Thursday, May 30, 2013

#பறையர் என்றால் இந்து மத வரையறைக்குள் வரவில்லை என்பது எனக்கு வியப்பான ஒன்றுதான் நண்பரே!! ஏனென்றால் இந்த மனுதர்மவான்கள் புத்தனையே இந்துக்கடவுள்களின் ஒரு அவதாரம் ஆக்கி எவ்வளவோ நாட்களாகிவிட்டது.#

புத்தர் இந்து அவதாரம் என்பது உண்மை எனில் பறையர்கள் இந்துக்கள் என்பதும் உண்மை. புத்தர் இந்து அவதாரம் என்பது பொய் என்றால் பறையர்கள் இந்துக்கள் என்பதும் பொய். உங்கள் நம்பிக்கை என்ன என்று சொன்னால் நல்லது. எங்களை பொறுத்தவரை புத்தர் இந்து அவதாரம் இல்லை. அப்படி சொல்லுவது புத்த மதத்திற்கு எதிரான கருத்து. அது போல புத்தரின் வழியில் வாழ்ந்த பறையர்களை (பூர்வ பவுத்தர்களை)  இந்து என்று சொல்வது புத்த மதத்திற்கு எதிரானது. மீண்டும் மீண்டும் புத்தரை இந்து அவதாரம் என்று சொல்வதை எதிர்த்து அது உண்மை இல்லை என்பதை உலகுக்கு எடுத்து சொல்வது எவ்வளவு முக்கியமோ அது போல பூர்வ பவுத்தர்களான பறையர்களை ஜாதிக்கு அப்பார்ப்பட்டவர்கள் எனும் உண்மையை உலகுக்கு எடுத்து சொல்வது முக்கியம்.   

Wednesday, May 29, 2013

பறையர்ணா சாதியாமே. ஆதி குடிகள் ஜாதியா இல்லையான்னு யார் முடிவு பண்ணறது. கொஞ்ச நாளைக்கு முன்ன பழங்குடி மக்களை எல்லாம் இந்துக்களாக மாற்ற இந்து அமைப்புக்கள் ஒரு பூஜை நடத்தினார்கள். அப்படி ஏதாவது பூஜை நடத்தி எங்களை யார் இந்துக்களா ஜாதியா மாத்தியது. நாங்கள் சூத்திரர்களா? ஷத்திரியர்களா? எங்களை ஜாதி என்று சொல்லும் திராவிட சிகாமணிகள் என்ன தனியா சங்கர மடம் வைத்து நடத்துராங்களா? இல்லை ஆரிய சாமாஜம் மாதிரி திராவிட சமாஜம் வைத்து நடத்துராங்களா?

சமூக அடையலம்னா? சமூக அடையாளம் அப்புறம் எதுக்கு அதுக்கு ஜாதின்னு  பேரு வைக்கிறீங்க ஜாதிகள் உருவாகும் முன்னரே பறையர் எனும் சமூகம் இருந்தது வரலாறு. ஆதி குடி சமூகம் / பழங்குடி சமூகம்.   

 #பூர்வகுடி தமிழர்கள் என்று சொல்லியே தமிழன் என்ற இனவுணர்வோட இருக்கலாமே....#

எதுக்கு எனக்கு தமிழன் எனும் இன உணர்வு. ஆண்டைகள்  செத்தா பறை அடிக்கவா குழி வெட்டவா பிணம் எரிக்கவா? எதுக்கு எனக்கு தமிழன் எனும் இன உணர்வு. 

பறையர் பூர்வ குடிதான் அதில் எந்த கேள்வியும் இல்லை. அது வரலாறு. தமிழன் பூர்வ குடியா? அப்புறம் எதுக்கு எனக்கு தமிழன் பட்டம். 
#முதல்ல இந்தியாவை ஒத்தை நாடாக்குங்க...இந்தியா என்னைக்கு ஒத்தை நாடாக இருந்தது...இது வெறும் சந்தை மட்டும்தானே.#

முதல்ல தமிழ் நாட்டை ஒத்த நாடா ஆக்குங்க அப்புறம் இந்தியாவை ஒத்த நாடாக்குவோம். இந்தியா சந்தை தமிழ் நாடு இன்னும் ஜாதி சாக்கடையாத்தானே இருக்கு. 


#தமிழ் நாடு ஜாதிகளின் பட்டியலின் பெயரில் பறையன் என்பது ஜாதியாக குறிப்பிட படவில்லையா?#

தமிழ் நாடு அரசு எங்களை எதுக்கு ஜாதி பட்டியலில் வைத்து உள்ளது. வரலாறு தெரியாத அரசு. நாங்கள் ஆதிக்குடிகள். பழங்குடிகள், எங்களை பழங்குடியினர் பட்டியலில் வைக்க சொல்லுங்க. 


#அப்படியே அது ஜாதியாக இல்லை என்றால் ஆண்ட பரம்பரை என்று சொல்பவருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்.#

ஆண்ட பரம்பரை (ஷத்திரியர்) நான்கு வருண முறையில்  இரண்டாம்  நிலையில் உள்ளது. சூத்திர ஜாதிகள் எல்லாம் தங்களை ஆண்ட பரம்பரை (ஷத்திரியர்) என்று சொல்லிக்கொண்டு வருணத்தில் நான்காம் நிலையில் இருந்து இரண்டாம் நிலைக்கு போக நினைப்பதை சமஸ்கிருதமயமாக்கல் என்று சமூக அறிவியளார் சொல்கிறார்கள். நாங்கள் அதுபோல வருணத்திற்கு உள்ளே போக நினைக்க வில்லை. வருணத்துக்கு வெளியே உள்ளவர்கள் ஜாதி அற்றவர்கள் என்று சொல்கிறோம். எங்கள் மூதாதையர் புத்த தம்மிகள் ஜாதி அற்றவர்கள் என்கிறோம். இதை பாலிமயமாக்கள் என்கிறார் பேராசிரியர் எளினார் ஜெளியாட் (அன்டச்சபல் டு தலித் எனும் புத்தகத்தில்)

#இதற்கு நீங்கள் வர்க்க பேதனை உருவாக்குகிறீர் என்று சொல்லலாமா?#

நான் எப்படி வர்க்க பேதம் உருவாக்குகிறேன் என்று சொன்னால் விரிவாக பேசலாம். 


#மதமும், கடவுளும், வர்க்கங்களும், சாதிகளும் உள்ள வரை மக்களில் வேற்றுமை என்பது இருக்காதா?# 

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே உலக நியதி. வேற்றுமை இல்லாமல் எல்லாவற்றியும் ஒரே பெட்டிக்குள் அடைக்க நினைப்பது ஆதிக்க அரசியல். 

#இதை புத்தன் சொல்லவில்லையா? இல்லை அண்ணல் அம்பேத்கார் சொல்லவில்லையா?#

எதை சொல்லவில்லை என்று சொன்னால் மேலும் விரிவாக பேசலாம். 


#பறையன் என்று சொல்வதால் உங்களிலின் நிலைப்பாடு என்ன?#

என் சமூகம். என் சமூகத்தின் உரிமை. என் அடையாளம். என் சமூகத்தை காக்க என் சமூகத்துக்கு பனி செய்வது எனது கடமை. என்னை வாழ வைக்கும் சமூகம். அதற்க்கு என் கடமையை நான் ஆற்ற வேண்டும். என் சமூக முன்னோர்கள் போட்ட பிச்சைதான் இன்று நான் அனுபவிக்கும் உரிமைகள் பெருமைகள். தேங்க்ஸ் ஹெவன் மற்றவர்கள் கண்களுக்கு நாங்கள் தீண்டத்தகதவர்களாக இருந்தோம் இருக்கிறோம். 

#பொது புத்தியின்படி பறையன் என்றால் ஜாதி தானே இதை மாற்ற நீங்கள் என்ன செய்தீர்?#

ஜாதி இந்துக்களில் ஆதிக்க ஜாதிகளின் அதிகார வர்க்கத்தின் புத்தி பொது புத்தி என்றால் அதை மற்றும் எதிர்க்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். 
 
#உங்களின் கருத்துக்களை படிப்பவர்கள் யாவரும் ஜாதிய அடிப்படையில் உங்களை எண்ணவில்லை என்கிறிரா?#

என் கருத்துக்களை படிப்பவர்கள் என்னை ஜாதியவாதி என்று நினைத்தால் அது என் தவறு இல்லை. படிப்பவர்கள் அணிந்திருக்கும் கண்ணாடி. பறையன் என்று மார் தட்டுவது ஜாதி இல்லை. பறையன் என்று சொல்ல வெட்கப்பட்டு ஓடி ஒதுங்குவது. நான் தமிழன்  நான் திராவிடன் என்று அடையாளத்தை மறைத்து அடங்கி கிடப்பதே ஜாதிய அடிமை மனோ நிலை. 

#தமிழ் நாட்டில் இருக்கின்ற பெரும் பகுதியான மக்கள், ஏன் தெற்கு ஆசியாவில் இருக்கின்ற பெரும் பகுதியான மக்கள் புத்தத்தை பின் பற்றியவர்கள் தானே? உண்மையாக நீங்கள் புத்தத்தை பின்பற்றுபவராக இருந்தால் இதை உணர்த்த நீங்கள் என்ன செய்தீர்?#

உண்மைதான் ஒரு காலத்தில் ஆசியா முழுக்க அனைத்து மக்களும் புத்த தம்மத்தை பின் பற்றும் மக்களாகத்தான் இருந்தார்கள். ஆனால் பார்பனிய அலை அடித்தபோது இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் தங்களை பார்பனர்கள், ஷத்திரியர்கள், வைசியர்கள், சூதிரர்கள் என்று சொல்லிக்கொண்டு இந்துவாகி போனார்கள். சாக்கியர்கள் மட்டும் தங்களது நிலையில் இருந்து மாறாமல் இருந்தார்கள். வருணத்தை ஏற்காமல் சாதியத்தை ஏற்காமல் இருந்தார்கள். அவர்கள் தான் பறையர்கள் அவர்கள் தான் சேரி வாழ்  மக்கள். இந்த உண்மை வரலாற்றை அறிந்து சொன்னவர்கள்தான் பண்டிதரும் பாபாசாகேப்பும்.  இதை உணர்ந்ததால் தான் எமது மக்களுக்கு உண்மை வரலாற்றை எடுத்து சொல்லிக்கொண்டு  இருக்கிறேன். 
இந்தியாவில் உள்ள அனைத்து ஏன்ஷியெண்ட் நகரங்களையும் வடிவமைத்தவர்கள் பூர்வீக சாக்கிய குடிகளே. அஸ்தினாபுரம் அதில் ஒன்று. ஆனா மகாபாரதத்தில்  சொல்லப்பட்ட அஸ்தினாபுரம் டூப்ளிகேட் அஸ்தினாபுரம். அதை யாரும் வடிவமைக்கவில்லை  அது கற்பனை அஸ்தினாபுரம் நாம கட்டினதா புருடா விட்டு அவன் கற்பனை கதையை நம்மை நம்ப வைக்க விட்ட புருடா அது. சாக்கிய மவுரிய களபறையர்கள் கட்டிய நகரங்களுக்கு ஆயிரம் ஆயிரம் ஆதாரங்கள் உண்டு. அதை மட்டும் பேசுவோம் கற்பனை கதைகளை படித்து என்ஜாய் பண்ணுவோம். .  
சாக்கிய பறையனார் என்று கலப்பரையர் கால செங்கம் கல் வெட்டில் உள்ளது. அது பற்றி ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்கலை கழகங்களில் ஆய்வு நடக்குது. நாங்க சோம்பேறிகள் இல்லை நைனா நாங்க சோம்பேறிகளா இருந்தா தமிழ் மட்டுமே என்று சேரிகளில் உக்காந்து இருப்போம். நாங்க சோம்பேறி இல்லை என்பதால் தான் இங்கிலீசு இந்தி மராத்தி பாலி ன்னு எங்கள் கலை அகல விரிக்கிறோம். 

#ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாய் சாதி சாதி என்று சொல்லப்பட்ட ஒன்று இன்று சாதியே இல்லை என்றளவில் மாறி விட்டதென்றால் வாழ்க பெரியார்!#

ஹாஹாஹா. என்ன திடீர்னு பெரியார். ஆயிரம் ஆண்டுகள் பறையர் ஜாதின்னு யார் சொன்னது. இந்து மத சாஸ்திரம் கூட எங்களை ஜாதிக்கு வெளியே என்றுதான் சொல்கிறது. மனு கூட அவர் சாஸ்திரத்தில் எங்களை வர்ணம் (ஜாதி) அற்றவர்கள் என்றே சொல்கிறார். நீங்களும் உங்கள் ராமசாமி கூட்டமும்தான் பறையன்னு சொல்லாதே பறையன் என்றால் ஜாதின்னு சொல்லிக்கொண்டு திரிகிறீர்கள். 


இந்து இல்லாத எனக்கு இந்து பட்டம் கட்டுவது ஜாதி இல்லாத எனக்கு ஜாதி பட்டம் கட்டுவது சூத்திரன் இல்லாத   எனக்கு சூத்திர பட்டம் கட்டுவது இதெல்லாம் யார் என்றால் சூத்திர ராமசாமி கூட்டம். நீ இந்து இல்லை நீ சூத்திரன் இல்லை உனக்கு ஜாதி இல்லை வருணம் இல்லை என் கோயிலுக்கு உள்ளே வரதே என்கிறான் பார்ப்பணிய இந்து. அவனும் இந்துதான் அவனை கோயிலுக்கு உள்ளே விடு என்கிறான் நாத்திக ராமசாமி இந்து. அந்த நாத்தம் பிடிச்ச இந்து கோயிலுக்கு உள்ளே போகணும்னு நான்கேட்டேனா? உனக்குத்தான் கடவுள்  நம்பிக்கையே இல்லை.  மதமே வேண்டாம்னு சொல்றே  அதுக்கு அப்புறம் என்னை எதுக்கு கொண்டு போய் இந்து சாக்கடையில் தள்ளுகிறாய். எனக்கு எதுக்கு இந்து பட்டம் சூத்திர பட்டம் ஜாதி பட்டம் கட்டுகிறாய்.  


களப்பிரர் இல்லை களபரியார் (களபறையர்) 
#அண்ணன் வணக்கம் நீங்கதான் பறையர் என்ற வார்த்தைக்கு பாரியார் என்ற வார்த்தையிலிருந்து வந்ததுன்னு சொல்லிடிங்க.பறையர் என்ற வார்த்தையோ தமிழை தழுவி இருக்கும் ஒரு வார்த்தை அதனால் அதை எதற்காக நீங்கள் தஊக்கிபிடிக்கிரீர்கள்.உங்களுக்குத்தான் தமிழை பிடிக்காதே.தாழ்மயுடன் கேட்பது பறையர் என்ற தமிழ் வார்த்தையை தூக்கிபிடிப்பது எதற்காக அண்ணன்.#

பறையர் என்பது தமிழ் வார்த்தை என்று யார் சொன்னது. தமிழில் "ஐ" :ற" என்பதெல்லாம் பின்னால் சேர்க்கப்பட்ட எழுத்துக்கள். அது எப்படி தமிழ் ஆகும். பறையர் எனும் பறையர்களின் வார்த்தை ப அய்யா (பரி அய்யா/ உன்னதமானவர்கள் / புனிதமானவர்கள் / உயர்ந்தவர்கள் / தம்மத்தை பின்பற்றுபவர்கள்) எனும் பாலி வர்தையில் இருந்து வந்தது. பாலி வார்த்தையில் இருந்து வந்த வார்த்தை பாலி வார்தையாகத்தானே இருக்கும். அது எப்படி தமிழ் வார்த்தை ஆனது.

நாம ஒன்னு சொன்னா ஆயிரம் கேள்வி கேப்பாங்க? நாம ஒன்னு எழுதுனா ஆயிரம் ஆதாரம் கேப்பாங்க. இந்த லெமூரியா, சங்க காலம் இதுக்கு எல்லாம் எதவது ஆதாரம் இருக்குதன்னா/ மூச்சு விட மாட்டாங்க. 

மத்திய இந்தியாவில் உள்ள முண்டா இன மக்களை பற்றியும் அவர்களது மொழி பற்றியும் நிறைய ஆராய்ச்சிகள செய்யப்பட்டு உள்ளன. அது போல மௌரியர் பற்றியும் மவ்ரியர் எனும் வார்த்தையின் மூலம் பற்றியும் நிறைய ஆராய்ச்சிகள் நடந்து உள்ளன. அவற்றை படித்து நான் சொன்னதின் விளக்கங்களை தெரிந்து கொள்ளவும். 

Tuesday, May 28, 2013

பறையர் என்பது ஜாதி அல்ல ஜாதி எதிர்ப்பின் அடையாளம். ஜாதி என்பது என்ன ஜாதி எனும் சிறை எவ்வளவு கொடியது என்பது எங்களுக்கு தெரியும். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு உங்கள் பெயர் இந்து பெயர். அது போல வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு எனது பெயர் ஜாதி பெயர். "ஜாதி" "மதம்" என்பது பெயரில் இல்லை. மனதில் உள்ளது. பறையன் என்று ஒருவன் சொல்ல தயங்குவது ஜாதி. பறையன் என்று நெஞ்சை நிமிற்துவது ஜாதி எதிர்ப்புக்கான அடையாளம். நான் பறையன் என்று நெஞ்சை நிமிற்தும்போது  எனக்கு மேல் எவனும் இல்லை என்ற எண்ணம் வருகிறது. எனக்கு மேல் எவனும் இல்லை எனும்போது எனக்கு கீழ் எவனும் இல்லை. எனக்கு மேலேயும் எனக்கு கீழேயும் எவனும் இல்லை எனும் எண்ணம் வரும்போது மட்டுமே சாதி ஒழிகிறது. பறையர்களை ஒழிப்பது பறையர்களின் ஒற்றுமையை ஒழிப்பது பறையர்களின் விடுதலை உணர்வை ஒழிப்பது பறையர்களின் கூட்டமைப்பது ஒழிப்பது பறையர்களின் சங்கங்களை ஒழிப்பது ஜாதி ஒழிப்பு இல்லை ஜாதி திமிர். இதை பறையர் சமூகத்தில் பிறந்து விட்டு ஒருவர்  தன்னை பறையர்  என்று சொல்ல மறுக்கிறார்  அல்லது தயங்குகிறார்  என்றால் அது அவர் மனதில் இருக்கும் கீழ்ஜாதி மனோ நிலை. 


#நீங்கள் பறையன் என்பதை ஜாதி என்று கருதாது மகிழ்ச்சிதான். பள்ளர் கள்ளர் தேவர் வன்னியர் நாடார் முதலியார் ரெட்டி இவர்களை எப்படி கருதுகிறீர்கள். அல்லது எப்படி கருத வேண்டும் என்று உங்கள் குடும்பத்தவர்க்கோ நண்பர்களுக்கோ சொல்ல விரும்பகிறீர்கள்?#

பள்ளர் கள்ளர் தேவர் வன்னியர் நாடார் முதலியார் ரெட்டி இவர்கள் எல்லோரும் பறையர்களை போன்ற இனக்குழுக்கள். அவர்கள் தங்களை ஷத்திரியர்கள் சூத்திரர்கள்  என்று சொல்லிக்கொண்டு, நான் அவரை விட உயர்ந்தவன் இவரை விட தாழ்ந்தவன் என்று பட்டம் கட்டிக்கொளும்போது ஜாதிகளாக மாறுகிறார்கள். இவர்கள் ஒருவருக்கு அடங்கி போவதும் மற்றவரை அடிமை படுத்த நினைப்பதும் இவர்களை ஜாதி என்று நிர்ணயிக்கிறது. பறையர் எவரும் நாங்க ஆண்ட ஜாதி மீதியெல்லாம பேன்ட ஜாதி என்று சொல்லிக்கொண்டு திரியவில்லை. அப்படி ஒருவர் சொல்கிறார் எனில் அவர் ஜாதியத்தை தூக்கி பிடிக்கிறார் என்று அர்த்தம். "நான் பறையர் சக்கிலியர் எங்களை விட தாழ்ந்தவர்" என்று எந்த பறையராவது சொல்கிறார் எனில் அவர் ஜாதியத்தை 
தூக்கி பிடிக்கிறார் என்று பொருள். சக்கிலியர் எம்மை விட தாழ்ந்தவர் என்று அவர் நினைக்கும்போது  அவரின் தலைக்கு மேலே ஆயிரம் ஜாதிகள் உள்ளது என்று அவர் ஏற்றுக்கொள்கிறார். பறையர் என்பது ஜாதி இல்லை. நாம் பறையர். எமக்கு மேல்  எவரும் இல்லை எமக்கு கீழ் எவரும் இல்லை என்பதே ஜாதி ஒழிப்பின் மந்திரம். நீங்கள் மேலே சொன்ன அனைத்து சமூகங்களும் ஒருவரை ஒருவர் சமமாக நினைக்கும் போது ஜாதி ஒழிகிறது. அப்படி ஜாதி ஒழியும்போது மட்டுமே இந்த சமூகங்கள் ஒன்றோடு ஒன்று கலக்கும். இந்த சமூகங்களுக்கு இடையே கலப்பு திருமணங்கள் நடக்கும். ஜாதியை ஒழிக்காமல் கலப்பு திருமணம் என்பது சேரியை ஏமாற்றும் வேலை. ஜாதி ஒழிய வேண்டும் எனில் சாதியத்தை தூக்கி பிடிக்கும் சாஸ்திர சம்பரதாயங்கள் ஒழிய வேண்டும். நான் ஆண்ட பரம்பரை பேன்ட பரம்பரை எனும் நம்பிக்கைகள் ஒழிய வேண்டும் இந்து மதம் ஒழிய வேண்டும். புத்தன் காட்டிய மானுட  தம்மம் அறம் அன்பு கருணை மக்களின் மனதில் பெருக வேண்டும். நான் பறையராக இருப்பதால் மற்ற சமுகங்களை வெறுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் சமூகமும் வாழ வேண்டும் அவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எனது குறிக்கோள். நான் பறையன் என்று சொல்லுவதை நிறுத்திவிட்டால் ஜாதி ஒழிந்து விடும் என்பது முட்டாள் தனம். என் சமூகம் நான் பறையன் என்று சொல்ல பயந்த காலம் போய் இன்று நெஞ்சை நிமிர்த்தி நாம் பறையர்  என்று சொல்லும் காலம் வந்து உள்ளது. இதுதான் சமத்துவம் ஜாதி ஒழிப்பின் ஜாதி எதிர்ப்பின் அடையாளம். 

 
யார் வந்து என் சுவற்றில் நாய் மாதிரி மூத்திரம் பெய்வது என்பது படிக்கிறவர்களுக்கு தெரியும். மொழியை தாயாக்கி அதுக்கு பூஜை செய்து விட்டு தாயை எட்டி உதைக்கும் நாதாரி நாய்கள் நாங்கள் அல்ல


#yen nayakkar, iyyer lam tamil jathila serkanuma???#

இல்லை இல்லை மேலே சொன்ன ஜாதி அடியாளம்தான்  ஒருவன் தமிழனா தமிழன் இல்லையா என்று நிர்ணயிக்கிறது என்கிறேன்.