவு பற்றி தம்ம நெறியாளர் அன்பு பொன்னோவியம்)
ஆங்கு, அவள்-தன்னுடன் அணி மணி அரங்கம்
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஏறி:
திரு நிலைச் சேவடிச் சிலம்பு வாய்புலம்பவும்,
பரிதரு செங் கையில் படு பறை ஆர்ப்பவும்,
செங் கண் ஆயிரம் திருக் குறிப்பு அருளவும்,
செஞ் சடை சென்று திசைமுகம் அலம்பவும்;
பாடகம் பதையாது, சூடகம் துளங்காது,
மேகலை ஒலியாது, மென் முலை அசையாது,
வார் குழை ஆடாது, மணிக்குழல் அவிழாது,
உமையவள் ஒரு திறன் ஆக, ஓங்கிய
இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்
பாத்து-அரு நால் வகை மறையோர் பறையூர்க்
கூத்தச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து; அவன்
ஏத்தி நீங்க- இரு நிலம் ஆள்வோன் (சிலப்பதிகாரம்)
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஏறி:
திரு நிலைச் சேவடிச் சிலம்பு வாய்புலம்பவும்,
பரிதரு செங் கையில் படு பறை ஆர்ப்பவும்,
செங் கண் ஆயிரம் திருக் குறிப்பு அருளவும்,
செஞ் சடை சென்று திசைமுகம் அலம்பவும்;
பாடகம் பதையாது, சூடகம் துளங்காது,
மேகலை ஒலியாது, மென் முலை அசையாது,
வார் குழை ஆடாது, மணிக்குழல் அவிழாது,
உமையவள் ஒரு திறன் ஆக, ஓங்கிய
இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்
பாத்து-அரு நால் வகை மறையோர் பறையூர்க்
கூத்தச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து; அவன்
ஏத்தி நீங்க- இரு நிலம் ஆள்வோன் (சிலப்பதிகாரம்)
Subscribe to:
Posts (Atom)