Monday, January 14, 2013
ஒரு பட்டவர்த்தனமான இந்து பண்டிகைக்கு மூக்கு முழி பகுத்தறிவு வெங்காயம்னு சொல்லி நம் மீது திணித்துக்கொண்டு இருக்கிறது இந்த திராவிட நாத்தீக கூட்டம். ஆணாதிக்கம், ஜாதியம், பண்ணையார்த்தனம், மதவாதம், இனவாதம், மொழிவாதம், அனைத்தும் கொண்ட இந்து "பொங்கல்" பண்டிகையை தமிழர் பண்டிகை எனும் பெயரில் இசுலாமியர், கிறிஸ்துவர், சாக்கியர் மீது திணிப்பதும் பாசிசமே.
Sunday, January 13, 2013
நமது பண்டிகை விடுதலை திருநாள் அப்போ நாம் வாழ்த்து சொல்லிக்குவோம்..........
ஜாதியம், ஆணாதிக்கம், பண்ணையார் தனம், சேரி மக்களின் வாயில் மலத்த திணிப்பது, வீடுகளை கொளுத்துவது, ஜல்லிக்கட்டு எனும் பெயரில் காளை மாட்டை கொடுமை படுத்துவது, கடா வெட்டி, சாராயம் காச்சி குலதெய்வ வழிபாடு, வெட்டருவாள், வேல் கம்பு, வீரம் எனும் பெயரில் ஆணாதிக்க முருக்கு மீசை, பட்டு பூச்சிகளை கொன்று கட்டும் பட்டு வேட்டி பட்டு புடவை, தாலி எனும் பெயரில் பெண்கள் கழுத்தில் கட்டும் மாட்டு கயிறு, அடிமைகளின் ரத்ததில் கட்டப்பட்ட ராஜ ராஜ சோழன் திருக்கோயில், கடத்தல் காரர்களுக்கு மாவீரர் தினம் இப்படி மனித நேயம் இல்லாத பண்புகளை எல்லாம் தமிழர் பண்பாட்டில் இருந்து நீக்கி விட்டால் புத்தர், பண்டிதர், அண்ணல் அம்பேத்கர் காட்டிய உண்மையான மானுட பண்பு உள்ளே வரும்.
அறுவடை செய்து கொள்ளை அடித்து வைத்துள்ள நெற்குவியல்களை கரும்பை கோதுமையை பார்த்து பார்த்து ஆனந்தம் கொண்டு சூத்திர தமிழ் திராவிட பண்ணையார்கள் கொண்டாடும் பண்டிகையே இந்த பொங்கல் பண்டிகை. நாம கால் படி நெல் அதிகம் கூலி கேட்டு கீழ்வெண்மணியில் தீக்கிரையானதுதான் மிச்சம். ஆண்டைகள் புத்தாடை பாட்டாடை உடுத்தி கொண்டாடும் இந்த கேவலமான பண்ணைத்தன பண்டிகை நமக்கு பண்டிகையா?
இழவு வீட்டுக்கு போனா எப்படி நடந்துக்கணும்னு ஓரு இங்கிதம் வேணும். அவரே வீட்டை பறி கொடுத்துட்டு அம்போன்னு உக்காந்து இருக்கார். அவர் கிட்ட போய் வாங்க ஆனந்தமா பொங்கல் கொண்டடுங்கன்னா எப்பிடி.
Subscribe to:
Posts (Atom)